சச்சின் தற்போது சமூகவலைதளங்களில் படு பிசியாகிவிட்டார் என்றே சொல்லலாம். அவ்வபோது சமூக கருத்துக்களை பகிர்வது, அறிவுரைகள் வழங்குவது என தனது சமூகவலைதளப் பக்கங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறார்.
இத்தனை வருடங்கள் கிரிக்கெட்தான் என்று இருந்தவர் தற்போது முழு கவனத்தையும் குடும்பத்தினருக்காக ஒதுக்கிவிட்டார். குறிப்பாக இந்த லாக்டவுன் சமயத்தில் அவருடைய வீடியோக்கள் பல வைரலாகப் பரவி வருகிறது. சமீபத்தில் கூட அவருடைய மகனுக்கு தலைமுடி வெட்டிய வீடியோ வைரலானது.
அதைத் தொடர்ந்து நேற்று இன்ஸ்டாகிராமில் மேங்கோ குல்ஃபி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதன் வீடியோ கேப்ஷனாக “ 25வது திருமண நாளுக்கு வீட்டில் இருப்போரை ஆச்சரியமூட்ட நான் மேங்கோ குல்ஃபி செய்துள்ளேன் “ என்று கூறியுள்ளார்.
இப்படி சச்சின் மட்டுமல்ல..பொதுவாகவே சின்ன சின்ன சந்தோஷங்களும் ஆச்சரியங்களும்தான் வாழ்க்கையை அழகாக்குகின்றன. அதுதான் உறவுகளை வலுபெறச் செய்கின்றன.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.