கேள்வி : ஓரல் செக்ஸில் உச்ச கட்டம் செல்வது பற்றி உங்கள் கருத்து என்ன..? அது 'deviant sex' (காம அத்துமீறலாக) இருக்குமா அல்லது சாதாரண மற்ற செக்ஸ் விஷயங்களைப் போன்றதா..? அதை பெண்கள் விரும்புவார்களா..? ஒரு பெண்ணிடம் அவளை நான் ஓரல் செக்ஸ் செய்ய எப்படி அனுமதி கேட்பது..? இவற்றிற்கு பதில் வேண்டும்..
பதில் : நான் ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன்..உங்களைப் பொருத்த வரை 'deviant sex' என்னும் வார்த்தைக்கான பொருள் என்ன..? காலம்காலமாக Deviance என்பது பாலியல் வன்கொடுமைக்கு , குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் சொல்லாகும். ஆனால் அதை சாதாரணமாக மற்ற செக்ஸுவல் விஷயங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அதாவது திருமணத்திற்கு முந்தைய செக்ஸ், செக்ஸ் கற்பனைகள், செக்ஸ் பல்வேறு நிலைகள், இப்படி பல கட்ட செக்ஸ் விஷயங்களுக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். 'deviant sex' என்னும் வார்த்தையே கிடையாது. அந்த வார்த்தை முற்றிலும் குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தக் கூடியது. அதற்கென ஒரு தனிப் பெயரை உருவாக்கி, புழக்கத்தில் அதை நடைமுறையாக்கிவிடாதீர்கள்.
வயது வந்த இருவர் செக்ஸ் செய்கிறீர்கள் எனில் அதில் அசிங்கமாக நினைக்க ஒன்றுமில்லை. அதேபோல் நீங்களாகவே ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடாதீர்கள். அதாவது நீங்கள் சொன்ன அந்த ஓரல் செக்ஸ் விஷயத்தைப் போல்..
பெண்ணுறுப்பில் வாய் வழித் தீண்டல் என்பது அவர்களை புணர்ச்சிக்கு தயாராக்க காலம்காலமாக செய்து வரும் நிலைதான். இதில் அசிங்கப்படவும், தலைகுனியவும் ஒன்றுமில்லை. அதேசமயம் அப்படி செய்வதாக இருந்தால் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இதிலும் பாதுகாப்பு அவசியம். எனவே சுகாதார அம்சங்களை கையாண்ட பின் இதை முயற்சிக்கலாம். இதில் அசிங்கப்பட ஒன்றுமில்லை.
மேலும் படிக்க: பெற்றோர்கள், நமது பாலினம் எதுவாக இருக்கவேண்டும் என முடிவுசெய்யும் உரிமை இருப்பதாக ஏன் அவர்களாகவே முடிவு செய்துகொள்கிறார்கள்?
நீங்கள் பயப்படுவதும் ஒரு விதத்தில் நியாயமானதுதான். அதாவது செக்ஸில் சிலருக்கு சில விஷயங்கள் பிடிக்கும். ஆனால் அது தன் துணைக்கும் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. சிலருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். எனவே அவர்களின் விருப்பம் அறிந்து செயல்படுவதும், வற்புறுத்தாமல் செயல்படுவதும் அவசியம். ஒருவேளை அதை எப்படியாவது அனுபவித்தே ஆக வேண்டும் என நினைத்தால் அதை விரும்பும் துணையை தேர்வு செய்து முயற்சி செய்யுங்கள். உங்கள் பாலியல் பசியை தீர்க்க பன்முகத்துடன் முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அதைக் கொடுப்பதற்கும் , பெறுவதற்குமான எல்லா தகுதிகளும் உங்களுக்கு உண்டு.
கடைசியான உங்கள் கேள்விக்கு.. ஒரு பெண்ணை அணுகும்போது நேர்மையாக இருங்கள். உங்கள் விருப்பங்களை நேர்மையாக கூறுங்கள். இது மாதிரியான விஷயங்களை விரும்புவாயா? அல்லது முயற்சி செய்ய நினைக்கிறாயா..? நாம் முயற்சிக்கலாமா..? இப்படி கேளுங்கள். உங்கள் செக்ஸ் விருப்பத்தை வைத்து ஒருவர் நீங்கள் இப்படியான ஆசை கொண்டவர் என தீர்மானம் செய்தால் அது அவர்களுடைய தவறு. முழுமையாக தெரிந்துகொள்ளாமல் தீர்மானிப்பது தவறு. எனவே அது உங்களுடைய தவறு இல்லை. உங்களுடைய பாலியல் ஆசைகளை யாருக்காகவும் சமரசம் செய்யாதீர்கள். அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.