• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மும்பையில் ஆணுறைகள் பயன்பாடு இருமடங்காக அதிகரிப்பு..!

மும்பையில் ஆணுறைகள் பயன்பாடு இருமடங்காக அதிகரிப்பு..!

கருத்தடை ஆணுறை

கருத்தடை ஆணுறை

பெண்கள் மத்தியில் கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2.4 சதவீதத்திலிருந்து இப்போது 1.8 சதவீதமாக கிட்டத்தட்ட 1% குறைந்துள்ளது.

  • Share this:
    காண்டம் என்பது தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க ஆண்கள் பயன்படுத்தும் பிறப்பு தடுப்பு (Birth Control) முறை ஆகும். அதுமட்டுமல்லாமல் ஆணுறையுடன் உடலுறவில் ஈடுபடும்போது பாலியல் தொடர்பான நோய்கள் பரவுவதும் தடுக்கப்படுகிறது. இந்த ஆணுறைகள் லாக்ச் அல்லது பாலியூரேனால் என்ற ரப்பரால் தயாரிக்கப்படுகிறது. இப்போது ஆணுறைகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசின் கணக்கெடுப்பு ஒன்றில் ஆணுறை பற்றி வெளியான செய்தியை இந்த உள்ளடக்கத்தின் வழியே காண்போம்.

    தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey (NFHS)) ஐந்தாவது சுற்று, மகாராஷ்டிராவில் (Maharashtra) குடும்பக் கட்டுப்பாடு (family planning) முறைகளில் ஒரு முன்னுதாரண மாற்றம் ஏற்பட்டுள்ளது, ஆண்கள் குழந்தை பிறப்புக் கட்டுப்பாடிற்கு அதிக விருப்பம் காட்டுகிறார்கள் என்றது. NFHSன் அறிக்கையின் படி, ஆணுறைகளின் பயன்பாடு (use of condoms) கடந்த நான்கு ஆண்டுகளில் 7.1% லிருந்து 10.2% ஆக உயர்ந்தது.



    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே கணக்கெடுப்பின் நான்காவது பதிப்போடு ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மாறாக, பெண்கள் மத்தியில் கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2.4 சதவீதத்திலிருந்து இப்போது 1.8 சதவீதமாக கிட்டத்தட்ட 1% குறைந்துள்ளது. கருத்தடை மாத்திரைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண் கருத்தடை 49.1% ஆக குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

    மும்பை மிரரின் (Mumbai Mirror) தரவுகளின் அடிப்படையில், மும்பையில் ஆணுறை பயன்பாடு இரு மடங்காக அதிகரித்துள்ளது, ஆனால் பிறப்பு கட்டுப்பாடு (birth control) தொடர்ந்து பெண்ணின் பொறுப்பாக உள்ளது. இருப்பினும், பெண் கருத்தடை (Female sterilisation) தொடர்ந்து மிகவும் பொதுவான முறையாக இருந்தாலும், ஆணுறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மும்பையில், திருமணமான தம்பதிகளில் பத்தில் ஏழு பேர் குடும்பக் கட்டுப்பாடு முறைகளை சார்ந்துள்ளனர்.

    ஓரல் செக்ஸ் செய்யும்போது பாலியல் நோய்த்தொற்று உண்டாகுமா..? அதை தடுக்க வேறேதும் வழிகள் உள்ளதா..? பல்லவியின் பதில் இதோ...

    ஐந்து ஆண்டுகளில், ஆண்கள் மத்தியில் ஆணுறைகளின் பயன்பாடு 11.7%லிருந்து 18.1% ஆக உயர்ந்துள்ளது. புறநகர்ப்பகுதிகளில், கடைசியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டதிலிருந்து ஆணுறைகளின் பயன்பாடு இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது 8.9% முதல் 18% வரை உயர்ந்துள்ளது. மும்பை மிரருக்கு நிபுணர்கள் அளித்த பதிலில், நகர்ப்புறங்களில், குறைவான பெண்கள் பல பக்கவிளைவுகள் காரணமாக கருத்தடை மாத்திரைகளை நோக்கிச் செல்கிறார்கள் என்றனர்.



    ஒட்டுமொத்தமாக, 17 மாநிலங்களில் நவீன கருத்தடை முறைகளின் (modern contraceptive methods) பயன்பாடு அதிகரித்துள்ளது என்று NFHS அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் NFHSன் அறிக்கை, மது மற்றும் புகையிலை நுகர்வு (alcohol and tobacco consumption) போன்ற பிற காரணிகளிலும் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுவுக்கான தடை உத்தரவு நடைமுறையில் உள்ள பீகார் மாநிலம் மகாராஷ்டிராவை விட அதிக மது அருந்துகிறது என்று அந்த அறிக்கை காட்டுகிறது. நகர்ப்புறங்களில் 14 சதவீத ஆண்கள் மது அருந்துவதாகவும் இதே கிராமப்புறங்களில் 15.8 சதவீதம் பேர் மது அருந்துவதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

    அறிக்கையின் பட்டியலில் வடகிழக்கு (north-east) மாநிலங்கள் புகையிலை நுகர்வுக்கு நம்பமுடியாத முடிவுகளைக் கொண்டுள்ளது. உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினத்தையொட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் (Union Minister of Health and Family Welfare) டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Dr Harsh Vardhan) முதல் கட்டமாக 22 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு 2019-20ம் ஆண்டுக்கான‌ ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பை கடந்த 12ம் தேதி வெளியிட்டார்.



    மக்கள் தொகை, இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நலன், குடும்ப நலன், ஊட்டச்சத்து இதர முக்கிய குறிப்பீடுகள் இதில் இடம்பெற்றுள்ளன. குழந்தை நோய்த்தடுப்பு விரிவாக்கப்பட்ட களங்கள், குழந்தைகளுக்கான நுண்ணூட்ட ஊட்டச்சத்துக்களின் கூறுகள், மாதவிடாய் சுகாதாரம், ஆல்கஹால் மற்றும் புகையிலை பயன்பாடு, நோய் தோற்று இல்லாத நோய்களின் கூடுதல் கூறுகள் (Non-communicable diseases (NCDs), மேலும் பல புதிய பகுதிகள் NFHS-5 இல் அடங்கும்.

    இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mohfw.gov.in ) வெளியிடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஆந்திரப் பிரதேசம், அசாம், பிகார், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதில் அடங்கும். மீதமுள்ள 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் களப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: