மன அழுத்தத்தில் இருந்தால் பிடித்த ஆண்-ஐ வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்

உங்களுக்கு பிரச்னையிலிருந்து விடுபட ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்குவார்கள். ஆரோக்கியமான நட்பு பாராட்டுவார்கள்.

மன அழுத்தத்தில் இருந்தால் பிடித்த ஆண்-ஐ வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்
மாதிரிப்படம்
  • Share this:
மன அழுத்ததிற்கான வழிமுறைகள் பலவற்றைக் கடந்திருப்போம். ஆனால் இந்த செய்தி உண்மையிலேயே நம்மை வியப்படைய வைக்கிறது.

மும்பையைச் சேர்ந்த 30 வயது குஷால் பிரகாஷ் என்ற இளைஞன் மன அழுத்தத்திலிருந்து விடுபட RABF ஆப்பை கடந்த ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அந்த ஆப் - இன் சிறப்பு என்னவெனில் பெண்கள் மன வருத்தத்திலோ, மன அழுத்தத்திலோ இருந்தால் அந்த ஆப்பில் சென்று தனக்கு பிடித்த ஆணை தேர்வு செய்து வாடைகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடன் தன் வருத்தத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

இது குறித்து குஷால் நியூஸ் 18 பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் “ இந்த ஆப் டேட்டிங் செய்வதற்கோ, செக்ஸிற்காகவோ தொடங்கப்பட்டது அல்ல. அப்படி ஒருபோதும் இயங்காது. இதன் நோக்கம்,  தனிமையில் இருப்போர், மன அழுத்தத்தில் இருப்போருக்கு ஆறுதலாக  ஒரு துணையை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதே. அவர்கள் உங்களுக்கு அந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்குவார்கள். நட்பு பாராட்டுவார்கள்” எனக் கூறியுள்ளார்.


இந்த ஆப்பில் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டும்தான் இருக்கின்றனர். இதில் கல்லூரி செல்லும் ஆண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் ஆண்களே பகுதி நேர வேலையாக செய்கின்றனர். இதில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 500 முதல் 3000 வரை வசூலிக்கப்படுகிறது.இதற்காக அந்த ஆண்களுக்கு பல பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பிற்காகவும், நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக நேர்காணல்களில் பல டெஸ்டுகள் நடத்தி தேர்வு செய்கின்றனர். குஷால் பாதுகாப்பு குறித்து கேட்ட போது ”அந்த பெண் ஆணை தேர்வு செய்யும்போது எந்த இடம் என்பதை குறிப்பிட வேண்டும். அது மக்கள் கூடும் பொது இடமாக இருக்க வேண்டும். அதேபோல் எங்கள் ஊழியர்களும் அவர்கள் சொன்ன இடத்தில்தான் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்வார்கள்.” என்கிறார்.Also Watch:
First published: January 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்