Home /News /lifestyle /

கணவரின் மனம் கவர விரும்பும் பெண்களே.. இந்த விஷயத்துக்கு எல்லாம் கோவப்படாதீங்க!

கணவரின் மனம் கவர விரும்பும் பெண்களே.. இந்த விஷயத்துக்கு எல்லாம் கோவப்படாதீங்க!

பெண்கள் பொதுவாக ஒரு விஷயத்தை இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்றோ அல்லது இதை ஆண்களே புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்றோ நினைக்கூடும். அப்படி அவர்கள் நினைத்த விஷயங்கள் நடக்காத போது அது ஆண்கள் மீது கோபமாக மாறுகிறது.

பெண்கள் பொதுவாக ஒரு விஷயத்தை இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்றோ அல்லது இதை ஆண்களே புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்றோ நினைக்கூடும். அப்படி அவர்கள் நினைத்த விஷயங்கள் நடக்காத போது அது ஆண்கள் மீது கோபமாக மாறுகிறது.

பெண்கள் பொதுவாக ஒரு விஷயத்தை இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்றோ அல்லது இதை ஆண்களே புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்றோ நினைக்கூடும். அப்படி அவர்கள் நினைத்த விஷயங்கள் நடக்காத போது அது ஆண்கள் மீது கோபமாக மாறுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
“சாப்பிட்ட தட்ட அப்படியே சிங்குல போட்டீங்களா?”, “ஃபிரிட்ஜில் இருந்து வாட்டர் பாட்டில் எடுத்தா திரும்ப தண்ணி பிடிச்சி வைக்கத் தெரியாதா?”, “டாய்லெட் சீட்ட குளோஸ் பண்ணி வைக்க கூட நான் தான் வரணுமா?” என சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மனைவிமார்கள், கணவன்களிடம் சிடுசிடுப்பது உண்டு. ஆனால் பெரும்பாலும் ஆண்கள் எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். இந்த சின்ன விஷயங்களை கூட பொறுத்துக்கொள்ள முடியாமல், டென்ஷன் ஆவதால் மனைவியின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று தான் சிந்திப்பார்களாம்.

ஆண்- பெண் என்ற இரண்டு எதிர் எதிர் பாலினத்தின் ஈர்ப்பே சில அடிப்படையான குணாதிசயங்களைக் கொண்டு தான் உள்ளது. மென்மையான பெண்களுக்கு கரடுமுரடான ஆண்களையும், அமைதியான ஆண்களுக்கு கொஞ்சம் போல்ட்டான பெண்களையும் பிடித்துப்போவது சினிமாவில் மட்டுமல்ல ஏதார்த்த வாழ்க்கையிலும் சாத்தியமானது. அப்படி எதிர் எதிர் கேரக்டர்களைக் கொண்ட ஆணும், பெண்ணும் மட்டுமல்ல, இயல்பானவர்களுக்கிடையில் கூட சின்ன சின்ன விஷயங்களில் முரண்பாடுகள் வெடிக்கக்கூடும். குறிப்பாக ஆண்கள் எந்தெந்த விஷயங்களுக்கு எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் என்பதை பெண்கள் அறிந்திருக்க வேண்டும்.

முன்முடிவு எடுப்பது:

பெண்கள் பொதுவாக ஒரு விஷயத்தை இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்றோ அல்லது இதை ஆண்களே புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்றோ நினைக்கூடும். அப்படி அவர்கள் நினைத்த விஷயங்கள் நடக்காத போது அது ஆண்கள் மீது கோபமாக மாறுகிறது. உதாரணத்திற்கு “கரண்ட் பில் கட்ட இன்னைக்கு தான் கடைசி தேதின்னு உங்களுக்குத் தெரியாதா?” என்பதற்கு, கணவனுக்கு இதுபற்றி தெரிந்திருக்கும், அவரோ இதை செய்து முடித்திருக்க வேண்டும் என மனைவி அனுமானிப்பதை குறிக்கிறது.



மற்ற பெண்களுடன் நட்பு பாராட்டுவது:

கணவன் - மனைவி வெளியே செல்லும் போது அங்குள்ள மற்ற பெண்ணைப் பற்றி புகழ்ந்து பேசுவது மனைவிக்கு எரிச்சலையும், கோபத்தையும் கொடுக்கிறது. நட்பாக ஒரு பெண்ணுடன் உங்கள் கணவர் பழகுவது இயல்பான ஒன்று என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எக்காரணம் கொண்டும் பெண்கள் பாதுகாப்பு இன்மை காரணமாக ஏற்படும் சந்தேகத்தை அவர்கள் மீது திணிக்கக்கூடாது.

ALSO READ |  Man child - இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கணவர் ஒரு ‘வளர்ந்த குழந்தை’ தான்..!

மனைவியை கிண்டல் செய்வது:

ஆண்களுக்கு பொதுவாகவே பெண்களை விட நகைச்சுவை உணர்வு அதிகம், குறிப்பாக மனைவியை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்பது கணவருக்கு பிடித்தமான ஒன்று. எனவே தான் ஆண்கள் தங்களது பார்டனரை ஜாலிக்காக கேலி செய்து விளையாடுகிறார்கள். ஆனால் மனைவியைப் பொறுத்தவரை குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் முன்பு கணவன் தன்னை கிண்டல் செய்வதை அவமானமாக நினைத்து, சண்டை போட ஆரம்பித்துவிடுகிறார்கள். கிண்டல் செய்து விளையாடுவது நகைச்சுவைக்காகத் தானோ தவிர, எக்காரணம் கொண்டும் தன்னை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் தனது கணவனிடம் கிடையாது என்பதை பெண்கள் நம்ப வேண்டும்.



பாலியல் ரீதியான கற்பனைகள்:

ஆண்களைப் பொறுத்தவரை பாலியல் வாழ்க்கையில் அதீத கற்பனை திறன் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் பெண்கள் எப்போதுமே தங்களது பாலியல் வாழ்க்கையை தனிப்பட்ட விஷயமாக கருதுகின்றனர். அதைப் பற்றி பேசவோ, கணவனின் வித்தியாசமான பாலியல் ஆசைகள் பற்றி அறிந்து கொள்ளவோ ஆர்வம் காட்டுவது கிடையாது. ஆனால் ஆண்கள் நிச்சயமாக தங்கள் மனைவிகள் தங்கள் பாலியல் கற்பனைகள் மற்றும் ஆசைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ALSO READ | உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழித்துவிட்டால் கரு தங்காதா..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்

பொது இடத்தில் விலகிச் செல்வது:

படுக்கை அறையிலும், வீட்டிலும் அன்பை பொழியும் சில கணவன்மார்கள், மனைவியுடன் பொது இடத்திற்குச் செல்லும் போது இடைவெளியுடன் காணப்படுவார்கள். இதனை பெண்கள் பொது இடத்தில் கணவன் தன்னை அவருடைய மனைவி என்பதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை என தவறாக நினைக்கின்றன. ஆனால் கூச்சம் மற்றும் தனிமையை விரும்புவதால் பெரும்பாலான ஆண்கள் வெளியில் கைகோர்த்து நடப்பது, முத்தமிடுவது, தலையைக் கோதிவிடுவது போன்ற செயல்களை தவிர்க்கிறார்கள் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



ஆபாசப்படம் பார்ப்பது:

ஆண்கள் ஆபாசப்படம் பார்ப்பதை பெண்கள் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு பிரச்சனை செய்யக்கூடாது என ஆண்கள் கருதுகின்றனர். பல்வேறு ஆய்வுகளின் படி ஆபாசப் படங்களை தம்பதிகள் இணைந்து பார்ப்பது பாலியல் தூண்டலை அதிகரிப்பதோடு, தங்களுடைய பாலியல் ரீதியான ஆசையை வெளிப்படுத்தவும் உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Published by:Anupriyam K
First published:

Tags: Husband Wife, Relationship, Relationship Tips

அடுத்த செய்தி