பெரும்பாலான உறவுகளில் அரவணைப்பு மற்றும் பாசம் காணப்படுகிறது. ஆனால் இருவர் மட்டுமே சேர்ந்து ஒன்றாக இருக்கும் போது சிறிய கருத்து வேறுபாடுகள் முதல் பெரிய அளவிலான சண்டைகள் வரை நடப்பதை பார்க்க முடிகிறது. சண்டை சச்சரவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் பல காரணங்களால் ஏற்படலாம் என்றாலும், அதை எவ்வாறு திறம்பட கையாள்வது என்பதை உறவில் இருக்கும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் தம்பதியர் அல்லது காதலர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் நேரத்தில், அவர்களில் ஒருவர் திடீரென்று கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அமைதியாகி விடுகிறார்கள். இது சைலன்ட் ட்ரீட்மென்ட் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு ஒருவருடன் பேச பிடிவாதமாக மறுப்பது சைலன்ட் ட்ரீட்மென்ட் ஆகும். சைலன்ட் ட்ரீட்மென்ட்டை பின்பற்றும் ஒருவர் ஒரு கட்டத்தில் பார்ட்னரை துளியும் கண்டு கொள்ளாமல் அமைதியாக கடந்து செல்வது மற்றும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்.
இந்த சைலன்ட் ட்ரீட்மென்ட் பெரும்பாலும் தனது பார்ட்னரை தண்டிக்க அல்லது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. பல நபர்கள் இதை கடைபிடித்தாலும் இந்த நடத்தை உறவுகளை பாதிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். லூசில் ஷேக்லெட்டன் என்ற நிபுணரின் கூற்றுப்படி, உறவுகளுக்குள் மிகவும் நச்சு தன்மையை சைலன்ட் ட்ரீட்மென்ட் ஏற்படுத்துகிறது. தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்டின் மூலம், சைலன்ட் ட்ரீட்மென்ட் அளிக்கும் ஒருவருக்கு கெட்ட எண்ணம் இல்லாமல் இருக்கலாம் என்றும், அவருக்கு உறவில் இருந்து சிறிது இடைவெளி தேவைப்படுவதற்காக இப்படி செய்ய கூடும் என்றும் ஷேக்லெட்டன் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த இன்ஸ்டா போஸ்டில் அவர் கூறி இருப்பதாவது, பார்ட்னருடன் பிடிவாதமாக பேசாமல் இருப்பதற்கும் ஒரு காலக்கெடு இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பின் பார்ட்னருடன் ஒன்று கூடி பிரச்சனையைப் பற்றி விவாதிக்க வேண்டும். அப்படி செய்யாமல் நீண்ட நாள் அமைதி காப்பது உறவை முற்றிலும் உடைப்பது போலாகி விடும். சைலன்ட் ட்ரீட்மென்ட்டால் பாதிக்கப்படும் நபருக்கு எல்லாவற்றையும் சரி செய்வது தனது பொறுப்பு என்பது போல் உணரலாம். இது நியாயமல்ல, ஏனென்றால் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும் பொறுப்பு இருவருக்கும் உள்ளது என்று கூறியுள்ளார்.
உங்களுக்கு புடிச்சவங்க உங்களையே சுத்தி சுத்தி வரணுமா? டாப் 5 லவ் டிப்ஸ்..
உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டால் அல்லது உறவுக்கு சிறிது பிரேக் தேவைப்பட்டால் அமைதியாக பேசாமல் இருப்பதை விட, அதைப் பற்றி உங்கள் பார்ட்னரிடம் வெளிப்படையாக தெரிவிப்பது நல்லது என்று ஷேக்லெட்டன் பரிந்துரைத்துள்ளார். இந்த பழக்கம் உங்கள் பார்ட்னர் எதிர்வினையாற்ற சிறிது நேரம் கொடுக்கும் மற்றும் உறவை சரிசெய்யும் சுமைகளை முழுவதுமாக சுமப்பதில் இருந்து இருந்து அவரை காப்பாற்றும் என்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Relationship, Relationship Fights