ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கணவர் உங்களை ஏமாற்றுவதாக நினைக்கிறீங்களா..? கண்டுபிடிக்க...

கணவர் உங்களை ஏமாற்றுவதாக நினைக்கிறீங்களா..? கண்டுபிடிக்க...

ஏமாற்றும் கணவர்

ஏமாற்றும் கணவர்

மணிக்கணக்காக மொபைலில் மெசேஜ்கள் அனுப்புவது போன்ற வேலைகளையெல்லாம் செய்வார்கள். அதிலும் நண்பர்களாகப் பழகும் ஆரம்ப காலக்கட்டத்தில் அவர்களைப் பற்றி மனைவியிடம் பகிர்ந்துக் கொள்வார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய நபர்களைப் பற்றி அடிக்கடி பேசுதல், மனைவியின் அன்பைப் வெறுப்பது, பணி நிமிர்த்தம் என அடிக்கடி வெளியில் செல்வது போன்ற நிலைத் தொடர்ந்தால் உங்களது கணவர் உங்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்கிறார்கள் என்று அர்த்தம்.

குடும்பத்தில் உள்ள உறவை முற்றிலும் அழிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்று துரோகம். அதிலும் கணவன் மற்றும் மனைவி இடையே உள்ள உறவைப் பிரிக்கும் முக்கியமானதும் இது தான். இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஆண்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துவிட்டது. குறிப்பாக இப்படியெல்லாம் ஏமாற்றலாமா? என்று நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு கணவன் அல்லது மனைவி ஒருவரையொருவர் ஏமாற்றும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.

அதிலும் பணி நிமிர்த்தமாக பொது இடங்களுக்கு செல்வதால் புதிய உறவுகளைச் சந்திக்க நேரிடுவதோடு, தன்னுடைய மனைவின் அன்பை வெறுக்கும் சூழலும் ஏற்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் தான் மனைவியாக ஒவ்வொரு பெண்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லாவிடில் தேவையற்ற பிரச்சனைகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். எனவே உங்களது கணவர் உங்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம்? ஏமாற்ற முடியும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

துரோகம் விளைவிக்கும் கணவர்களைக் கண்டுபிடிக்கும் முறைகள்…

புதியவர்களைப் பற்றி நிறுத்தாமல் பேசுவது:

பொதுவாக ஆண்கள் அலுவலகம், ஜிம் போன்ற பல்வேறு பொது இடங்களுக்குச் செல்வதை வாடிக்கையாகிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு வெளியில் செல்லும் ஆண்களில் சிலர் தன்னுடைய மனைவிக்கு துரோகம் செய்யும் வாய்ப்புகள் அதிகம். வழக்கமான உரையாடல்கள் இல்லாமல் எப்போதும் தனக்கு புதிதாக அறிமுகமாகும் உறவுகளிடம் நேரம் செலவிடுவது, மணிக்கணக்காக மொபைலில் மெசேஜ்கள் அனுப்புவது போன்ற வேலைகளையெல்லாம் செய்வார்கள்.

அதிலும் நண்பர்களாகப் பழகும் ஆரம்ப காலக்கட்டத்தில் அவர்களைப் பற்றி மனைவியிடம் பகிர்ந்துக் கொள்வார்கள். புதிய உறவுகளில் குறித்து பேசுவதிலும் அதிகம் காட்டுவார்கள். இது போன்ற விஷயங்களைத் தொடர்ச்சியாக செய்தால் கணவர் நம்மை ஏமாற்றிவிடுவாரா? என்று கேட்கலாம். ஆனால் புதிய நபர்களுடன் அதிகளவு நேரத்தைச் செலவிடும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொஞ்சம் சந்தேகம் வருவதில் கூட தவறில்லை.

Also Read : உங்கள் கணவரிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது?

வீட்டிற்குக் காயங்களுடன் வருதல்:

எப்போதும் இல்லாத அளவிற்கு புதுவிதமான மாற்றம் ஏற்படக்கூடும். யாருடனாவது சண்டையிட்டு காயங்களுடன் வீட்டிற்கு வந்தால் என்ன நடந்தது? என்று கேட்க மறந்துவிடாதீர்கள். குறிப்பாக உடம்பில் கீறல்கள், சிறிய காயங்கள் இருந்தால் ஏதாவது புதிய நபருடன் ஓய்வு நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்று அர்த்தம். எனவே எச்சரிக்கையோடு இருங்கள். இது போன்று தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மனைவியின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்காமல் இருப்பது:

திருமணமாகிய சில ஆண்டுகளுக்கு ஒரு வித புரிதலும், காதலும் வரக்கூடும். ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல மனைவியிடம் எவ்வித உணர்ச்சியும் இல்லாத நிலைக்குச் சென்று விடுகிறார்கள் கணவன்மார்கள். இப்படி அன்பையும் , உணர்ச்சியையும் மனைவியிடம் காட்டவில்லை என்றால், வேறொரு இடத்தில் அதை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தம். எனவே என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏன் என்னைப் பிடிக்கவில்லையா? என்ன காரணம் என்பது குறித்த வெளிப்படையான உரையாடல் தான் தீர்வாக அமையும்.

Also Read : கணவன் மனைவி பரிதாபங்கள்...இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

அடிக்கடி வெளியூர் பயணங்களுக்கு செல்லுதல்:

உங்களது கணவர் வழக்கத்திற்கு மாறாக தொழில் விஷயங்களுக்காக அடிக்கடி வெளியூர் பயணங்களுக்கு செல்கிறாரா? என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அப்படி சென்றாலும் அவர்களின் உடை மற்றும் செயல்முறைகளில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? என்பதை உற்று நோக்குங்கள். ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்றால் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் நேரடியாக கேட்டுவிடுங்கள். அல்லது தொழில்முறை பயணங்களுக்காக வெளியில் செல்வதற்கான ஆதாரங்களை கேட்க முயலுங்கள்.

இதோடு மணிக்கணக்கில் வாட்ஸ்அப், தேவையில்லாமல் மொபைலில் அதிக நேரம் பேசுவது, உடல் அமைப்பில் மாறுபாடு, அடிக்கடி பொய் சொல்லுதல் போன்றவை எல்லாம் கணவர் மற்றொரு உறவில் இருந்து கொண்டு உங்களுக்கு துரோகம் விளைவிக்கிறார் என்று அர்த்தம். எனவே இனி எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். இப்படி என்னதான் கணவனை கண்காணித்து வந்தாலும், தன்னுடைய மனைவிக்கு துரோகம் செய்யக்கூடாது என்று அவர்கள் நினைத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்பது தான் நிதர்சன உண்மை.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Cheating, Husband Wife, Relationship Tips