காதலர் or கணவரை "பழிக்குப் பழி' வாங்க நினைப்பது சரியா..?

பழிக்குப் பழி

பழிவாங்குவது சரியான முடிவல்ல என்பதை உணர வேண்டும். கோபத்தில், விரக்தியில் எடுக்கும் முடிவுகள் உங்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால் கோபத்தில் பொறுமை கொள்வதும், நிதானத்தை கடைபிடிப்பதும் அவசியம்.

  • Share this:
காதலர் அல்லது கணவரால், காதலி அல்லது மனைவியால் ஏமாற்றப்படும்போது ஏற்படும் துக்கத்தை பொறுத்துக் கொள்வது கடினம். அப்போது, அவர்களை பழிக்குப் பழி வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தோன்றும். விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் ஒருவருக்கு, பழி வாங்குவது என்பது அந்த சூழலை எதிர்கொண்டிருக்கும் அவருடைய பார்வையில் சரியாக இருப்பது போல் தோன்றும். அதனால், ஆபாச வார்த்தைகள், அடிதடி ஆகியவற்றில் கூட இறங்குவார்கள். ஒரே நோக்கம், தன்னை ஏமாற்றியவரை பழித்தீர்த்துவிட வேண்டும் என்பது மட்டுமே.

ஆனால், பழிவாங்குவது சரியான முடிவல்ல என்பதை உணர வேண்டும். கோபத்தில், விரக்தியில் எடுக்கும் முடிவுகள் உங்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால் கோபத்தில் பொறுமை கொள்வதும், நிதானத்தை கடைபிடிப்பதும் அவசியம். ஏன் ஒருவர் மற்றொருவரை பழிவாங்கக் கூடாது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வேறொருவர் :

கோபத்தில், உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் முடிவுகள், செய்யும் செயல்கள் நிச்சயம் நிதானத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மாறுபட்டதாகவே இருக்கும். கோபத்தில் இப்படி செய்துவிட்டேன் என நிறைய பேர் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். உணர்ச்சியின் வேகத்தில் எடுக்கும் முடிவுகள் உங்களை தவறான இடத்துக்கு அல்லது தண்டனைக்கு அழைத்துச் சென்றுவிடும். நிதானமாக யோசிக்கும்போது இப்படி செய்திருக்கலாமோ? என வேறொரு கோணத்தில் யோசிப்பீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் கோபத்தில் முடிவுகளை எடுக்காதீர்கள்.துரோகத்துக்கான வழி :

துரோகத்தை எதிர்கொண்டிருக்கும் நீங்கள், கோபத்தில் செய்யும் செய்கைகள், அவர்களுடைய செயல்களை நியாயப்படுத்துவதற்கு உதவியாக அமைந்துவிடும். கோபத்தை பொறுத்துக் கொள்ளாமல் நீங்கள் ஏதாவதொன்றை செய்ய நினைத்து, அது வேறொரு வகையான முடிவுகளைக் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அதனை துரோகம் செய்தவர்கள் தங்களுக்கான வழியாக பயன்படுத்திக்கொண்டால், அது உங்களை மேலும் காயப்படுத்தும். ஒருவேளை குற்றவுணர்ச்சியில் தங்கள் செயல்களுக்கு மன்னிப்பு கேட்க அவர்கள் தயாராக இருக்கும்போது, உங்களின் செயல், அவர்கள் செய்தது சரி என்ற எண்ணத்தை உருவாக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

பணியிடத்தில் இதையெல்லாம் அனுபவிக்கிறீர்களா? அப்ப வேலையை ரிசைன் பண்ணுங்க..

கோபம் தவறுக்கான தீர்வல்ல :

துரோகம் இழைத்தவர்களிடம் நீங்கள் காண்பிக்கும் கோபமானது, அவர்கள் செய்த தவறுக்கு சற்றும் சளைத்தல்ல. அவர்கள் உங்களுக்கு இழைத்த வேதனையை, அப்படியே திரும்ப கொடுக்கும்போது, உங்களுக்கும் அவர்களுக்கு வித்தியாசம் இல்லாமல் போகும். இருவருக்கும் இடையே மேலும் கசப்பை உருவாக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதனை நீங்கள் நிதானமாக யோசிக்கும்போது கோபத்தை தவிர்த்துவிடுவீர்கள்.அமைதியை குழைக்கும் பழி :

பழி என்ற எண்ணம் உங்களுக்குள் தீர்க்கமாக எழுந்துவிட்டால், அமைதி நிலைகொள்ளாமல் சென்றுவிடும். சிறிது காலத்துக்கு மட்டுமே நிம்மதியாக இருக்கும் நீங்கள், நீண்ட கால வாழ்க்கைக்கு மருந்தாக ஒருபோதும் இருக்காது. மனதுக்குள் ஒருவிதமான பதட்டமும், பயமும் இருந்து கொண்டே இருக்கும். அதில் இருந்து வெளியே வர அல்லது மீண்டு வருவது என்பது சிரமமாகிவிடும்.

சமாதானம் இல்லை :

பழிக்குப் பழி என்பது சமாதானத்துக்கான இடத்தை முற்றிலுமாக அழித்திருக்கும். அவர்களை உங்களால் மன்னிக்க முடியவில்லை என்றாலும், பழிக்குப் பழி என்ற ஆயுதத்தை எடுக்காமல் இருக்கலாம். இது உங்களை நிம்மதியாக வாழ வைக்கும். எதிர்வரும் உங்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிக்குரிய நாட்களாக அமையும்.

 
Published by:Sivaranjani E
First published: