ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்குயின் கார்னர் 2 : இப்போது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துள்ளீர்களா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

பெண்குயின் கார்னர் 2 : இப்போது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துள்ளீர்களா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

1-2 வருடங்களுக்கு, 98 % வரை குழந்தை பிறப்பைத் தடுப்பது குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள் தான்.

1-2 வருடங்களுக்கு, 98 % வரை குழந்தை பிறப்பைத் தடுப்பது குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள் தான்.

1-2 வருடங்களுக்கு, 98 % வரை குழந்தை பிறப்பைத் தடுப்பது குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள் தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஸ்வேதாவும் ராம்குமாரும் அன்று என்னை சந்திப்பதற்கு வந்திருந்தார்கள். இருவரும் இருபத்தி எட்டு, இருபத்தி ஒன்பது வயதில் இருக்கிறார்கள். இருவருமே மென்பொருள் பொறியாளர்கள்.

ஸ்வேதா தான் ஆரம்பித்தார். "டாக்டர் நாங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை . ஆனால் இணைந்து வாழ முடிவு செய்திருக்கிறோம் (living together). எங்களுக்கு ஏதேனும் பரிசோதனைகள் செய்ய வேண்டி இருக்கிறதா? நாங்கள் இப்பொழுது குழந்தைக்கு திட்டமிடவில்லை.அது குறித்தும் உங்களுடைய ஆலோசனை தேவை" என்றார்.

இருவரிடமும் சில கேள்விகளைக் கேட்டதில், சர்க்கரை நோய் தைராய்டுகுறைவு, போன்ற எந்த குறிப்பிடத்தக்க பிரச்சினையையும் இருக்கவில்லை.ஏதும் கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய,Elisa for Hiv, HbsAg , VDRL போன்ற இரத்த பரிசோதனைகளை இருவருமே எடுத்துக்கொள்ளும் படி கூறினேன்.

1-2 வருடங்களுக்கு, 98 % வரை குழந்தை பிறப்பைத் தடுப்பது குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள் தான்.குழந்தைக்கு திட்டமிடாததால் குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகளும் ஸ்வேதா எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.5 வருடம் வரை தைரியமாக இந்த மாத்திரைகளை எந்த விதமான பெரிய பக்க விளைவுகள் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு சிலருக்கு இந்த மாத்திரைகளை எடுக்கும் பொழுது லேசாக எடை கூடுதல் வாந்தி குமட்டல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆனால் பல்வேறு வகையான மாத்திரைகள் இருப்பதால், நமக்கு எது சரியாக பொருந்துகிறது என்பதை பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த மாத்திரைகளில் முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் தினமும் அதே நேரத்தில் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றிரண்டு மாத்திரைகளை மறந்து விட்டாலும் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியே வந்து விடுவோம்.

பெண்குயின் கார்னர் 1 : திருமணமாகப் போகும் பெண்களுக்கு பீரியட்ஸ் பிரச்னை இருந்தால் குழந்தை பிறப்பதில் பிரச்னை வருமா?

நான் எப்பொழுதும் இந்த மாத்திரைகளை பரிந்துரைக்கும் முன்பாக சில அடிப்படை பரிசோதனைகள்- ஹீமோகுளோபின் ரத்த சர்க்கரை அளவு ,கல்லீரல் டெஸ்ட், மற்றும் கொலஸ்ட்ரால் மற்றும் அடிப்படை ஸ்கேன் பரிசோதனையும் செய்வதுண்டு. எந்த பிரச்சினையும் இல்லை என்று உறுதியான பின்பு மாத சுழற்சியின் இரண்டாவது நாளிலிருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினேன்.

இன்றைய இளைஞர்களின் வாழ்க்கைமுறை நம்முடைய கலாச்சாரத்தில் இருந்து மாறுபட்டிருக்கிறது.

கைபேசியும் அதன் மூலம் நம் கையில் வரும் உலகமும் பல விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ள வைக்கின்றன.

இது சரியா? தவறா? என்று கணிக்க முடியவில்லை.

ஆனால் இதுபோன்ற பந்தங்கள் திருமணத்தில் முடியாதபோது, குறிப்பாக பெண்கள் ஏராளமான மனக் குழப்பங்களுக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Child, Pregnancy, பெண்குயின் கார்னர்