டோனோவனோசிஸ் என்பது பாலியல் ரீதியாக பரவும் பிறப்புறுப்பு புண் நோயாகும். பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் பாக்டீரியாவில் ஏற்படும் இந்நோய்க்கு முறையாக சிகிச்சை அளிக்காவிடில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இன்றைக்கு வளர்ந்து வரும் மருத்துவ உலகத்தில், புதிய புதிய நோய்களும் மக்களிடம் அதிகளவில் பரவி வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் சந்திக்கும் உடல் நலப்பிரச்சனைகளில் ஒன்று தான் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள்( Sexually transmitted infections – STI). பொதுவாக பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளில் சில சிபிலிஸ், கிளமிடியா மற்றும் கோனோரியா ஆகியவை அடங்கும். இந்த நோயின் தாக்கம் குறித்து நாம் அறிந்திருந்தாலும் பிறப்புறுப்புகள் அதிகம் சேதம் விளைவிக்கும் நோய்களில் ஒன்றாக உள்ளது எஸ்டிஐ.
க்ளெப்சில்லா கிரானுலோமாடிஸால் என்பது பாக்டீரியா நோய்த் தொற்று ஆகும். இது பிறப்புறுப்புகளில் புண்களை ஏற்படுத்துவதோடு,பாலியல் தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. குறிப்பாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலைகளில் மிகவும் பொதுவானது. எனவே இந்த நோயின் தாக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். எப்படி ஏற்படுகிறது..? சிகிச்சை முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
STI அறிகுறிகள்..
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வேகமாக பரவக்கூடிய நோய்களில் ஒன்றுதான் இது. டோனோவனோசிஸ் எனப்படும் பாக்டீரியா நோய்த் தொற்று பொதுவாக பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் அதிகளவில் ஏற்படுகிறது. ஒருவேளை பிறப்புறுப்பில் புண்கள் இருக்கும் சமயத்தில், உடலுறவில் ஈடுபட்டால் வேகமாக பரவுகிறது.
இந்நோயின் ஆரம்பத்தில் பிறப்புறுப்பில் எரிச்சல், புண்கள் ஏற்படும் எனவும் ஆரம்பத்தில் வலி உணர்வு இருக்காது என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் ஒரு வாரத்திற்குள் உங்களால் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இதோடு பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசக்கூடும். அந்த இடத்தைத் தொட முடியாத அளவிற்கு வலியை உணர நேரிடும்.
பிறப்புறுப்பில் வெள்ளை நிற திரவம் வெளியேறும். அப்போது வலி மற்றும் துர்நாற்றம் ஏற்பட்டால், உங்களுக்கு பிறப்புறுப்பு புண் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அர்த்தம். இதேப் போன்று சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டும்.
Also Read : பாலியல் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?
சிகிச்சைகள் மற்றும் தடுக்கும் முறை…
பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் எதையும் அலட்சியமாக விட்டுவிடக்கூடாது. இது உயிர் போகும் அளவிற்கு கூட பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே ஆண்களோ? பெண்களோ? பிறப்புறுப்பில் புண்கள் இருப்பவர்களுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை உடலுறவு கொள்ளும் சூழல் ஏற்பட்டால் பாதுகாப்பான முறையில் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பிறப்புறுப்பில் அளவுக்கு அதிமாக வலி ஏற்பட்டால் அலட்சியமாக விட்டு விடாமல், உடனடியாக மருத்துவரை அணுகி உங்களுக்கான சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sex, Sexually transmitted diseases