Home /News /lifestyle /

Raksha Bandhan 2022 : சகோதரத்துவத்தை போற்றும் ரக்‌ஷா பக்தன் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா..?

Raksha Bandhan 2022 : சகோதரத்துவத்தை போற்றும் ரக்‌ஷா பக்தன் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா..?

 சகோதரத்துவத்தை போற்றும் ரக்‌ஷா பக்தன்

சகோதரத்துவத்தை போற்றும் ரக்‌ஷா பக்தன்

ராக்கியைக் கையில் கட்டிய பெண்ணின் வாழ்க்கையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் பக்க பலமாக நிற்பேன் உன உறுதியளிப்பார்கள். இப்படி, இந்தியாவில் மத வழிபாடுகள் மட்டுமில்லாமல் சகோதரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் இதுப்போன்ற விழாக்கள் தான் நம் இந்தியர்களை மேலும் சிறப்பிக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவில் சகோதர,சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் ரக்‌ஷா பக்தன் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத பௌர்ணமியில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ரக்‌ஷா பக்தன் கொண்டாட்டம் ஆகஸ்ட் 11 அல்லது ஆகஸ்ட் 12 ஆம் தேதியா? என்ற குழப்பம் நிலவிவருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உண்டு. மாநிலத்தின் பெருமையை உரக்கச் சொல்லும் அளவிற்கு பண்டிகைத் தினங்களும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பல வண்ணமயமான கலாச்சாரங்கள் வெளிநாட்டினரைக் கூட வியப்போடு திரும்பி பார்க்க வைக்கிறது.

கலாச்சாரங்களை மட்டும் வெளிக்கொணரமால் ஒற்றுமையின் தேசமாக விளங்குகிறது நம் இந்தியா. “இந்தியா என் தாய் நாடு, இந்தியர் யாவரும் உடன் பிறந்தோர்“ என்பதை எடுத்துரைக்கும் விதமாக சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில் ரக்‌ஷா பக்தன் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற இப்பண்டிகை நாளில், பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதர்களாகக் கருதுவோரின் கையில் மஞ்சள் நூல் அதவாது ராக்கியைக் கட்டுவார்கள். ராக்கியை ஏற்றுக்கொண்ட ஆண், அந்த சகோதரிக்குப் பரிசுப்பொருள்களை வழங்குவார்கள்.

இதோடு ராக்கியைக் கையில் கட்டிய பெண்ணின் வாழ்க்கையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் பக்க பலமாக நிற்பேன் உன உறுதியளிப்பார்கள். இப்படி, இந்தியாவில் மத வழிபாடுகள் மட்டுமில்லாமல் சகோதரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் இதுப்போன்ற விழாக்கள் தான் நம் இந்தியர்களை மேலும் சிறப்பிக்கிறது. ஆரம்பத்தில் வட இந்தியாவில் அதிகம் கொண்டாடப்பட்ட ரக்சா பந்தன் பண்டிகை தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் எந்த ஆண்டும் இல்லாத குழப்பம் இந்தாண்டு ஏற்பட்டுள்ளது. பௌர்ணமி தினம் இரு நாள்கள் காட்டுவதால் ஆக்ஸ்ட் 11 ஆ அல்லது ஆகஸ்ட் 12ம் தேதியா? என குழப்பம் எழுந்துள்ளது.



ரக்‌ஷா பந்தன் 2022 கொண்டாட்டம் எப்போது?

ரக்‌ஷா பக்தன் ஒவ்வொரு ஆவணி மாதம் பௌர்ணி தினத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாக அதாவது ஆடி பௌர்ணமி திதியிலேயே கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இருந்தப் போதும் ஆகஸ்ட் 11 அல்லது ஆகஸ்ட் 12 ஆம் தேதியா? என குழப்பம் உள்ளது.

பத்ராவுடன் கூடிய பௌர்ணி திதி இந்தாண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் இந்நாள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி என்பதால் அன்றைய தினம் தான் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடுவோம் என்று கூறுகிறார்கள். குறிப்பாக ஆடி பௌர்ணமி என்பது ஆக்ஸட் 11 ஆம் தேதி வருகிறது.

உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

ஆனால் த்ரிக் பஞ்சாங்கப்படி பௌர்ணமி ஆகஸ்ட் 11, 2022 அன்று காலை 10.38 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 8.02 மணிக்கு முடிவடையும். இருந்தப் போதும் பௌர்ணமியுடன் பத்ராவும் இருப்பதால் பலர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தான் சகோதரர்களுக்கு ராக்கி கட்ட சரியான நாள் என்று குறிப்பிடுகின்றனர்.



இதுப்போன்று இந்தாண்டு ரக் ரக்‌ஷா பந்தன் ஆகஸ்ட் 11 அல்லது ஆகஸ்ட் 12 ஆம் தேதியா? என்ற குழப்பம் இருந்தாலும், ஒரு நாள் வித்தியாசத்தில் ஒன்றும் நடந்து விடாது என்ற மனநிலையில் இந்த அற்புத நாளை வரவேற்கப் பெண்கள் தயாராகிவிட்டனர். தன்னுடைய சகோதரர்களுக்கு ராக்கி எனும் மஞ்சள் நூல் கட்டுவதற்காக ஆவலுடன் காத்துள்ளனர். சகோதரர்களோ? என்ன பரிசுப்பொருள்களை வாங்கலாம் என்று தேடி அலைகின்றனர். ஆரம்பத்தில் இந்துக்கள் மட்டும் அதிகம் கொண்டாடிய நிலையில், சாதி, மதம் கடந்து சகோதரத்துவம் ஒன்றை மட்டும் பிரதானமாக வைத்து இவ்விழா தற்போது வட இந்தியாவில் மட்டுமில்லை தென் இந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Raksha Bandhan, Relationship Tips

அடுத்த செய்தி