ஊடலும், கூடலும் சேர்ந்தது தான் காதல். சங்க இலக்கியங்கள் தொடங்கி, சமீபத்தில் வெளியாகும் திரைப்படங்கள் வரை காதலர்களுக்கு இடையேயான சிக்கல்களை பேசியிருக்கிறது. பேசிக்கொண்டும் இருக்கிறது. ஆனால் பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை. அதுதான் காதலின் அழகியலும் கூட. ஊடல் கூட காதல் என்றாகுமே என்ற பாடல் வரியைக் கூட்டிருப்போம். காதலில் பிரச்சனைகள் பிரச்சனையில்லை, அதனை சரியாக புரிந்துகொள்ளாமல் இருப்பது தான் பிரச்சனை.
இந்த உலகம் பல காதல்களைக் கண்டிருக்கிறது. ஒருவர் பல முறை காதல் வயப்பட்டிருக்கலாம். இப்படி எவ்வளவு இருந்தாலும் காதலுக்கு அனுபவம் ஒருபோதும் கை கொடுப்பதில்லை. காரணம் ஒவ்வொரு காதலில் ஏற்படும் பிரச்சனைகள் வெவ்வேறானவை. 'சிறிய புறாவுக்கு போரா?' என வடிவேலுவின் டயலாக் போல சிறு சிறு பிரச்சனைகளுக்குக் கூட காதலர்கள் பிரிவதைப் பார்த்திருப்போம். பின்னாளில் இது குறித்து 'வட போச்சே' என்பது போல அவசரப்பட்டு விட்டோமே என வருந்துவர்.
காதலில் பிரச்சனையென்றால் உடனே பிரேக் அப் பற்றி சிந்திக்காமல் கீழ் காணும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
முதன் முதலில் உங்கள் காதலரைப் பார்த்தபோது, அவரிடம் ஈர்த்தது என்ன?
நீங்கள் உங்கள் காதலரை (காதலன்/காதலி) முதன் முதலில் சந்தித்த நாளை நினைத்துக்கொள்ளுங்கள். அவரை முதன்முறை பார்த்த போது ஏன் அவரைப் பிடித்தது ? என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். நீண்ட நாட்களில் ரிலேசன்ஷிப்பில் இருக்கும்போது தங்கள் காதலரை முதன்முதலில் காதலரை எப்படி பார்த்தோமோ, அப்படி தற்போது காணத் தவறுகிறோம். அது தான் பிரச்சனைகளுக்கு காரணம்.
எனது முன்னுரிமைகள் என்ன ?
உங்கள் காதலருக்கான குறிக்கோள்களை நீங்களும் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எதிர்காலம் குறித்த உங்களது குறிக்கோள்களில் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருக்க வேண்டும். அதனை இருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இது உங்களது காதலர் உங்களுக்கு ஏற்றவரா? என்பதை அறிய முடியும்.
நீங்கள் நேசிக்கப்படுபவர்களா உணர்கிறீர்களா ?
காதலர்கள் ஒவ்வொருவரும் வித விதமாக காதலை வெளிப்படுத்துவர். உங்களைப் போலவே உங்களது காதலரும் காதலை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் இருவரும் காதலை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் ? பெறுகிறீர்கள் ? என்பது முக்கியம்.
உங்களுக்கும் உங்கள் காதலருக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் பிரச்சனை இருக்கிறதா?
நீங்கள் உங்கள் காதலரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. உங்கள் இருவரும் பிரச்சனைகளை கூறுவதில் வெவ்வேறு முறைகளைக் கொண்டிருக்கலாம். அது உங்கள் உறவைக் காப்பாற்றக் கூடும். பிரச்சனைகளை பேசும்போது ஒரே முறையில் பிரச்சனைகளை பேச முடியாவிட்டால் பரவாயில்லை. இது வெவ்வேறு வழிகளில் சிறந்ததாக இருக்கலாம்.
Toxic People: உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டிய நபர்கள் யார் தெரியுமா?
எனக்காக நான் சிந்திக்க வேண்டுமா?
உங்களது காதலரும் எந்த தவறும் செய்திருக்க மாட்டார். ஆனால் உங்களுக்கு தனிமை தேவைப்படும். அதற்காக பிரேக் அப் செய்யலாம் என கருதுகிறீர்கள். உங்கள் நேரத்தை, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்காக செலவிட்டு அதன் மூலம் உங்கள் சரி செய்துகொள்ளலாம். மேலும் எதிர்காலத்தில் அடுத்த காதலரை தேர்ந்தெடுப்பதில் இன்னும் தெளிவான முடிவெடுக்க முடியும்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?
பிரேக் அப் செய்வதற்கு முன்பு மிக முக்கியமாக உங்களிடம் நீங்கள் மகிழச்சியாக இருக்கிறீர்களா ? அல்லது புதிய ரிலேசன்ஷிப்பிற்காக ஏங்குகிறீர்களா என கேட்டுக்கொள்வது முக்கியம்.
கொரோனா காலத்தில் தம்பதிகள் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்கள் மற்றும் சவால்கள்!
நான் என்ன இழக்கப்போகிறேன்?
பிரேக் அப்பிற்கு பிறகு என்ன பிரச்சனைவரும் என்பதை சிந்தியுங்கள். காதல், தோழமை, உணர்வுப்பூர்வமான தொடர்பு, ஆகியவற்றை இழப்பதாக நீங்கள் நினைத்தால், கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுத்துப்பாருங்கள். ஆனால் மன ஆரோக்கியத்திற்கும், சுயமரியாதைக்கும் பிரச்சனை என்றால் ரிலேசன்ஷிப்பில் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Love, Love breakup, Relationship