முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உறவுகளில் விரிசலை உண்டாக்கும் குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவருவது எப்படி..?

உறவுகளில் விரிசலை உண்டாக்கும் குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவருவது எப்படி..?

சுய குற்ற உண்ர்ச்சி

சுய குற்ற உண்ர்ச்சி

சில சமயங்களில் இந்த மன அழுத்தம் அதிகமாகி அந்த நபர், தான் காதலுக்கு பொருத்தமான நபர் இல்லை, தகுதியான நபர் இல்லை என்று தன்னைத்தானே குறைவாக நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய காலத்தில் காதல் அல்லது திருமண வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு தம்பதிகள் அடிக்கடி குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றனர். இந்த குற்ற உணர்ச்சியானது ஒருவருக்கு பல்வேறு காரணங்களினால் உண்டாகிறது. சில நேரங்களில் தங்களுடைய துணைக்கு தெரியாமல் ஏதேனும் ஒரு தவறான காரியத்தை செய்து விடுவதும், அல்லது அவர்கள் விரும்பாத ஏதேனும் ஒரு செயலை செய்வதும் நாளடைவில் மனதில் குற்ற உணர்ச்சியை அதிகரித்து விடுகிறது.

இவை மெதுவாக அவரது மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கி மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். இதன் காரணமாக அதிக அளவில் மன அழுத்தங்கள் உண்டாவது முதல் உறவிலும் விரிசல்கள் ஏற்படுவது வரை பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த கூடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இது போன்ற பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கு சில எளிய வழிமுறைகளை உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதைப் பற்றி பேசிய உளவியல் நிபுணர் டேவிட் என்பவர் கூறுகையில், ஆம்னி போட்டென்ட் ரெஸ்பான்சிபிலிட்டி மற்றும் கில்ட் ஃபீலிங், அதாவது அதிக அளவிலான பொறுப்புகள் மற்றும் குற்ற உணர்ச்சிகள் தான் இன்று உறவுகளில் அதிக விரிசலை உண்டாக்குகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

இதைப் பற்றி பேசிய பேராசிரியர் சூசன் கிராஸ் என்பவர் கூறுகையில், இந்த அதிக அளவிலான பொறுப்புகள் என்பது ஒரு தனிநபர், தன்னுடைய துணை அல்லது மற்றொருவரின் பிரச்சனைகளை சரி செய்யும் பொறுப்பை தனது தலையில் சுமத்திக் கொள்ளும் போது உண்டாகும் ஒரு பிரச்சனை என குறிப்பிடுகிறார். முக்கியமாக தனக்கு மிகவும் அன்பான ஒருவரின் பிரச்சனையை சரி செய்யும் பொருட்டு, மற்றொரு நபர் அந்த பிரச்சனையை தனது மனதிற்குள் போட்டு குடைந்து, எவ்வாறு தனது துணையை நல்வழிப்படுத்துவது என்று தனக்குத்தானே அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார். இது நாளடைவில் உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது என கூறுகிறார்.

இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் எனில் உறவில் இருக்கும் இரண்டு நபர்களுமே தங்களது பிரச்சினையை தானே சரி செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் தங்களது துணையின் மீது அதிகப்பட்ச பாரத்தையும், மன அழுத்தத்தையும் உண்டாக்கி உறவில் விரிசல் ஏற்படுத்துவது தடுக்கப்படும் என குறிப்பிடுகிறார்.

Also Read : எமோஷனல் மெச்சூரிட்டியுடன் நடந்துகொள்ளும் வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வது ஏன் அவசியம்..?

சில சமயங்களில் இந்த மன அழுத்தம் அதிகமாகி அந்த நபர், தான் காதலுக்கு பொருத்தமான நபர் இல்லை, தகுதியான நபர் இல்லை என்று தன்னைத்தானே குறைவாக நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார். எனவே இது போன்ற குற்ற உணர்ச்சியில் சிக்கிக் கொண்டுள்ள நபர்கள் தங்களது சுயமரியாதையை அதிகரித்துக் கொள்ளும்படியான செயல்களில் ஈடுபட்டு தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். தங்களது தகுதிகளை வளர்த்துக் கொள்வதன் மூலமே இதிலிருந்து எளிதாக விடுபட்டு, உறவை நன்றாக வளர்க்க முடியும் என்று கூறுகிறார்.

First published:

Tags: Relationship Counselling, Relationship Fights, Relationship Tips, Toxic Relationship