திருமணம் என்பது வாழ்வை சந்தோஷமாக்க வேண்டிய ஒரு நிகழ்வு. ஆனால் பல காரணங்களால் சிலரது வாழ்வில் அது வெறும் சடங்காகவே கடந்து செல்கிறது, கூடவே வாழ்க்கையை புரட்டி போட கூடிய பல பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
சாதாரணமாக தம்பதிகளிடையே 2 முதல் 4 வரை வயது வித்தியாசம் இருப்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ உதவும். அதுவே 6 முதல் 8 வயது வரை என்றால் கொஞ்சம் கூடுதல் கவனம் தம்பதியரிடையே தேவைப்படும். ஏனென்றால் டிவி பார்ப்பது, பாட்டு கேட்பது, விரும்பிய உடை உடுத்துவது என இருவரின் ரசனையிலும் நிச்சயம் பெரிய வித்தியாசம் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சூழ்நிலை காரணமாகவோ அல்லது ஒருவரை ஒருவர் விரும்பியோ மிக அதிக வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொள்வர்.
இந்த மாதிரி சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதை நாம் செய்திகளில் கூட பார்த்திருப்போம். உதாரணமாக அறுபதை கரம் பிடித்த 20. இது மாதிரியான வினோத சம்பவங்களில் ஆணும்,பெண்ணும் பார்த்து, பேசி, விரும்பி,ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு திருமணம் செய்திருந்தாலும் கூட குறைந்த வயது வித்தியாசம் உள்ள தம்பதியரை விட, மிக அதிக வயது வித்தியாசம் இருந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதி இடையே ஒருகட்டத்தில் வயது வித்தியாசம் காரணமாக பல தீவிர பிரச்சனைகள் எழும். ஏனென்றால் இது தான் யதார்த்தம்.
காலத்துக்கும் கடந்து நிற்க கூடிய வாழ்வை அதிக வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகளால் பெரும்பாலும் வாழ முடிவதில்லை. அதிக வயது வித்தியாசம் கொண்ட ஜோடிகள் தங்களுக்குள் பிரச்னையை எதிர்கொள்ளும் முன், சமூகத்தினால் அவமதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
சமூகத்தின் பார்வை:
பொதுவாக மிக அதிக வயது வித்தியாசம் கொண்ட தம்பதியரை இந்த சமூகம் கேலியாகவும், வித்தியாசமாகவும் தான் பார்க்கும். பாலியல் ஆசைகளின் அடிப்படையில் மட்டுமே ஜோடி சேர்ந்துள்ளதாக விமர்சிப்பார்கள். வயது குறைவான பெண்ணை, மிக அதிகமான வயதுடையவருக்கு பணத்தாசை காரணமாக கட்டி வைத்து விட்டனர் என்று பெண்ணின் பெற்றோர் குறித்தும் மக்கள் கருத்து கூறுவார்கள்.
பெண்களே...ஆண்களின் கவனத்தை ஈர்க்க நீங்கள் செய்யும் இந்த விஷயங்களை அவர்கள் விரும்புவதில்லை.!
பிரச்சனைக்கு இது தான் காரணம்.!
வயது வித்தியாசம் அதிகம் உள்ள தம்பதியரின் திருமண வாழ்வில் சிறிய சிக்கல் ஏற்பட்டால் கூட, அது அக்கம்பக்கத்தினருக்கோ அல்லது உறவினர்களுக்கோ தெரிய வரும் போது அதிக வயது இடைவெளி தான் பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்று அவர்களையே குற்றம்சாட்டி நோகடிப்பார்கள். விமர்சிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விட கூடாது என்பது போல அனைவரும் இதையே கூறி தம்பதியர் இடையே பிளவை பெரிதுபடுத்தி விடுவார்கள்.
தலைமுறை இடைவெளி.!
தம்பதியர் இடையே 30 வயது 40 வயதெல்லாம் இடைவெளியாக இருப்பின் அவர்களுக்கு இடையே பிரச்சனைகள் எழ வெளியாட்கள் தேவை இல்லை. நாம் முன்பே கூறியது போல இருவரும் முற்றிலும் வேறுபட்ட தலைமுறையை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குமான மனநிலை மற்றும் கருத்துக்கள் வேறுபட்டிருக்கும். வாக்குவாதம் மற்றும் சண்டைகளின் போது இவை வெளிப்பட்டு சிக்கல்களை மேலும் பெரிதாக்கும்.
குழந்தை விவகாரம்..
அதிக வயது வித்தியாசம் உள்ள தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். தம்பதியரில் வயது குறைவாக உள்ளவர் குழந்தை பேறு வேண்டும் என்று விரும்பும்போது, வயது மூத்தவர் அதில் நாட்டம் இல்லாமல் இருப்பது அவர்களது திருமண வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தி பெரிய விவாதங்களுக்கு வழிவகுக்கும்.
இல்லற வாழ்வில் ஏமாற்றம்.!
விஞ்ஞானம் பன்மடங்கு முன்னேறியுள்ள தற்போதையை நவீன காலத்தில் ஆணோ ,பெண்ணோ 50 வயதி கடந்தாலும் கூட அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் வயது வித்தியாசம் அதிகம் உள்ள தம்பதியர் இடையே காணப்படும் பொதுவான பிரச்சனை இருவரிடையே பாலியல் இணக்கத்தன்மை இல்லாமல் போவது.
தம்பதியரில் வயது அதிகம் உள்ளவர் துவக்கத்தில் தன் துணைக்கு ஈடு கொடுத்தாலும் காலப்போக்கில், பாலியல் ஆசை குறையும். இதனால் சிறிய வயது துணை தவறான நெருங்கிய உறவை ஏற்படுத்தி கொள்ள கூடும். இது தம்பதியரிடையே நிரந்தர பிரிவை ஏற்படுத்தி விடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.