கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

சித்திரவதை : உணர்ச்சி அல்லது உடல் ரீதியான துன்பங்களை அல்லது சித்தரவதைகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. காமெடிக்காக அடித்தல், திட்டுதல் உங்களுக்கு கஷ்டமாக இருந்தாலும், அவர்கள் எள்ளி நகையாடுவார்கள். உங்களின் உணர்ச்சிகளை புறந்தள்ளும் அவர்களிடம் இருந்து நீங்கள் விலகியிருத்தல் நல்லது. கனிவாக கூறியும் கேட்கவில்லை என்றால், கண்டிப்புடன் கூறிவிடுங்கள். சித்திரவதையை பொறுத்துக் கொள்ள வேண்டாம்.

சண்டையில் இருவருக்கும் இடையிலான புரிதல் அதிகரிக்க வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றுக்கு ஒரு எல்லை உண்டு.

  • Share this:
தம்பதிகள் மற்றும் காதலர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவது இயல்பு என்றாலும், ஒரு சில சமயங்களில் கோபத்தில் நிகழும் வாக்குவாதங்கள் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். சண்டையில் இருவருக்கும் இடையிலான புரிதல் அதிகரிக்க வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றுக்கு ஒரு எல்லை உண்டு. அதனை கடக்கும்போது பிரியமானவர்களைகூட பிரிய நேரிடும். அதனால், இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வருவதை தடுக்க நிபுணர்கள் சில வழிமுறைகளை கூறுகின்றனர். இதனை பின்பற்றும்போது நிச்சயமாக உங்கள் உறவில் எழும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.


பிரச்சனைகளை திசைதிருப்ப கூடாது : தம்பதிகளுக்கு இடையில் பிரச்சனைகள் எழும்போது கடந்த கால தவறுகளை முன்வைத்து பேசுவது வாடிக்கையாக வைத்திருப்பார்கள். ஆனால், நிகழ்காலத்தில இருக்கும் பிரச்சனைகளை கவனம் செலுத்துவதை விடுத்து, சண்டையின்போது பழைய பிரச்சனைகளை அதிகம் பேசி மேலும் வாக்குவாதங்களை வளர்ப்பார்கள். இது எந்தவகையிலும் பயன்தராது என்பதால், பழைய தவறுகளை பேசுவதை விடுத்து, தற்போதைய பிரச்சனையில் கவனம் செலுத்தி அதற்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள். சண்டையின்போது முடிந்தளவுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வு உடனடியாக கிடைக்காவிட்டாலும், கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். ஆக்ரோஷம் குறையும்போது, தீர்வுகள் எளிமையாக கிடைக்கும்.


உரக்க சொல்லிக்கொள்ளுங்கள் : உங்கள் பார்ட்னர் விரும்பும் அல்லது கூறும் விஷயங்களை புரிந்துகொள்வதற்காக, அதனை உங்களிடம் நீங்களே சத்தமாக சொல்லிக்கொள்ளுங்கள். ஒரு விஷயத்தை சத்தமாக சொல்லும்போது மனித மூளையானது எளிதில் கிரகித்துக்கொண்டு, அதற்கேற்ப நம் செயல்பாடுகளை செய்ய தூண்டும். அவர்கள் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் என்ற ஆதங்கம் இருக்கும். உங்களுக்கு சரி என நினைக்கும் கருத்துக்களை, கோபத்துக்காக ஏற்றுக்கொள்ள மறுக்காதீர்கள். இது இருவருக்கும் இடையே பரஸ்பர புரிதலை அதிகப்படுத்தும்.


’நான்’ என்ற வார்த்தையை தவிருங்கள் : வாக்குவாதங்கள் அல்லது சண்டையின்போது ஒருமையில் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு செயலை அல்லது பிரச்சனையை குறிப்பிட்டு பேசும்போது 'நான்' தோரணையில் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. இது உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தை மேலும் விலக்கும். அவருடைய வாழ்வில் நான் இல்லை என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்யும். உங்களைப்போல் அவரும் வார்த்தைகளை உபயோகித்தால், பிரச்சனைகள் முடிவை ஒருபோதும் எட்டாது. நாம் என்ற வார்த்தைகளை குறிப்பிட்டு அனைத்து பிரச்சனைகளையும் பொறுமையாக பேசுங்கள். குரலை உயர்த்தி ஆதிக்கம் செலுத்துவதை தவிர்ப்பது எப்போதும் நல்லது.


emotional abuse
தவறான வார்த்தைகளை தவிர்த்தல் : பிரச்சனைகளின்போது பெரும்பாலான தம்பதிகள் பேச வேண்டிய விஷயங்களை விடுத்து தவறான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இருவருக்கும் இருக்கும் பரஸ்பர அன்பில் இது மேலும் விலகலை ஏற்படுத்தும் என்பதால், தவறான வார்த்தைகள் உபயோகத்தை தவிர்க்க வேண்டும். எந்தநேரத்தில் மனித மனம் வெடிக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. நீங்கள் பேசும் சிறிய வார்த்தையும் உங்கள் பார்ட்னருக்கு அதிக கோபத்தை வரவழைக்க வாய்ப்புகள் உள்ளதால், வாக்குவாதங்களின்போது பேசும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.


ஆழ்ந்த சுவாசம் எடுத்தல் : சண்டையின்போது உங்களின் சொற்கள் கட்டுபாடு இல்லாமல் வருகிறது என யூகிக்கும்போது உடனடியாக ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் பேச வேண்டியவற்றை அமைதியாக எடுத்துகூற முடியும். எத்தகைய நிலையிலும், உங்களை நீங்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டால், பிரச்சனைகளை அமைதியாகவும், எளிமையாகவும் எதிர்கொள்ளலாம். ஒருவர் பொறுப்பாகவும், அமைதியாகவும் பேசும்போது, கோபத்தில் இருக்கும் உங்கள் பார்ட்னரும் இறங்கி வந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பார். பொறுமை மற்றும் நிதானம், விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றை தம்பதிகள் எப்போதும் கடைபிடிக்க வேண்டும். உடனடியாக எதற்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்க வேண்டாம். அதற்கான காலம், சூழல் அமையும் நேரத்தில் உங்கள் பார்ட்னரும் புரிந்துகொள்வார்கள்.



Published by:Sivaranjani E
First published: