ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

”எங்களுக்கு நிம்மதியான ஓய்வு வேண்டும்” - அன்னையர் தின கணக்கெடுப்பில் அம்மாக்கள் கேட்ட பரிசு

”எங்களுக்கு நிம்மதியான ஓய்வு வேண்டும்” - அன்னையர் தின கணக்கெடுப்பில் அம்மாக்கள் கேட்ட பரிசு

அன்னையர் தின கொண்டாட்டம்

அன்னையர் தின கொண்டாட்டம்

Mothers Day 2022 : தூக்கத்துக்கு அடுத்தபடியாக, சமைக்க வேண்டாம், உணவு பரிசாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கோரியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலகிலேயே தன்னலமற்ற உறவு என்றால் அது அம்மாதான்! இந்த காலத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட ஒரு நாள் ஒதுக்கப்பட்டு பெரிய அளவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அம்மாக்கள் தினம் என்றால் கேட்க வேண்டுமா என்ன?

அன்னையர் தின கொண்டாட்டம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று வருகிறது. இந்த ஆண்டு மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. முதல் வரியில் கூறியுள்ளது போல, சுயநலம் இல்லாத ஒரு உறவு என்பது அம்மா மட்டும் தான். தங்கள் குழந்தைகளுக்காக தன்னுடைய ஆசைகளை, கனவுகளை தொலைத்த அம்மாக்கள் பலர் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு மத்தியில் சில ஆண்டுகளுக்கு, முன் அதாவது முந்தைய தலைமுறையில் கணவன் மற்றும் குழந்தைகள் என்றே வாழ்ந்தவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.

திரைப்பட வசனமாகத் தோன்றலாம், ஆனால், பெரும்பாலான அம்மாக்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் கூட நீங்க நல்ல இருந்தா போதும் என்று கூறுவார்கள். தற்போது இந்த சூழல் மாறி வருகிறது! பெண்களுக்கு தங்களுக்கு என்ன வேண்டும் என்ற புரிதல் இருக்கிறது. தங்கள் கனவுகளை நனவாக்க செயல்பட்டு வருகிறார்கள். முன்பு போல இல்லாமல் அம்மாவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும், அம்மாவை ஸ்பெஷலாக கவனிக்க வேண்டும் என்றும் பலர் நினைக்கிறார்கள். நிஜமாகவே இந்த சூழல் மாறி இருக்கிறதா அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலத்தான் உலகம் முழுவதும் அம்மாக்கள் இருக்கிறார்களா என்பதை ஒரு ஆய்வு மூலம் நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

அன்னையர் தினத்துக்கு என்ன பரிசு வேண்டும் என்று 1000 அம்மாக்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக பெரும்பாலானவர்கள் ஒரே ஒரு விஷயத்தை தான் பரிசாக வேண்டுமென்று கூறியுள்ளார்கள்.

அன்னையர் தின பரிசாக அமைதியாக நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இவர்களில் 66% முழு நேர வேலையில் இருப்பவர்கள் மற்றும் மீதம் உள்ளவர்கள் குடும்பத்தலைவியாக இருப்பவர்கள்.

கர்ப்ப காலத்தில் இந்த ஸ்கின்கேர் பொருட்களை அப்ளை செய்தால் குழந்தைக்கும் ஆபத்தா..?

இந்த கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெறவில்லை என்பதும் இங்கே முக்கியம். வளர்ந்த நாடான, பொருளாதாரத்தில், வணிகத்தில், வாழ்க்கை முறையில் என்று எல்லாவற்றிலும் வளர்ந்த, முன்னுதாரணமாக கருதப்படும் அமெரிக்காவில் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள் நிம்மதியாக தூங்க வேண்டும், தூங்க நேரம் வேண்டும் என்றே கூறியுள்ளனர்.

தூக்கத்துக்கு அடுத்தபடியாக, சமைக்க வேண்டாம், உணவு பரிசாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கோரியுள்ளனர். மூன்றாவதாக, வீட்டை சுத்தம் செய்து கொடுப்பது பரிசாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

பரிசு அட்டைகள், வாழ்த்து, பிடித்த பொருள் என்பதெல்லாம் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு ஒருசிலர் மட்டும் தான் பரிசாக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இப்பொழுது கூட தங்கள் வேலை சுமையை குறைப்பதை தான் அம்மாக்கள் பரிசாக கேட்டுள்ளனர். மேலும் இந்த கணக்கெடுப்பில் அம்மாக்கள் தினம் அன்று ஒரு நாள் குழந்தையை விட்டு நீங்கள் உங்கள் விருப்பம் போல செலவிடலாம், அதற்கு நீங்கள் உங்களுக்கு சம்மதமா என்ற கேள்விக்கு 66% சரி என்று கூறியுள்ளனர். ஒரு நாள் ஓய்வு என்பது தான் அம்மாக்கள் விரும்பும் அன்னையர் தின பரிசு!

Published by:Sivaranjani E
First published:

Tags: Mothers day, Sleep