உங்களிடம் வந்து காதலை சொல்பவர் அல்லது உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருக்கிறது என்று ரொமேன்டிக் ப்ரபோஸ் செய்பவர்களை நீங்கள் வாழவில் எதிர்கொண்டிருக்கலாம். அல்லது இனி எதிர்கொள்ள நேரிடலாம்.
அப்போது அவர் மீது உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை என்பதையோ அதற்கான சரியான நேரம் இதுவல்ல என்பதையோ அவர் மனதை புண்படுத்தாமல் நிராகரிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. ஏனென்றால் மனிதர்களின் நடத்தைகள் புரிந்து கொள்ள மிகவும் சிக்கலானவை. அவர்களது ப்ரபோஸலுக்கு உங்கள் தரப்பிலிருந்து நீக்கல் எந்த பாசிட்டிவ் ரியாக்ஷனும் கொடுக்காமல் வழக்கம் போல பழகினாலும் கூட, அவர்களை நீங்கள் ஏற்றுக்கொண்டு விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பார்கள்.
உங்களிடம் வந்த ப்ரபோஸலை நீங்கள் நிராகரிக்க முடிவு செய்து விட்டால், அதை உரியவரிடம் மிக கண்ணியமான முறையில் வெளிப்படுத்துவது சிறந்தது. உங்களுக்கு விருப்பமில்லா நபர் உங்களிடம் அவரது காதலை முன்மொழியும் போது, உங்களது நிலையை எப்படி பணிவாக சொல்வது என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஒருவரின் ப்ரபோஸலை கண்ணியமாக நிராகரிப்பதற்கான வழிகள் இங்கே...
சீக்கிரமே சொல்லி விடுங்கள்:
ஒருவர் உங்களிடம் வந்து தன் காதலை அல்லது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினால், அதற்கு பல நாட்கள் காத்திருந்தது அவரை நிராகரிக்கும் முடிவை சொல்லாதீர்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களது மவுனத்தை அவர் சம்மதம் என்று எடுத்து கொண்டு கற்பனையில் மிதந்து கொண்டிருக்கலாம். பின் உங்களது நோ என்ற பதில் அவரை அதிகம் காயப்படுத்தும். எனவே பல நாட்கள் காத்திருக்காமல் அவர்களது ப்ரோபொசலை விரைவாக நிராகரிப்பது சிறந்த வழி.
பண்புகளை குறிப்பிடாதீர்கள்:
தங்கள் பண்புகள் மற்றும் உடல் அம்சங்கள் தொடர்பான குறைபாடுகளை சுட்டி காட்டுவதை யாரும் விரும்புவதில்லை. உங்களிடம் ப்ரபோஸ் செய்யும் நபரின் சில மோசமான பண்புகளை காரணம் காட்டி அவரை நிராகரிக்காதீர்கள்.
நட்பு:
உங்களிடம் ப்ரபோஸ் செய்யும் நபர் ஏற்கனவே உங்கள் நண்பராக இருந்தால், நிராகரிப்பிற்கு பின் இருவருக்குமான நட்பு பாதிக்கக் கூடாது என்ற உண்மையை எடுத்து கூறுங்கள்.
தெளிவான தகவல் தொடர்பு:
ஒருவரை நிராகரிப்பதற்கான சிறந்த வழி உங்கள் உணர்வுகளை தெளிவாக மற்றும் சுருக்கமாக வெளிப்படுத்துவதாகும். ஏனென்றால் கண்ணியமாக நிராகரிக்கும் முயற்சியில், சிலர் தேவைக்கு அதிகமான விஷயங்களை சொல்லி விடுகிறார்கள். உதாரணமாக என் வாழ்க்கை தற்போது இருக்கும் நிலையில் காதல் அல்லது ரிலேஷன்ஷிப் தேவையற்றது என்பது போல காரணங்களை சொல்வது கண்ணியமாக நிராகரிக்க சரியான வழியல்ல.
உங்களை அந்த இடத்தில் வைத்து யோசியுங்கள்:
நீங்கள் ஒருவரிடம் ப்ரபோஸ் செய்தால் அவருக்கு உங்கள் மீது விருப்பம் இல்லையெனில் அவர் உங்களை எப்படி நிராகரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படி உங்களிடம் ப்ரபோஸ் செய்பவரை நிராகரியுங்கள். குறிப்பாக ஒரு நபரை நீங்கள் நேரடியாக நிராகரிக்கவும்.
Also Read : புதிய லைஃப் பார்ட்னருடன் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதற்கான வழிகள்..!
பாராட்டுக்கள்:
உங்களை விரும்பும் ஒருவரை நிராகரிப்பதற்கான எளிய தந்திரம் சில உண்மையான பாராட்டுக்களை முன்வைத்து டீசென்டாக அவரை நிராகரிப்பது. உதாரணமாக நீங்கள் அவரது ப்ரபோஸலை நிராகரிக்கும் முன் அவரிடம் நீங்கள் விரும்பும் நல்ல விஷயங்களை முதலில் கூறி பாராட்டி விட்டு, ஆனால் உங்களுக்கு ரிலேஷன்ஷிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறலாம்.
மன்னிப்பு:
ஒருவரை எப்படி நேர்த்தியாக நிராகரிப்பது என்பதில் நீங்கள் தேர்ச்சி பெற விரும்பினால் உங்கள் நிராகரிப்பை கூறும் போது நீங்கள் மன்னிப்பு கேட்பதைத் தவிர்க்கவும். ஏனென்றால் இது உங்கள் தவறு அல்ல, அதே சமயம் முரட்டு தனமாக நடந்து கொள்ளாதீர்கள்.
உண்மையான காரணம்:
ஒரு நபர் ஏன் நம்மை நிராகரிக்கிறார் என்று தெரியாமல் போவது நிராகரிப்பை விட உண்மையில் மிகவும் வேதனையான ஒன்றாகும். எனவே நீங்கள் எதற்காக குறிப்பிட்ட நபர் நிராகரிக்கிறீர்கள் என்பதற்கான உண்மையான காரணத்தை நேரடியாக அவரிடம் சொல்லிவிடுவது எப்போதுமே நல்லது.
நேர்மை:
நேர்மையே சிறந்த கொள்கை. நீங்கள் பிறரை காயப்படுத்த விரும்பாத அதே நேரம் ஒருபோதும் நேர்மையில் இருந்து பின்வாங்காதீர்கள். உங்களுக்கு ஏற்கனவே ரிலேஷன்ஷிப் இருந்தால் அதை வெளிப்படையாக, நேராமையாக நீங்கள் நிராகரிக்கும் நபரிடம் கூறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Love, Love proposal