குழந்தை பெற்று கொள்ள திட்டமிடும் தம்பதியர் இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது பலன் தரும்...

கருத்தரித்தல்

நீங்கள் புதிதாக திருமணமானவர் அல்லது திருமணமாகி சில மாதங்கள் ஆனவர் என்றால், உங்கள் குடும்பத்தில் புதிதாக ஒரு சிறிய உறுப்பினரை சேர்க்கும் திட்டத்தில் இருந்தால் நிச்சயம் பின்வரும் விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

  • Share this:
திருமணமான பல தம்பதிகள் குழந்தை உடனடியாக பெற்று கொள்ள திட்டமிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு பொதுவாக பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். எந்த சமயத்தில் உடலுறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு அதிகம் என்பதே தம்பதிகளிடையே பரவலாக காணப்படும் கேள்வியாக இருக்கிறது.

நீங்கள் புதிதாக திருமணமானவர் அல்லது திருமணமாகி சில மாதங்கள் ஆனவர் என்றால், உங்கள் குடும்பத்தில் புதிதாக ஒரு சிறிய உறுப்பினரை சேர்க்கும் திட்டத்தில் இருந்தால் நிச்சயம் பின்வரும் விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். கர்ப்பமாகும் முயற்சியில் இருக்கும் போது பெண்ணின் உடல் எவ்வாறு எவ்வாறு செயல்படுகிறது, அவர்களது மாதவிடாய் சுழற்சி தொடங்கி பல நுணுக்கமான விவரங்களை புரிந்து கொள்வது, மேலும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க சரியான நேரத்தில் தம்பதியர் உறவில் ஈடுபடுவதும் முக்கியம்.

முதல்படி..

குழந்தைக்கு முயற்சி செய்யும் தம்பதியர் செய்ய வேண்டிய முதல் படி மாதவிடாய் சுழற்சியை கண்காணிப்பது. மாதவிடாய் சுழற்சி வரும் தேதி, எதனை நாட்கள் நீடிக்கிறது அடுத்த மாதவிடாய் சுழற்சி எப்போது வருகிறது, மாதவிடாய் சுழற்சி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வருகிறது உள்ளிட்ட தகவல்களை கண்காணித்து குறித்து வைத்து கொள்வது நல்லது. மாதவிடாய் சுழற்சியை மிக துல்லியமாக கண்காணிக்க பல ஆப்ஸ்கள் இருக்கின்றன எனவே அவற்றை பயன்படுத்தி இந்த தகவல்களை எளிதாக குறித்து கொள்ளலாம்.

மாதவிடாய் சுழற்சி:

பெண்கள் அனைவருக்கும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும் மற்றும் அவ்வப்போது மாறும. எனவே குழந்தைக்கு திட்டமிடும் போது ஒரு பெண் தன்னுடைய அண்டவிடுப்பு (ovulation) எப்போது என்பதை தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.கர்ப்பம் தரிக்க எது சிறந்த நேரம்?

நாம் மேலே சொன்னது போல ஒரு பெண் தன்னுடைய அண்டவிடுப்பு நாளை தெரிந்து வைத்து கொண்டு விட்டால், அவரது அண்டவிடுப்பின் முதல் மற்றும் இரண்டாம் நாள் கர்ப்பம் தரிக்க சிறந்த நேரமாக அது இருக்கும்.

கருச்சிதைவுக்குப் பிறகு கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படுமா..? மீண்டும் கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகளுக்கு டிப்ஸ்...

அண்டவிடுப்பு என்றால் என்ன?

கருமுட்டையிலிருந்து ஒரு முட்டை (கருமுட்டை) வெளியேறுவதே அண்டவிடுப்பு என்று குறிப்பிடப்படுகிறது. அண்டவிடுப்பின் போது ஒரு முதிர்ந்த முட்டை கருப்பையில் இருந்து வெளியேறும். அண்டவிடுப்பின் போது வெளியாகும் நல்ல வளமான முட்டை சுமார் 12 முதல் 24 மணி நேரம் இருக்கும். இதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். இது சாதாரண மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இது மாதவிடாய் வருவதற்கு 14 நாட்களுக்கு முன்பு நிகழ்கிறது.அண்டவிடுப்பு எப்போது என்று எப்படி தெரிந்து கொள்வது?

மாதவிடாய் சுழற்சியின் 14-வது நாளில் அண்டவிடுப்பு பொதுவாக நிகழ்கிறது என்றாலும் இது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. கருத்தரிக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தங்களது அண்டவிடுப்பு நாளை துல்லியமாக தெரிந்து கொள்ள உதவும் வகையில் பல ஆப்ஸ்கள் இருக்கின்றன. அவற்றில் உங்கள் மாதவிடாய் சுழற்சி பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் கொடுப்பதன் மூலம் அடுத்த அண்டவிடுப்பு நாள் எப்போது வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அறிகுறிகள்:

அண்டவிடுப்பின் முன்னும் பின்னும் ஹார்மோன் மாற்றங்கள் முழு உடலையும் பாதிக்கும். இதனை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் உள்ளன. மார்பக வலி அல்லது திடிரென மென்மையாவது, இடுப்பு அல்லது அடிவயிற்றில் லேசான வலி, லிபிடோ மாற்றங்கள், கருப்பை வாயில் ஏற்படும் மாற்றங்கள், குமட்டல் மற்றும் தலைவலி, அடிப்படை உடல் வெப்பநிலையில் மாற்றங்கள், அதிக வாசனை உணர்திறன், என பல அறிகுறிகள் உள்ளன. கருமுட்டை வெளிவரும் அந்த நாள் அல்லது அதற்கடுத்த 2 நாட்கள் உடலுறவு கொள்வது கர்பமாகவும் வாய்ப்புகளை பன்மடங்கு அதிகரிக்கிறது. குறிப்பாக அண்டவிடுப்பின் 5 நாட்களுக்கு முன்பும் மற்றும் உங்கள் அண்டவிடுப்பின் சரியான நாளிலும் உடலுறவு கொள்வது சரியாக இருக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published: