Home /News /lifestyle /

உங்கள் காதலின் பலவீனம் என்ன..? இந்த ஆப்டிக்கல் இமேஜ் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் காதலின் பலவீனம் என்ன..? இந்த ஆப்டிக்கல் இமேஜ் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் காதலின் பலவீனம்

உங்கள் காதலின் பலவீனம்

ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். ஒவ்வொருவருக்கும் காதலில் குறிப்பிட்ட பலவீனம் இருக்கும். அதை அடிப்படையாக வைத்து நான்கு விதமான இமேஜ்கள் ஒரே புகைப்படத்தில் காணப்படுகின்றன.

நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் (மாயை) புகைப்படம் உள்ளது. அதில் உங்களுக்கு முதலில் தெரிந்தது என்ன? நீங்கள் புகைப்படத்தில் முதலில் எதைப் பார்த்தீர்கள் என்பதன் அடிப்படையில், உங்களுடைய காதலில் எது பலவீனம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த புகைப்படத்தை ஒலேக் ஷுப்லைக் என்பவர் வடிவமைத்துள்ளார். ஒலேக் அற்புதமான இல்யூஷன் புகைப்படங்களை உருவாக்கும் கலைஞர். பின்வரும் புகைப்படத்தில், மாஸ்க் அணிந்த ஒரு பெண்ணின் முகம், ஒரு காதல் ஜோடி, ஒரு காலியான படகு மற்றும் நகரத்தின் காட்சி ஆகிய நான்கு காட்சிகள் உள்ளன.

ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். ஒவ்வொருவருக்கும் காதலில் குறிப்பிட்ட பலவீனம் இருக்கும். அதை அடிப்படையாக வைத்து நான்கு விதமான இமேஜ்கள் ஒரே புகைப்படத்தில் காணப்படுகின்றன. நீங்கள் முதலில் எந்த காட்சியைப் பார்க்கிறீர்களோ, உங்கள் காதல் பலவீனத்தைக் குறிக்கும்.

நீங்கள் முதலில் பார்த்தது முகமூடி அணிந்த பெண் என்றால்

மேலே உள்ள புகைப்படத்தில் மாஸ்க் அணிந்த பெண்ணின் முகம் முதலில் தோன்றினால், நீங்கள் காதலை தேடிச் செல்வீர்கள். நீங்கள் காதலை பெரிதாக விரும்புவீர்கள். எப்போதுமே காதலில் இருப்பதை விரும்புவீர்கள், அதாவது காதலிக்கப்படுவதையும், காதலிப்பதையும் ரசிப்பீர்கள். ஒரு நேரத்தில் பலரின் மேல் ஈர்ப்பு தோன்றும். காதலை விட, காதலிக்கத் தொடங்கும் காலம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். இது தான் காதலில் உங்கள் பலவீனம்.



நீங்கள் முதலில் பார்த்தது ஒரு காதல் ஜோடி என்றால்

ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக நிற்பதை நீங்கள் முதலில் பார்த்தால், காதல் உறவில் உங்களுக்கு பாதுகாப்பும், பத்திரமாக இருப்பதும் அவசியம். அதன் வழியாகவே நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், காதலில் பாதுகாப்பு உணர்வு மற்றும் நம்பிக்கை தோன்றும் வரை, சிங்கிளாக இருப்பீர்கள். இதனால், உங்களுக்கு உங்கள் பார்ட்னர் மீது அவ்வளவு எளிதாக நம்பிக்கை வராது. இதுவே உங்கள் காதல் பலவீனம்.

கோபக்கார கணவனை சமாளிக்க மனைவி செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!

நீங்கள் முதலில் பார்த்தது ஒரு காலியான படகு என்றால்

மேலே உள்ள புகைப்படத்தில் காலியான படகு முதலில் தோன்றினால், நீங்கள் காதலை பல விதமாக எக்ஸ்ப்ளோர் செய்வதை விரும்புவீர்கள். காதலின் தேடலில் முன்பின் அறிமுகம் அல்லாதவர்கள் மீது காதல் வசப்படுவீர்கள். காதல் வாழ்க்கை த்ரில்லாக இருப்பதை விரும்புவீர்கள். சில நேரங்களில் சாகசம் என்பது உங்கள் காதலில் பலவீனமாக இருக்கும்.

நீங்கள் முதலில் பார்த்தது நகரத்தின் காட்சி என்றால்

இரண்டு பக்கத்திலும் கட்டிடங்கள் இருக்கும் நகரத்தை முதலில் பார்த்தால், நீங்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறீர்கள். காதல் தோல்வி அடையுமோ அல்லது காதலிக்கும் நபர் பிரிந்து சென்று விடுவாரோ என்று பயப்படுவீர்கள். நீங்கள் காதலிக்கும் போது, உங்கள் காதலரை சார்ந்தே செயல்படுவீர்கள். மற்றவரைச் சார்ந்து இருப்பது தான் உங்கள் காதலின் பலவீனம் ஆகும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Love

அடுத்த செய்தி