கேள்வி : நம் சமூகத்தில் செக்ஸ் குறித்தான ஆசைகள் மற்றும் விருப்பங்களை வெளிப்படையாகவும், மனித பாலியல் உணர்வுகளை அப்படியே ஏற்றுக்கொண்டும், அதேசமயம் புண்படாத வகையிலும் பேச முடியுமா..? அவ்வாறு பேசுவதால் நம்மை சுற்றியுள்ள தகாத உறவு கொள்ள நினைக்கும், ஏமாற்றும் உறவுகளை அழிக்க முடியுமா..?
பதில் : இது நிச்சயமாக ஒரு நம்பிக்கையான மற்றும் மேம்பட்ட சிந்தனை. ஆனால் இந்த நச்சு கலந்த உறவுகள் பெரும்பாலும் உறவுகளில் சமநிலையற்ற தன்மையை உண்டாக்குகின்றன. ஏன் அதில் ஒருவர் கெட்ட எண்ணம் கொண்ட துணையாகவும் இருக்கலாம் அல்லது சில சந்தர்ப்பங்களில், இருவருமே அப்படி இருக்கலாம். இந்த ஏற்றத்தாழ்வுகள் பல காரணிகளால் உருவாகிறது. அதற்குக் காரணம் சமூகமாக இருக்கலாம் - ஆணாதிக்க கருத்துக்களைக் கொண்டவராக இருக்கலாம். ஆனால் அவை யாவும் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கியது. அப்படி இந்தச் சமூகம் பாலியல் ஆசைகளை ஏற்றுக்கொள்வது, இந்த ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் சில காரணிகளை ஓரளவிற்கு அகற்றும்.
சில நேரங்களில் தம்பதிகளின் நடத்தைக்கு காரணம் பெரும்பாலும் சமூகத்தின் கற்பனைகள், கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளால் ஈர்க்கப்படுகின்றனர். உதாரணமாக, ஒரு பெண் கடந்த காலத்தில் பல ஆண்களுடன் உறவு கொண்டிருந்ததால், அவளை தகாத பெண் என பட்டம் சூட்டி ஒதுக்குகின்றனர்.
இந்த வன்மம் நிறைந்த பாலியல் அணுகுமுறை மற்றும் கருத்துத் திணிப்பு ஒரு உறவில் துயர விஷயங்களைத் தாங்க முயற்சிக்க பெண்களை வற்புறுத்துகிறது. இதேபோல், விருப்பம் அல்லாத ஒரு உறவில் பயத்தின் காரணமாக நிலைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். திருமணத்திற்கு முந்தைய உடலுறவு பற்றிய தடை மற்றும் பயம் பெண்ணின் மதிப்பைக் குறைக்கும் அல்லது ஆண் பெரும்பாலும் அந்த விஷயத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். இல்லையெனில் அவர்கள் விரும்பாத நச்சு உறவுகளில் தங்குவதற்கு வற்புறுத்துகிறார்கள்.
தம்பதிகள் ஒரு தகாத உறவில் இருக்க இவை மட்டுமே காரணம் என்றும் சொல்ல முடியாது. இருப்பினும் சமூகம் உண்மையில் திறந்த நிலையில் இருந்து பாலியல் ஆசைகளையும் பாலினத்தையும் ஏற்றுக்கொண்டால் இவை நிச்சயமாக அழிக்கப்படக்கூடிய காரணிகளாக இருக்கும். இருப்பினும், அனைத்து நச்சு அல்லது தகாத உறவுகளும் அழிய வேண்டுமெனில், சுய அன்பு மற்றும் சிறந்த மனம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
ஒருவரின் மதிப்பு அவர்கள் இருக்கும் உறவாலும் நடத்தையாலும் தீர்மானிக்கப்படுவதில்லை. எப்படி இருந்தாலும் வாழ்க்கை நகர்ந்துகொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு இரவையும் உங்களை தூக்கமில்லாமல் அழ வைக்கும் அந்த நபர் உங்கள் வாழ்க்கையில் இல்லை என்றாலும் நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருப்பீர்கள். நீங்கள் அவ்வாறு தனிமையில் இருக்கிறீர்கள் எனில் நீங்கள் அந்த உறவில் அன்பாகவும், உண்மையாகவும் இருந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அந்த அன்பைம் பெற அவர் தகுதியில்லாதவராக இருக்கலாம். இன்னும் அதையே நினைத்துக்கொண்டிருக்காமல் கடந்துவந்தால் அவர்களை விட பண்மடங்கு அன்பு செலுத்த பல விஷயங்கள், உண்மையான உறவுகள் கண்ணுக்குத் தெரியும்.
நீங்கள் இன்னும் வீழ்ந்துவிடவில்லை. உங்களுடைய வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் முடிந்துவிட்டது. அதிலிருந்து மீட்க யாரும் வர மாட்டார்கள். நீங்களாகத்தான் எழ வேண்டும். முதலில் உங்களை நீங்கள் மனப்பூர்வமாக காதலிக்க வேண்டும்.