ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை காதலிக்க முடியுமா? அது உண்மையான காதலாக இருக்குமா..? பதில் இதோ...

ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை காதலிக்க முடியுமா? அது உண்மையான காதலாக இருக்குமா..? பதில் இதோ...

மாதிரி படம்

ரே நேரத்தில் பல பேரை காதலிக்க முடியும். அது பணம் போன்றது. உள்ளுக்குள் இருக்கும் காதலை செலவழித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.

  • Share this:
கேள்வி : ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை காதலிக்க முடியும் என நினைக்கிறீர்களா..? அதுவும் ஒரே அளவில் அன்பு, வீரியம் என அதே தீவிரத்துடன் இருவரையும் காதலிக்க முடியுமா..? எனக்கு இதற்கான விடை சொல்லுங்க பிளீஸ்...

பதில் : ஆம், நிச்சயம் முடியும். ஒரே நேரத்தில் பலரைக் காதலிக்க இயற்கையில் அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அதுவும் நீங்கள் சொல்வதுபோல் அதே காதல், அதே வீரியம் அதே தீவிரத்துடன் காதலிக்க முடியும். ஆனால் திருமண வெறி கொண்ட இந்த சமூகம் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளாது. அதோடு நீங்கள் அந்த காதலில் நேர்மையாகவோ, உண்மையாகவோ இல்லை என்று குற்றம்சாட்டும்.

ஒரே நேரத்தில் பல காதல் என்பதை கிரேக்க மொழியில் polyamorous என்னும்  வார்த்தையால் வர்ணிக்கின்றனர். இதன் அர்த்தம் என்னவெனில் காதல் என்பது ஒருவருடன் முடியும் விஷயமல்ல..அது பரந்துபட்டது. ஒரே நேரத்தில் பல பேரை காதலிக்க முடியும். அது பணம் போன்றது. உள்ளுக்குள் இருக்கும் காதலை செலவழித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். ஏன் ஒரே நேரத்தில் உங்களால் பெற்றோர்கள், நண்பர்கள், சகோதர சகோதரிகள் மீது அன்பு இருப்பதில்லையா..? குறிப்பாக பெற்றோர் இரண்டு குழந்தைகளைப் பெற்று இருவர் மீதும் ஒரே அன்பு செலுத்துவதில்லையா..? இந்த அன்பில் உண்மை இருக்கிறதெனில் அதிலும் உண்மை உள்ளது.சமூகப் பாதுகாப்பு, நிலையான குடும்ப வாழ்க்கை, தந்தைவழி அடையாளத்தை பெற ஒற்றுமையாக இருக்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பெண் அவனுடன் மட்டுமே உடலுறவு கொண்டு, குழந்தை பெற்று, அந்த குழந்தை சட்டபூர்வமாக இருவருக்குமானது மட்டுமே என்பதை ஒரு மனிதன் அறிந்து கொள்ள வேண்டும் என்பதும் அதில் அடங்கும்.

ஆனால் இன்று குழந்தைகளை தத்தெடுக்கிறோம், குழந்தை இல்லாத தம்பதிகள் உள்ளனர், மேலும் எங்கள் துணையின் முந்தைய திருமணங்களிலிருந்தோ அல்லது உறவுகளிலிருந்தோ குழந்தைகளை விருப்பத்துடன் பெற்றோராக ஏற்று வளர்க்கிறோம். எனவே அதற்கான சாத்தியக் கூறுகள் இன்று மாறிவிட்டன.

மனைவிக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைகிறதா..? உங்களுக்குள் சந்தேகம் எழுகிறதா..?

இருப்பினும் polyamorous என்னும் விஷயமானது நம் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஒத்துவராத விஷயம். குறிப்பாக ஒருவனுக்கு ஒருத்திதான் என்கிற கலாச்சாரத்தை பார்த்து வளர்ந்த பெண்ணுக்கோ ஆணுக்கோ அதில் சற்றும் விருப்பம் இருக்காது. அதேபோல் அவர் உங்களை தீவிரமாக காதலிக்கிறார், உங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார் எனில் உங்களின் மற்றொரு காதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள மாட்டர். குறிப்பு துணையின் விருப்பம் அன்றி இன்னொருவரை காதல் கொள்வது நியாயமற்றது.

இந்த காதல் முறையில் முதல் விதிமுறையே நேர்மைதான். ஆனால் உங்கள் துணைக்கு தெரியாமல் ஏமாற்றி காதல் செய்வது இந்த polyamorous விதிமுறைக்குள் அடங்காது. உங்கள் வாழ்க்கையில் அவர் மட்டும்தான்..காதல் என்றால் அது அவருடம் மட்டும்தான் என்னும் எண்ணம் துணைக்கு இருக்கக் கூடாது. உங்களுக்கு இன்னொருவரும் இருக்கிறார் என்பது தெரிய வேண்டும். வெளிப்படையான கலந்துரையாடல் மிகவும் அவசியம். உங்கள் ஆசை , விருப்பங்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும். வலி, வேதனைகளற்ற உறவாக இருக்க வேண்டும்.அதேபோல் polyamorous என்பது வெறும் காமத்திற்காக மட்டுமல்ல..காமத்திற்கு ஒன்று காதலுக்கு ஒன்று என்ற விதிமுறைக்குக் கீழும் வராது. அனீஸ் நின் இதை மிக அழகாகச் சொல்வார். அதாவது “ ஒவ்வொரு நண்பரும் நம்மில் ஒரு உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அவர்கள் வரும் வரை ஒரு உலகம் பிறக்கவில்லை, இந்த சந்திப்பால் மட்டுமே ஒரு புதிய உலகம் பிறக்கிறது. ” அது உண்மைதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துணையும் அதுபோலத்தான். அவர்கள் உங்களுக்கான தனி உலகமாக இருக்க வேண்டும். தனி உலகத்தை உருவக்க வேண்டும். அதில் காதல், நட்பு , அனைத்து தருணங்களிலும் உடன் இருத்தல் என சம அளவில் இருக்க வேண்டும். அதுதான் polyamorous உச்சகட்ட நோக்கம்.

திருமணமான பின்பும் மற்ற பெண்கள் மீது பாலியல் ஈர்ப்பு உண்டாவது தவறா..?

எதுவாயினும் இறுதியில் உங்கள் துணையும் நீங்களும் சௌகரியமாக உணர வேண்டும். நீங்கள் நினைத்தவாறு வாழ வேண்டும். சில நேரங்களில் துணைக்குத் தெரிந்தே பலருடனான உறவை நீண்ட நாட்களுக்கு தொடர்கின்றனர். ஒருவேளை நீங்கள் காதல் செய்யும் துணைகள் நண்பர்களாக இருக்கலாம். தொலை தூர உறவுகளாக இருக்கலாம். எப்படியோ இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருப்பின் அந்த உறவு இன்னும் சுமூகமாக இருக்கும். உங்களாலும் சுதந்திரமாகவும், இலகுவாகவும் நடந்துகொள்ள முடியும். அந்த உறவுகளில் உண்மையாக இருப்பதால் குற்ற உணர்ச்சி இல்லாமல் நேர்மையாக இருக்க முடியும்.

 

 

 
Published by:Sivaranjani E
First published: