உலக மனநல தினத்திற்காக ஆலியா பட் சொன்ன சிறந்த அறிவுரை..!

உலக மனநல தினத்திற்காக ஆலியா பட் சொன்ன சிறந்த அறிவுரை..!
  • News18
  • Last Updated: October 10, 2019, 10:37 PM IST
  • Share this:
இன்று உலகம் முழுவதும் மனநல தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக உலகம் முழுவதும் மன அழுத்தம், மனப் பதட்டம், தனிமை என அனைத்துவிதமான மனநோய்கள் குறித்த விழிப்புணர்வு செய்திகள் பகிரப்படும்.

அந்த வகையில் பாலிவுட்டின் செல்ல நாயகியான ஆலியா பட்டின் தங்கை ஷஹீன் பட் உலக மனநல தினமான இன்று Here Comes The Sun என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் நோக்கம் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் மனப் பதட்டங்களிலிலிருந்து மீள முடியாமல் தவிப்போருக்கு உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதுகுறித்து வெளிப்படையாக பேசும் விழிப்புணர்வை அளிக்கவுள்ளது.

தங்கையின் இந்த சிறந்த நோக்கத்தை பாராட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சிறந்த வாழ்த்து அறிவுரையை பகிர்ந்துள்ளார்.


அதில் “ ஷஹீன் உன்னை நினைத்து மிகவும் பெருமைக் கொள்கிறேன். நீ உருவாக்கியிருக்கும் இந்த நிறுவனம் மிகவும் நெருக்கமான மற்றும் பலத்தை குறிக்கும் விஷயமாகும். பதட்டம் , பயம் என மனதோடு போராடும் யாரும் தனிமையை தேர்வு செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. சில நேரங்களில் நீங்கள் தனிமையில் இல்லை என்பதை உணர வேண்டும். உங்களோடு உரையாட , மனக் கவலைகளைக் கேட்க நான் 100 சதவீதம் உங்களுக்காக இருக்கிறேன். எனவே மனநலம் குறித்து விழிப்புணர்வைத் துவங்குங்கள் எங்களோடு இணைந்து பயணிக்கத் துவங்குங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading