கணவன் மனைவி உறவு வெளிப்படையாக இருக்க வேண்டும், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்க வேண்டும் மற்றும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்பவை உள்ளிட்ட சிலவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆனால், கணவன் மனைவி உறவில் இருவருமே தனி நபர்கள் என்பதையும் மறக்கக்கூடாது. ஒரு சில விஷயங்களைப் பகிர்வது பெரிய அளவில் காயப்படுத்தி விடும். பின்வரும் விஷயங்களை பெண்கள் தங்கள் கணவரிடம் பகிர வேண்டும் என அவசியம் இல்லை.
கணவரின் குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்பதை சொல்ல வேண்டாம் :
உங்கள் குடும்பத்தினரை உங்கள் கணவருக்கு பிடிக்கவில்லை என்று அவர் கூறினால் நீங்கள் அதை எவ்வாறு எடுத்துக் கொள்வீர்கள்? அதே மனநிலை தான் உங்கள் கணவருக்கும் இருக்கும். நீங்கள் உங்கள் கணவரை அளவுக்கு அதிகமாக நேசித்தாலும், அவருடைய குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பிடிக்க வேண்டுமென்று அவசியமில்லை. அதே போல, இதையும் நீங்கள் வெளிப்படுத்த வேண்டாம். உங்கள் கணவரின் குடும்பத்தினர் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை நீங்கள் நாசுக்காக அவரிடம் தெரிவிக்கலாம்.
கணவரின் குடும்பத்தார் என்ன செய்தாலும் பிடிக்கவில்லை என்று சொல்வது ஏதோ ஒரு சூழலில் உங்கள் உறவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த கால பாலியல் உறவு:
கடந்த காலத்தில் பாலியல் உறவில் ஈடுபட்டு இருந்தால், அதைப் பற்றி எப்பொழுதுமே கணவரிடம் நீங்கள் கூற வேண்டிய அவசியம் இல்லை. சில ஆண்கள் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பு காதல் இருந்ததையே என்பதையே எளிதாக ஜீரணித்துக் கொள்ள முடியாது. இந்த நிலையில், கடந்த கால பாலியல் உறவைப் பற்றி கூறுவது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். பாலியல் உறவில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றாலும், கடந்த காலத்தை ஒப்பிட்டு அதை வெளிப்படுத்தக்கூடாது.
உங்கள் கணவரிடம் உள்ள குறைகள்:
குறைகள் இல்லாத எந்த மனிதருமே கிடையாது. உங்கள் கணவரிடம் வெளிப்படையாக ஒரு சில குறைகள் தெரிந்தாலும் அதை நீங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கக்கூடாது. சரியான நேரத்தில், சரியான இடத்தில், தேவையானதை மட்டும் பேசினால் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் உங்கள் கணவருக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகரித்து உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
also read : தம்பதியருக்குள் நல்லுறவு நீடிக்க என்ன செய்ய வேண்டும்..? நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகள்
பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனை:
பெரும்பாலான கணவன் மனைவி உறவில் நிதி மற்றும் பொருளாதார ரீதியாக கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் ஏற்படும். பணம் என்று வரும்போது அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கையாளுவார்கள். கணவன் செய்யும் செலவுகள் அல்லது மனைவியின் விருப்பங்கள் ஆகிய இரண்டும் பெரும்பாலும் ஒன்றாக அமையாது. அது மட்டுமின்றி கடந்த காலத்தில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வளர்ந்தவர்களுக்கு, கணவன் மனைவி உறவில் மிகப்பெரிய வேறுபாட்டை உருவாக்கும். வசதியாக இருந்தாலும் கூட ஒருவரின் கண்ணோட்டத்தில் பணம் என்பது வித்தியாசமாக தெரியும். எனவே, பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் வேறுபாடு இருந்தாலும், இருவரும் பேசி, ஆலோசித்து வீட்டுக்கான, உங்களுக்கான பட்ஜெட்டை உருவாக்குங்கள்.
also read : இந்த குணங்கள் உங்களது வருங்கால வாழ்க்கை துணைக்கு இருந்தால் நீங்கள் லக்கி தான்!
உங்கள் கணவரைப் பற்றி நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நெகடிவ் கருத்துகள் :
நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் அல்லது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று நீங்கள் ஒருவரை உங்கள் நண்பர்களிடம் அல்லது உறவினர்களிடம் அறிமுகப்படுத்தும் பொழுது, நீங்கள் விரும்புவதைப் போலவே அனைவரும் அவரை விரும்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ உங்கள் கணவரை பிடிக்காமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. கணவன் மனைவி உறவு எவ்வளவு அழகாக, சுமூகமாக இருக்கிறது என்பது தான் முக்கியமே தவிர, நண்பர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்பதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அது மட்டுமின்றி கணவரைப் பற்றி மற்றவர்கள் கூறும் நெகட்டிவான கருத்தை நீங்கள் அவரிடம் தெரிவிக்க வேண்டாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.