• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புத்தாண்டு 2021 - உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் கொண்டாட்டம்!

புத்தாண்டு 2021 - உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் கொண்டாட்டம்!

ரொமான்டிக் புத்தாண்டு கொண்டாட்டம்

ரொமான்டிக் புத்தாண்டு கொண்டாட்டம்

Happy New Year 2021 | மித மெல்லிய ஒலியில் உங்களுக்குப் பிடித்த ரொமான்டிக் பாடல்களை கேட்டுக் கொண்டே நேரத்தை செலவிடலாம்.

  • Share this:
    உங்கள் உறவு புத்தம் புதியதாக இருந்தாலும் சரி பல ஆண்டுகளாக வலுவான ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் ஆனாலும் சரி, புதிய வருடம் பிறக்கும் நியூ இயர் ஈவ் பிணைப்புக்கான சிறந்த நேரமாக இருக்கும்.

    விடுமுறை என்பது நீங்கள் யாருடன் உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களோ அவர்களுக்கு சிறப்பான நினைவுகளை கொடுக்கும். இதற்காக அதிக செலவு செய்து, பார்ட்டி, பிக்னிக் என நீங்கள் செல்ல தேவையில்லை. அப்படி உங்கள் துணையுடன் ரொமான்டிக்கான நியூ இயர் கொண்டாட்டத்திற்கான சில அட்டகாச ஐடியாக்களை இங்கே தருகிறோம்.

    மூவி மாரத்தான்

    விடுமுறைகள் முடியலாம், ஆனால் மன அழுத்தத்தை அது தணிக்காது. அவ்வாறான நிலையில், ஒரு நாள் முழுவதும் உங்கள் துணையுடன் செலவிடுவது உங்களின் நெருக்கத்தை அதிகரிக்கும். குறிப்பாக நீங்கள் இருவரும் திரைப்பட பிரியராக இருந்தால், நிச்சயம் ஒரு மூவி மராத்தானை ஏற்பாடு செய்யலாம். உங்களுக்குப் பிடித்த ரொமான்டிக்-காமெடி படங்களைப் பார்க்கலாம். கடந்த ஆண்டில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சில படங்களையும் பார்க்கலாம்.

    முத்தம்

    இது பழைய விஷயமாக இருக்கலாம். ஆனால் ரிலேஷன்ஷிப்பில் மிகவும் பவர் ஃபுல்லானது முத்தம். புத்தாண்டு தினம் எப்படி இருந்ததோ அப்படி தான் அந்த வருடம் முழுவதும் இருக்கும் என நம்புபவர்கள், முத்தத்தில் தொடங்கி அந்த வருடம் முழுவதும் அன்பில் லயித்திருக்கலாம். இது உங்கள் இருவரையும் இன்னும் நெருக்கமாக்கும்.

    ரோட் ட்ரிப்


    உங்கள் வழக்கமான பயணங்களை ஒத்தி வைத்து விட்டு, ஊருக்கு வெளியே உங்கள் துணையுடன் ஒரு ரோட் ட்ரிப் செல்லுங்கள். ஒருவேளை காரில் சென்றால், மித மெல்லிய ஒலியில் உங்களுக்குப் பிடித்த ரொமான்டிக் பாடல்களை கேட்டுக் கொண்டே நேரத்தை செலவிடலாம். இது உங்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத நினைவுகளை பரிசளிக்கும்.

    ஃபேவரிட் உணவகத்தில் மதிய உணவு

    மாலையில் நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்வதற்கான திட்டம் உங்களிடம் இருந்தால், புத்தாண்டு தொடங்கும் நாளின் மதிய உணவை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிடித்த உணவகத்தில் சாப்பிடுங்கள்.

    முதன் முதலாக சந்தித்த இடத்திற்கு விசிட்

    கடந்த கால வெற்றிகளை விட சிறந்த எதிர்காலத்திற்கான திட்டமிடல் இன்னும் சுவாரஸ்யம் தரும். இதற்கு புத்துணர்ச்சி தரும் விதத்தில், நீங்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்துக் கொண்ட இடத்திற்கு மீண்டும் போய் வாருங்கள். அப்போது நடந்த உரையாடல்களை மீண்டும் அசை போடுங்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: