Home /News /lifestyle /

National Hugging Day 2022 : கட்டி அணைக்கும் தினத்தின் பின்னால் உள்ள கதையும், முக்கியத்துவமும்..!

National Hugging Day 2022 : கட்டி அணைக்கும் தினத்தின் பின்னால் உள்ள கதையும், முக்கியத்துவமும்..!

ஹக்கிங் டே

ஹக்கிங் டே

இந்த ஹக்கிங் டே முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள கிளியோவில் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21 ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தேசிய கட்டியணைத்தல் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பு மற்றும் ஆதரவின் அழகான அதே சமயம் சிந்தனைமிக்க ஒரு வெளிப்பாடு தான் - கட்டி அணைத்தல்.

அதிலும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் ஒருவர் மற்றொவருக்கு தரும் 'ஹக்' ஆனது வார்த்தைகளை விட சத்தமாக பேசக்கூடிய ஒரு அற்புதமான சைகை ஆகும். நேஷனல் ஹக்கிங் டே, அல்லது தேசிய கட்டிப்பிடி தினம் அல்லது தேசிய அரவணைப்பு தினத்தை முன்னிட்டு, அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

ஹக்கிங் டே உருவான வரலாறு!

இந்த ஹக்கிங் டே முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள கிளியோவில் கொண்டாடப்பட்டது. ஹக்கிங் டே என்கிற யோசனையை உருவாக்கியவர் கெவின் ஜாபோர்னி ஆவார். விடுமுறை நாட்களில், குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினத்திற்குப் பிறகு வரும் இடைவெளியானது மக்கள் இடையே வெற்றிடத்தை உண்டாக்குவதை கவனித்தபோது, ​​​​அவருக்கு இந்த யோசனை தோன்றி உள்ளது.

வருடத்தின் குறிப்பிட்ட காலத்தின் போது, ​​மக்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பதையும், மனச்சோர்வு அல்லது தனிமையாக உணராமல் இருப்பதையும் உறுதிப்படுத்த, ஹக்கிங் டே என்கிற ஒரு நாளை அறிமுகப்படுத்துவது சிறந்தது என்று அவர் கண்டறிந்தார். மேலும் அமெரிக்க சமூகம் பொதுவெளியில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வெட்கப்படுவதையும் கெவின் உணர்ந்தார், எனவே இது போன்ற ஒரு நாள் அதை மாற்றும் என்றும் அவர் நம்பினார். மேலும் மற்றவர்களின் தனிப்பட்ட இடத்தை எப்போதும் மதித்து, அதன்படி செயல்பட வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.ஹக்கிங் டேவின் முக்கியத்துவம்!

இந்த அழகான முன்முயற்சியின் பின்னணியில் உள்ள பிரதான முக்கியத்துவம் - மக்களை மிகவும் இரக்கமுள்ளவர்களாகவும், அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கவும் ஊக்குவிப்பதே ஆகும். மாறி க்கொண்டே வரும் காலத்தைப் பொறுத்தவரை, மக்கள் தனிமையாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர்கிறார்கள்.

எனவே கட்டிப்பிடிப்பது ஒருவருக்கொருவர் தொடர்புகளை ஏற்படுத்த உதவுவதோடு நில்லாமல் ஆதரவையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக தேசிய அரவணைப்பு தினமானது மக்கள் தங்கள் உணர்ச்சிகளைப் பார்க்கும் விதத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உங்களை பிறர் உருவ கேலி செய்யும் போது அவர்களுக்கு நீங்கள் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும்..?

கட்டிப்பிடித்தல் - மகிழ்ச்சியைத் தருகிறது; மக்களிடையே பிணைப்பை அதிகரிக்கிறது; உறவுகளில் நேர்மறை மற்றும் இனிமையைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் குறைத்தல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தல் போன்ற பிற நன்மைகளுக்கும் வழிவகுக்கிறது. மேலும் கட்டிப்பிடிப்பது மூளையில் ஆக்ஸிடாசினை உருவாக்குகிறது, இது மகிழ்ச்சிக்கு காரணமான ஒரு வேதிப்பொருள் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, நிலவி வரும் தொற்றுநோய் பரவலின் மத்தியில், ஹக்கிங் டேவும் கூட சோஷியல் டிஸ்டன்சிங்கின் கீழ் தான் பின்பற்றப்பட வேண்டிய நிலை உள்ளது. ஆக ஒருவர் இந்த ஹக்கிங் டேவை கூட விர்ச்சுவல் ஹக் ஆக அல்லது இதயத்தைத் தொடும் வார்த்தைகளால் கொண்டாடுவது சாலச்சிறந்தது. இதுபோன்ற அணுகுமுறை மற்றும் செயல்களால், மக்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் அரவணைத்து கொள்ளும் அதே வேளையில், ஒருவரையொருவர் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்க முடியும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Hug Day

அடுத்த செய்தி