வெகு காலமாகவே கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்பது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பாதிப்பு என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு ஏற்படுவதே இல்லை, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற கட்டுக்கதை ஆண்டாண்டு காலமாக நிலவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது குழந்தை பெறுவது பல பெண்களுக்கு ஒரு பிரச்சினையாகவே காணப்படுகிறது. எனவே இது மிகவும் சென்சிட்டிவான விஷயமாக மாறியுள்ளது.
குழந்தை பெறுவதில் சிக்கல் பெண்களால் மட்டுமே ஏற்படுகிறது என்று பெண்கள் மீது மட்டுமே இனி பழி சொல்ல முடியாது என்னும் வகையில் ஆண்களுடைய இனப்பெருக்கம் மற்றும் மலட்டுத்தன்மை பற்றிய விவரங்கள் இங்கே.,
கருவுறாமை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும் :
இன்ஃபர்லிட்டி என்பதற்கு என்பதற்கு பாலின வேறுபாடு கிடையாது. நம் சமுதாயத்தில் ஒரு தம்பதிக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற உடனே அது பெண்ணால்தான், அல்லது பெண்ணுக்குத்தான் அந்த பிரச்சனை இருக்கிறது என்று தற்போது வரை நம்பப்பட்டு வருகிறது. ஆனால், குழந்தை பெற முடியாமல் இருப்பதற்கு பெண் மட்டுமே காரணம் கிடையாது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் ஆண்களுடைய இனப்பெருக்க ஆரோக்கியம், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தின் அடிப்படையில்தான் ஆண்களின் கருவுறும் தன்மை உள்ளது.
ஆண்களுக்கு குறைவான விந்தணு அல்லது ஆரோக்கியமற்ற விந்தணு இருக்கும் போது பெண்களால் கருத்தரிக்க முடியாமல் போகும் சாத்தியம் உள்ளது. ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பே விந்தணு குறைபாடுக்கு காரணமாக இருக்கலாம்.
ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் :
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி போல ஆண்களுக்கு ஏற்படாது என்றாலும், ஆண்கள் விரும்பும்போதெல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. நாற்பத்தி ஐந்து வயதுக்கு மேல், குழந்தை பெற விரும்பும் ஆண்களுக்கு அதற்கான கருவுறும் தன்மை குறைவு. மேலும், 60 தாண்டிய ஆண்கள் குழந்தை பெறக்கூடிய சாத்தியம் மிகவும் குறைவு. 60 அல்லது 70 களில் ஒரு சிலருக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்திகளை கேள்விப் பட்டிருப்போம். ஆனால், இந்த வயதுகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, குழந்தைகள் பிறக்கும் போதே குறைபாடுகளுடன் பிறக்கக்கூடும்.
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்
ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பாதிப்பும் மலட்டுத்தன்மையும் ஒன்று தான் :
ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பாதிப்பு அல்லது பாலியல் உறவுகளில் ஈடுபடமுடியாமல் இருக்கக்கூடிய சூழல் ஆண் இனப்பெருக்க பிரச்சனையில் முக்கியமானதாகும். ஆண்மையின்மை, விறைப்புத்தன்மை குறைபாடு, விரைவாக விந்து வெளியேறுதல் உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படக்கூடிய பிரச்சினையும் ஆண் மலட்டுத் தன்மையும் ஒன்றே என்று பலரும் கருதுகிறார்கள். ஆண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் தன்மை வேறு மற்றும் பாலியல் ஆரோக்கியம் வேறு. பாலியல் உறவு பிரச்சனையில் இல்லாமல் இருக்கும் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படும். அதே போல, விறைப்புத்தன்மை குறைபாடு இருந்தாலும், விந்தணு பாதிப்பில்லாமல் இருந்தால், குழந்தை பெற முடியும்.
ஆண்களின் வாழ்க்கை முறைக்கும் ஆண்களின் மலட்டுத் தன்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை :
வாழ்க்கை முறையும் பழக்கவழக்கங்களும் ஆண்களுடைய இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் கருவுறும் தன்மை ஆகியவற்றை பாதிக்கிறது. பெண்களின் வாழ்க்கைமுறை எப்படி பெண்களின் மாதவிடாய் மற்றும் முட்டைகளின் தரத்தை பாதிக்கிறதோ. அதேபோல ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் அவர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பாதிக்கிறது. உதாரணமாக, புகை பிடித்தல், மது அருந்துதல், இறுக்கமான உள்ளாடை அணிவது, பாலியல் நோய் தொற்று ஆகியவை ஆண் மலட்டுத் தன்மையை அதிகரிக்கிறது.
குறைவான விந்தணு எண்ணிக்கை ஆண்களை பலவீனமாகவும் மாற்றுகிறது :
குறைவான விந்தணு என்பது ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், ஆண்கள் பலவீனமாக இருப்பதற்கு விந்தணு எண்ணிக்கை குறைவு காரணம் கிடையாது. எனவே, விந்தணு குறைபாடு ஏற்பட என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள, நீங்கள் ஒரு ஃபெர்டிலிட்டி நிபுணரை சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு குளிர்ச்சியாக இருந்தால் விந்தணு தரம் அதிகரிக்கும் :
நீண்டதூரம் வண்டி ஓட்டிச் செல்வது, இறுக்கமான உள்ளாடைகளை அணிவது, ஆகிய இரண்டுமே கருவுறும் தன்மையை பாதித்து ஆண்களின் விந்தணுவின் தரத்தை குறைகிறது. ஆனால், இதற்கும் ஆண்களின் உறுப்புகள் குளிர்ச்சியாக இருந்தால் விந்தணு தரம் அதிகரிக்கும் என்பதற்கும் தொடர்பும் இல்லை.
கொரோனா பாதித்தவர்களுக்கு விந்தணுக்களின் தரம் குறைகிறது : குழந்தையின்மையை அதிகரிக்குமா என அச்சம்..
ஆண்கள் மலட்டுத்தன்மை வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது :
இல்லை, இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட ஆண்கள் கருவுறும் தன்மையில் பிரச்சனைகள் காணப்படுகிறது.
சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறையும் மற்றும் மலட்டுத்தன்மை பாதிப்பு ஏற்படும் என்பதும் தவறான கருத்து. மேலும் இதுவரை பாக்கெட்டுகளில் போன்களை வைப்பதால் அதில் இருக்கும் ரேடியேஷன் விந்தணுவின் தரத்தை பாதிப்பதாக எந்த ஆய்வும் உறுதி செய்யவில்லை.
புகை பிடிப்பதும், மது அருந்துவதும் ஆண்கள் மலட்டு தன்மையை உண்டாக்குகிறது மற்றும் அதிகப்படுத்துகிறது.
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஜின்க் ஆகிய சத்துகள் ஆண்களின் விந்தணுவின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Male infertility, Myths, Sex