இந்த ஆண்டு அன்னையர் தினம் மே 9ம் தேதி இந்தியா மற்றும் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.
சொல்லில் அளவிட முடியாத ஒரு விந்தையான படைப்பு அன்னை. பேரன்பின் பிறப்பிடமான தாய், நம் வாழ்நாள் முழுவதும் துணை இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையின் ஊற்று. சொல்ல முடியாத துயரங்களையும், ஆசைகளையும் மனதுக்குள் வைத்துக் கொண்டு குடும்பத்தையும், பிள்ளைகளையும் செதுக்கும் மாபெரும் சிற்பி. அன்பையும், பாசத்தையும் மட்டுமே கொடுக்கும் அன்னையர்களுக்கு ஆண்டுதோறும் அன்னையர் தினம் கொண்டாடி மகிழ்கிறோம். அந்ந நாளில் அவர்களின் தியாகத்தை போற்றி, பிள்ளைகள் மரியாதை செய்கின்றனர். அந்த நாளைப் பற்றிய சில கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வோம்.
அன்னையர் தினம் 2021
அமெரிக்காவில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது வாரத்தில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளின் அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இங்கிலாந்தில் மார்ச் மாதம் 4வது ஞாயிற்றுக்கிழமை, அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றனர். மதர் சர்ச் நினைவாக கிறிஸ்டியன் மதரிங் சன்டே (Christian Mothering Sunday) கடைபிடிக்கப்படுகிறது கிரீஸ் நாட்டில் பிப்ரவரி 2 ஆம் தேதி ஜீசஸ் கிறிஸ்ட் டெம்பிளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தின வரலாறு; முக்கியத்துவம்:
அன்னையர் தினம் முதன்முதலாக 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உருவானது. அன்னா ஜாவிரிஸ் (ANNA JARVIS) என்ற பெண்ணின் தாய் 1905 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவரது தாய் மேற்கு வெர்ஜீனியாவின் கிராப்டன் நகரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் சர்ச்சில் பணியாற்றி வந்தார். தனது தாய் இறந்தநிலையில், அவரின் நினைவாக 1908ம் ஆண்டு மே மாதம் தாய்மார்களை அழைத்து அன்னையர் தினத்தைக் கொண்டாடினார்.
பின்னர், ஆண்டுதோறும் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய அவர், இதனை அமெரிக்க அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தார். அவரின் தொடர் போராட்டம் மற்றும் முயற்சிகளின் விளைவாக அமெரிக்காவின் 28வது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன் (Thomas Woodrow Wilson) அன்னையர் தினத்தை அங்கீகரித்தார். 1940ம் ஆண்டு மே 9 ஆம் தேதி அன்னையர் தினத்துக்கான பிரகடனத்திலும் கையெழுத்திட்டார்.
அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாள் தேசிய அரசு விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தவாறு அனைவரும் தங்களின் அன்னைக்கு பரிசளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த உள்ளனர்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.