Home /News /lifestyle /

போதிய விழிப்புணர்வின்மையால் செக்ஸ் வாழ்க்கையில் அதிகம் பாதிக்கப்படுவது இளம் பெண்களே- ஆய்வு

போதிய விழிப்புணர்வின்மையால் செக்ஸ் வாழ்க்கையில் அதிகம் பாதிக்கப்படுவது இளம் பெண்களே- ஆய்வு

கர்ப்புதான் பெண்களின் மரியாதை : இந்த வார்த்தை இன்றளவும் கேட்க முடிகிறது. ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வேண்டும் என நினைத்தால் அது அவளுக்கான உணர்ச்சி. அவ்வாறு அந்த பெண் வெளிப்படையாக கேட்டுவிட்டால் அவளுக்கு தவறான முத்திரை குத்தி அவமானமான விஷயமாக சித்தரிப்பார்கள். ஏனெனில் ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பான களையாத கர்ப்புதான் அவள் ஒழுக்கமனாவள் என்பதை தீர்மானிப்பதாக நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறு. பெண்கள் எப்போது, யாரோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமே அன்றி சமுதாயத்திற்காக கட்டுப்படுத்திக்கொள்ள மனித உணர்ச்சியற்றவர்கள் அல்ல.

இந்த ஆய்வு என்பது மக்களுக்கான எச்சரிக்கை. இதை வளரவிடாமல் தடுக்க அனைவரும் செக்ஸ் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். கலந்துரையாட வேண்டும்.

  • News18
  • Last Updated :
    இந்தியாவில் இன்றளவும் செக்ஸ் என்ற வார்த்தையை சொல்வதற்கே தயக்கம் காட்டும் அவலம்தான் நிலைத்திருக்கிறது. வார்த்தையைச் சொல்லவே தயங்கும் சூழலில் அதுகுறித்த கேள்விகள், சந்தேகங்களை எப்படி மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்..?

    பள்ளியிலும் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி அவசியம் பற்றி பேசப்பட்டு வருகிறது. இப்படி எந்த விதத்திலும் விழிப்புணர்வு இல்லாத இளம் பெண்கள்தான் பால்வினை நோய்களால் (Sexually transmitted disease) அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் இளம் பெண்கள் தங்களுடைய செக்ஸ் வாழ்க்கைக் குறித்து மன அழுத்தத்தில் இருப்பது ஆச்சரியத்துக்குரிய விஷயமல்ல.

    இந்த ஆய்வு ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில் 18 முதல் 39 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தயக்கம், குற்ற உணர்ச்சி மற்றும் செக்ஸில் திருப்தியின்மை என பல காரணங்களால் மன அழுத்தத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக தன் சுய உடல் குறித்தே பல பெண்கள் கவலைக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு மிக முக்கிய காரணம் விளம்பரங்கள் மற்றும் பத்திரிக்கை இதழ்களின் அட்டைப்படங்களே என்கிறார் இந்த ஆய்வின் தலைவர். அதில் காட்டப்படும் செக்ஸியான உடலமைப்புக் கொண்ட பெண்கள்தான் அவர்களே தன் உடலை வெறுக்கும் அளவிற்கு மாற்றியுள்ளது என்கிறார்.

    இந்த வெறுப்பின் காரணமாக உடலுறவில் நாட்டமில்லாமல் இருக்கின்றனர். இதனாலேயே பெண்களுக்கு உடலுறவின் உச்சபட்ச நிலையை அடைவது குறைகிறது, பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்படுவதும் 9% தடைபடுகிறது. காரணம் இந்த நிகழ்வுகளுக்கு முன்னாலேயே அவர்களின் உடல் அமைப்புக் குறித்து பதற்றநிலையை அடைகின்றனர் என்கிறது ஆய்வு. இப்படி 7.9 மற்றும் 3.4% பங்கேற்பாளர்கள் வெவ்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த ஆய்வு என்பது மக்களுக்கான எச்சரிக்கை. இதை வளரவிடாமல் தடுக்க அனைவரும் செக்ஸ் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். கலந்துரையாட வேண்டும். இளம் பெண்களின் செக்ஸ் வாழ்க்கையையும் கவனத்தில் கொள்வது அவசியம் என்கிறார் சூசன் டேவிஸ். இவர் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருக்கிறார்.

    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி