பெரும்பாலானோர் வீடுகளில் முதியவர்களைப் கவனித்துக் கொள்வதில் விருப்பம் இல்லை: ஆய்வில் தகவல்

மருமகள் செய்யும் விஷயங்களை மகன் வந்த பிறகு போட்டுக் கொடுப்பதால் இருவருக்கும் உள்ள உறவு பாதிக்கப்படுகிறது கூறியுள்ளனர்.

Web Desk | news18
Updated: June 17, 2019, 10:31 PM IST
பெரும்பாலானோர் வீடுகளில் முதியவர்களைப் கவனித்துக் கொள்வதில் விருப்பம் இல்லை: ஆய்வில் தகவல்
முதியவர்களைப் கவனித்துக் கொள்வதில் விருப்பம் இல்லை
Web Desk | news18
Updated: June 17, 2019, 10:31 PM IST
 முதியோர்கள் இல்லம் இல்லாத காலகட்டம் கடந்து முதியோர் இல்லம் இல்லாத தெருக்கள் இல்லை என்ற நிலை உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக இந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான மகன் அல்லது மருமகள்கள் தன் வீட்டில் உள்ள அப்பா அம்மா, தாத்தா பாட்டியை பார்த்துக்கொள்வதில் துளியும் மகிழ்ச்சி இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த வயதானவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ( charitable organisation HelpAge ) இந்தியாவில் முதியவர்கள் படும் அச்சுறுத்தல்கள் மற்றும் முதியோர்களைப் பார்த்துக்கொள்வதில் குடும்பத்தாரின் பங்கு என்ற தலைப்பில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
அதில்தான் இந்த அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது.அதில் 29 சதவீதம் பேர் முதியோர் இல்லங்கள்தான் அவர்களுக்குச் சிறந்தது என்று பதில் அளித்துள்ளனர். ஏன் என்று கேள்வி எழுப்பியதற்கு அவர்களைக் குறை சொல்வது, ஆத்திரமடைவது என தன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களைத் தாக்குவது , திட்டி மன உளைச்சலுக்கு உட்படுத்துவது போன்ற செயல்களையும் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் மகன், மகள், மருமகன் , மருமகள் என 2090 பேரை 20 நகரங்களில் ஆய்வு செய்துள்ளது.
Loading...
இதில் ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால் அவர்கள் தனக்குச் செய்யும் அச்சுறுத்தல்கள் தெரிந்தும் தன் பேரப்பிள்ளைகளின் பாசத்திற்காகவும், அவர்களைப் பிரிய மனம் இன்றி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அந்த வீட்டில் வாழ்கின்றனர் என்கிறார் ஹெல்ப் ஏஜ் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மேத்யூ செரியன்.

ஆய்வில் ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதற்கு விளக்கமும் அளித்துள்ளனர். அதில்...

42.5 சதவீதம் பேர் அவர்களின் மருத்துவச் செலவுகளுக்கே அதிகப் பணம் செலவாகிறது அதனால் பார்த்துக்கொள்வதில் மகிழ்ச்சி இல்லை என்று கூறியுள்ளனர். அப்படி வைத்திருப்போரில் பெரும்பாலானோர் அவர்களுக்கு வரும் ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு மருத்துவச் செலவுகளைப் பார்க்கின்றனர். 57 சதவீதம் பேர் மருமகள் செய்யும் விஷயங்களை மகன் வந்த பிறகு போட்டுக் கொடுப்பதால் இருவருக்கும் உள்ள உறவு பாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

மற்றவர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் கவனித்துக்கொள்ள வீட்டில் ஆள் இல்லை என்ற காரணத்திற்காக முதியோர் இல்லங்களை நாடுவதாகக் கூறியுள்ளனர்.
First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...