நாம் சோஷியல் மீடியாக்களில் உலவாத நாளே இல்லை எனும் அளவிற்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியங்களை போல அவற்றை தினசரி பயன்படுத்தி வருகிறோம். அளவோடு மற்றும் முறையாக பயன்படுத்தினால் எதுவும் நன்மை தரும். ஆனால் அளவுக்கு மீறி அல்லது முறையற்று பயன்படுத்தினால் காதலன் ஏற்படும் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். உறவுகளில் இருக்கும் பலரது வாழ்வில் கடும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன சோஷியல் மீடியாக்கள்.
நன்கு பழகிய நபர்களுடன் கண்ணுக்கு கண் பார்த்து நேரில் பேச தயங்கும் பல விஷயங்களை கூட, முன்பின் தெரியாத நபர்களிடம் சகஜமாக பேசும் தைரியத்தை கொடுக்கின்றன சோஷியல் மீடியாக்கள். எனவே இதனால் ஆன்லைன் நடத்தைகள் உறவுகளுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நமக்கு மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும் ஒருவரது சோஷியல் மீடியா அக்கவுண்ட்டிற்கு நமக்கு தெரியாத ஒரு எதிர் பாலினத்தவர் மெசேஜ் அனுப்புவது அல்லது போஸ்ட்டிற்கு தொடர்ந்து கமெண்ட்ஸ் செய்வது என்பதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. சோஷியல் மீடியாவில் நிலவி வரும் இந்த போக்கு 'ஆன்லைன் துரோகம்' என்று வகைப்படுத்தப்படுகிறது.
Read More : உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!
சோஷியல் மீடியாக்களில் காதல் நோக்கங்களுக்காக பார்ட்னருக்கு அனுப்பாமல் வேறு நபருக்கு அனுப்பப்படும் DM-கள் தான் பல உறவுகள் சீர்குலைய காரணமாக இருக்கின்றன. உறவுகளை நவீன முறையில் சீர்குலைத்து வரும் சோஷியல் மீடியாக்களின் DM-கள் சர்வதேச அளவில் நெட் ஃபுல்மர், ஆடம் லெவின், நகைச்சுவை நடிகர் ஜான் முலானி போன்ற பல பிரபலங்களின் வாழ்க்கையில் கூட விளையாடி இருக்கின்றன.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி பிரச்சனைக்குரிய உறவுகள் மற்றும் விவாகரத்துகளுடன் சோஷியல் மீடியா DM-கள் நேர்மறையாக தொடர்புடையவை. இதனிடையே அமெரிக்கன் அகாடமி ஆஃப் மேட்ரிமோனியல் லாயர்ஸ் அமைப்பு இதுபற்றி கூறுகையில், தங்களிடம் வரும் சுமார் 81% விவாகரத்து வழக்குகளில் தங்கள் துணையின் மீது தவறான ஆன்லைன் நடத்தை சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். மேலும் அதற்கான ஆன்லைன் ஆதாரங்களை நாடும் வாழ்க்கைத் துணைவர்கள் அதிகமாக இருப்பதை காண முடிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சோஷியல் மீடியாக்களில் உறவு தொடங்கிய கதைகளும் நம் கண்முன்னே இருக்கின்றன, அதே சோஷியல் மீடியாக்கள் மூலம் பல உறவுகள் நிலைக்குழைந்த சம்பவங்கள், உயிர்பலி ஏற்பட்ட சம்பவங்களும் நம் கண் முன்னே இருக்கின்றன. இதுகுறித்து பரிந்துரைகளை கூறியுள்ள நிபுணர்கள், சோஷியல் மீடியாக்களில் நாம் செலவிடும் நேரம் நம் மீது அக்கறை கொண்டவர்களுடன் நாம் தொடர்பு கொள்ளும் திறனை பாதிக்கின்றன.
ஒருவர் ஆன்லைனில் வளர்க்கும் உறவுகள் ஏற்கனவே நம் வாழ்வில் இருக்கும் ஆஃப்லைன் உறவுகளை பாதிக்கலாம். எனவே குறிப்பிட்ட நேரம் மட்டுமே சோஷியல் மீடியாக்களை பயன்படுத்துவது, துணைக்கு தெரியாத ஒருவர் உங்களை சோஷியல் மீடியாவில் அப்ரோச் செய்தால் அதை துணையிடம் தெரிவிப்பது உள்ளிட்ட நடத்தை சிக்கலை தவிர்க்க உதவ கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
பார்ட்னர் அல்லது நெருங்கிய அன்புக்குரியவர்களை தவிர நன்கு தெரிந்த நபர்களிடம் கூட ஆன்லைனில் பழகும் போது வெளிப்படுத்தப்படும் தவறான நடத்தை கடும் விளைவுகளை ஏற்படுத்த கூடும். எதிர்பாலினத்தவரின் மனநிலை தெரியாமல் அவருக்கு பகிரப்படும் தேவையற்ற வீடியோ & போட்டோக்கள் அவருக்கே ஒருகட்டத்தில் பேக்ஃபயர் ஆகும் சம்பவங்கள் ஏராளமானவற்றை தினசரி செய்திகளில் பார்க்கிறோம்.
எனவே சோஷியல் மீடியாக்கள் மூலம் ஏற்படும் உறவு சீர்குலைவை தவிர்க்க ஒருவர் தனது சோஷியல் மீடியா தொடர்புகள் பற்றிய விஷயங்களை தனது பார்ட்னரிடம் மறைக்காமல் நேர்மையாக வெளிப்படுத்துவது ஆரோக்கியமான உறவுக்கு நல்ல வழியாக இருக்கும். நிஜ வாழ்க்கை காதல் என்று வரும் போது நிச்சயம் ஒருவர் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்துவதில் நேர்மை மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Love breakup, Love failure, Relationship, Social media