மீண்டும் மீண்டும் வலையில் சிக்கும் இளம்பெண்கள்: தீர்வு தான் என்ன?

பெண்கள் தைரியமாக இருந்தாலே ஏமாற்ற நினைக்கும் ஆண்கள் அவர்களை அணுக மாட்டார்கள்.

மீண்டும் மீண்டும் வலையில் சிக்கும் இளம்பெண்கள்: தீர்வு தான் என்ன?
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: March 13, 2019, 5:55 PM IST
  • Share this:
சமூக வலைதளம்... எந்த அளவுக்கு நன்மை இருகிறதோ, கவனமாக இல்லையென்றால் அதே அளவுக்கு தீங்கும் இருக்கிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்லமுடியாது. ஆனால், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் கொடூர நிகழ்வே காரணம்.

சமூக வலைதளங்களை பாதுகாப்பானதாக்க, அந்த நிறுவனங்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தித்தான் வருகின்றன. இதையெல்லாம் மீறி எப்படி மீண்டும் மீண்டும் பெண்கள் பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். இதற்கு என்ன காரணம், பெண்கள் எப்படி கவனமாக இருக்க வேண்டும், பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை விளக்குகிறார் உளவியல் நிபுணர் சித்ரா.

‘‘தெரியாத நபர்களிடமிருந்து ஃபேஸ்புக்கில் ரெக்குவஸ்டுகள் வருகிறதெனில் அவருடைய புகைப்படங்களை மட்டுமே பார்த்து, அவரின் நட்பு அழைப்பை ஏற்றுக்கொள்கின்றனர். பெண்கள் தவறான பாதையில் செல்வதற்கு வயதும் ஒரு காரணம். 18 வயது முதல் இருக்கும் இளம் பெண்கள் வயது காரணமாக ஏற்படும் ஈர்ப்பால், மோசடிப் பேர்வழிகளின் வலையில் எளிதில் விழுந்துவிடுகின்றனர். ஆண்களுக்கும் அது ப்ளஸாக மாறிவிடுகிறது. அதனால்தான் பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்கள் எளிதான இலக்காகின்றனர்.


பெண்களுக்கான பாதுகாப்பு, women safety

முன்பின் தெரியாத நபர்களிடம் பெண்கள் பேச முயல்வதற்கு அவர்களின் தனிமையும் ஒரு காரணம். தனிமை... திருமணமான பெண்களும் ஏமாற்றுபவர்களின் வலையில் சிக்கிக்கொள்ள முக்கியக் காரணம். மனஅழுத்தம், நண்பர்கள் இல்லை, தனிமை, அன்பிற்கு ஏங்குவது போன்ற காரணங்களால், பெண்கள் தெரியாத நபர்களிடம் பேசும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படி சிக்கலில் மாட்டிக்கொண்ட பல பெண்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவரின் பிரச்னைகளுக்கான காரணமும் இவையே.

பெண்கள், ஆரம்பத்தில் சமூக வலைதளங்களின் மூலம் அறிமுகமான, தெரியாத நபர்களிடம் தன் சுய குணத்தைக் காண்பிக்க மாட்டார்கள். வழக்கமாகப் பேசுவதுபோல் பேச மாட்டார்கள். தன் அடையாளத்தை காட்டிக்கொள்ளாமல் பேசுவார்கள். பின் அந்தப் பேச்சு நாளுக்கு நாள் வளர்ந்து அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும். பின்னர் தன்னுடைய தனிப்பட்ட பிரச்னைககளை அவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அந்த நபரும் ஆறுதலாகப் பேசுவார். அதுவே பின்நாளில் காதல் என நினைத்து வலையில் விழுந்துவிடுகின்றனர். குறிப்பாக கிராமங்களில் இருக்கும் பெண்கள்தான் உண்மையாக நம்பி சிக்கலிலும் மாட்டிக் கொள்கின்றனர்.அதேபோல் இன்றைய பெண்களுக்கு, ஈர்ப்பு மற்றும் காதல் இரண்டிற்குமான வேறுபாடுகள் தெரிவதில்லை. சமூகவலைதளங்களில் பேசுவதால் காதல் வந்துவிட்டது எனக் கூறுவதெல்லாம் உண்மையான காதல் என்று சொல்லமுடியாது. அது வெறும் ஈர்ப்பு மட்டுமே. காதல் கிடையாது. ஒருவேலை நேரில் சந்தித்துப் பழகிய பின் வேண்டுமானால் காதல் வரலாம். இதைப் பெண்கள் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்.’’இதுபோன்ற சூழ்நிலைகளில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்றக் கேள்விக்கு, சித்ரா, ”பெற்றோர்கள், பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று, அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிக்க வேண்டும். இன்று பிள்ளைகளுக்குத் தனி அறைக் கொடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அப்படியிருக்கும்போது அவர்கள் உள்ளே சென்றதும் தூங்குகிறார்களா? என்ன செய்கிறார்கள்? என்பதைக் கண்கானிக்க வேண்டும். அந்த அறையில் கேட்ஜெட்டுகள், கணினி, லேப்டாப் போன்றவற்றை அனுமதிக்கக்கூடாது. அதேசமயம் நீங்கள் கடுமையாகவும் கண்டிக்கக்கூடாது. புரிய வைத்து அதன் பாதிப்பை உணரவைக்க வேண்டும்.

எல்லாவற்ரையும் பெண்கள் வெளிப்படையாகப் பேச, பெற்றோர்கள் அனுமதியளிக்க வேண்டும். அப்படி அவர்கள் ஏதேனும் பிரச்னைகளில் சிக்கிக்கொண்டால், அதற்கு உடனே எதிர்வினையாற்றக் கூடாது. பொறுமையாக அணுகி, அவர்களை பிரச்னைகளிலிருந்து மீட்டுக் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை பிரச்னை எனில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்’’ என்கிறார் சித்ரா.

‘‘இதுபோன்ற பிரச்னைகளில் மாட்டிக்கொண்டால் பெண்கள் தைரியமாக கையாள வேண்டும். பெண்கள் தைரியமாக இருந்தாலே ஏமாற்ற நினைக்கும் ஆண்கள் அவர்களை அணுக மாட்டார்கள். எப்போதும் தன்னை தைரியம் நிறைந்தப் பெண்ணாக வெளிபடுத்திக்கொள்ளும் பெண்களை ஆண்கள் ஒருபோதும் அணுகமாட்டார்கள் . பேசுவதற்கே அச்சம் வரும்.

ஒருவேலை நீங்கள் பிரச்னையில் மாட்டிக் கொண்டீர்களானால், அந்த நபர் மிரட்டினாலும் பயப்படாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். இன்று பெண்களுக்கான பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை அணுகி புத்திசாலித் தனமாக செயல்படுங்கள்’’ என்று ஆலோசனை சொல்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா.
First published: March 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading