நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அல்லது என்ன செய்கிறீர்கள் என்பது குறித்து உங்கள் கணவர் அல்லது காதலர் ஆர்வம் கொள்ளாமல் இருக்கிறார்களா? அப்படியானால் அதற்கான தவறு உங்களிடமோ அல்லது உங்கள் மனம் கவர்ந்தவரிடமோ இல்லை. பொதுவாகவே, குறிப்பிட்ட சில குணங்கள் கொண்ட பெண்களைத் தான் ஆண்களுக்கு அதிகம் பிடிக்கும்.
தேவையில்லாத விஷயங்கள் குறித்து முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பெண்களையோ அல்லது சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்து பேசும் பெண்களையோ ஆண்கள் விரும்புவதில்லை. நீங்கள் பேசும் பேச்சு அர்த்தமுள்ளதாக இருந்தது என்றால் ஆண்களுக்கு நிச்சயமாக உங்களை ரொம்பவே பிடித்துப் போகும். குறிப்பாக, எந்த விஷயம் என்றாலும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.
ஒரு சில குறிப்பிட்ட குணங்கள் இருக்கும் பெண்களை ஆண்கள் எப்போதும் விரும்புவார்கள். அவை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
also read : கணவன் மனைவிக்குள் மறந்தும் கூட இந்த வார்த்தைகளை சொல்லக்கூடாது..!
மோடிவேஷன் செய்யும் பெண்கள்:
தங்கள் மீது அன்பு செலுத்தி, வாழ்க்கையில் எப்போது ஊக்கம் (மோடிவேஷன்) கொடுப்பவராக இருந்தால் ஆண்களுக்குபிடித்துப் போகும். குறிப்பாக, பெண்கள் எப்போதும் தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் ஆணின் விருப்பம் ஆகும்.
அனைவர் மீது அக்கறை காட்டும் பெண்கள்:
உங்களை சுற்றி உள்ள அனைவர் மீதும் அக்கறை கொண்டு பேசுபவராக நீங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நீங்கள் நடந்து கொண்டால், ஆண்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அதே சமயம், நீங்கள் நாடகத்தனமாக அல்லது உங்களைப் பற்றியே சுயபுராணம் பாடும் ஒருவராக இருந்தால் ஆண்களுக்கு நிச்சயமாக உங்களை பிடிக்காது. தங்கள் வாழ்க்கைத் துணை அறிவார்ந்தவராகவும், தெளிவானவராகவும் இருக்க வேண்டும் என்பதே ஆண்களின் விருப்பம்.
நண்பர்களுக்கு பிடித்தவராக இருக்கும் பெண்கள்:
ஒவ்வொரு ஆணுக்கும் இது மிக முக்கியம். தன்னுடைய நண்பர்கள் குறித்து குறை சொல்லும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது. அதே சமயம், அவர்களுடைய நண்பர்களிடம் நீங்கள் நல்ல பெயர் வாங்கி விட்டால் போதும். ஆண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். நண்பர்களுடன் சகஜமாக பழகும் மனைவி அல்லது காதலி மீது ஆண்கள் மிகுந்த அன்பு கொண்டிருப்பார்கள்.
also read : இந்த குணங்கள் உங்களது வருங்கால வாழ்க்கை துணைக்கு இருந்தால் நீங்கள் லக்கி தான்!
பணப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பெண்கள்:
நிதி சார்ந்த எந்தவொரு சிக்கல்களுக்கும் எளிதான தீர்வுகளை சொல்பவராக நீங்கள் இருந்தால், ஆண்களுக்கு ரொம்பவே பிடித்துப் போகும். நிதி சார்ந்த எந்த ஒரு விஷயத்தையும் உங்கள் கணவர் அல்லது காதலனுடன் ஆலோசனை செய்து தகுந்த தீர்வுகளை நீங்கள் வழங்க வேண்டும்.
வாழ்க்கையை விட சுவாரஸ்யமான, ஆதரவான, பெரிய ஒரு பெண்:
ஆண்களை உறக்கத்தில் இருந்து எழுப்பி, கனவுகளை நோக்கி ஓடச் செய்பவர் எவராயினும் அவர்களுக்கு பிடித்து விடும். அதிலும், நீங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை அல்லது தன் வாழ்க்கையை விட நீங்களே உயர்வானவர் என்ற பிம்பத்தை ஆண்களிடம் நீங்கள் ஏற்படுத்தி விட்டால் என்றென்றும் உங்களை பிரியவே மாட்டார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.