முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காதல் பிரேக்அப்பில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக பாதிப்பு - ஆய்வில் தகவல்!

காதல் பிரேக்அப்பில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக பாதிப்பு - ஆய்வில் தகவல்!

காதல் பிரேக்அப்

காதல் பிரேக்அப்

இதில் பெண்களை விட ஆண்களே உறவுகளை நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்கள் சமூகத்தினால் பெண்களை விட வலிமையானவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காதல் பிரேக்அப்பின் போது, பெண்களை விட ஆண்களே அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘லான்காஸ்டர்’ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான சர்வதேச உளவியலாளர்கள் கொண்ட குழு ஒன்று ‘உறவு சிக்கல்கள்’ குறித்த பெரிய ஆய்வினை நடத்தியது. உறவுகளில் பொதுவாக இருக்கும் சிக்கல்கள் குறித்தான பெரிய ஆய்வு இதுவாகும். உறவுச் சிக்கல்களைப் பற்றி நமக்குத் தெரிந்தவை பெரும்பாலானவை தம்பதிகளுக்கு இடையேயான உறவில் தான் இருக்கிறது. உறவில் சிக்கல்கள் அன்பு,நேரம், பணம் போன்றவைகளை சார்ந்தே இருக்கிறது.

பொதுவாக என்னென்ன வகையான உறவு சிக்கல்கள் தோன்றுகின்றது என்பதை பற்றி கண்டறியவே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வில் சுமார் 84,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற நிலையில், இவர்களின் உளவியல் பண்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உறவு பற்றி ஒவ்வொருவரின் எண்ணமும் என்ன என்று புள்ளிவிவரங்கள் வாரியாக கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வில் 5 பேரில் ஒருவர் பிரச்சனையை பற்றி விவாதிக்க சிரமப்படுகிறார் என்று தெரியவந்துள்ளது. அதேபோல, 8ல் ஒருவர் தங்கள் உறவில் நம்பிக்கை தொடர்பான சிக்கல்கள் உள்ளதாக கூறி இருக்கிறார்கள். ஆண்,பெண் இருவருக்கும் இடையே உள்ள பாலின வேறுபாடு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் இந்த ஆய்வின் குழுவில் உள்ள சார்லோட் என்ட்விஸ்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து விளக்கிய அவர், இந்த ஆய்வில் பெண்களை விட ஆண்கள் உண்மையில் குறைந்த உணர்வுப்பூர்வமாக உறவுகளில் இருக்கிறார்களா? அல்லது ஆண்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் வெறுமனே களங்கம் அடைகிறார்களா? என்ற கேள்விகள் கேட்கப்பட்டன. உறவுப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும்போது பொதுவான விஷயம், பிரச்சனைகளால் ஏற்படும் உணர்ச்சி மற்றும் வலியைப் பற்றியதாக இதில் கேட்கப்பட்டது.

வருத்தம், பிரிதல், அழுகை போன்ற வார்த்தைகளால் பதில் அளித்தனர். நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்லாமல் வேறொரு முடிவு வந்தது. இது எங்கள் குழுவினருக்கு ஆச்சர்யத்தை தந்தது. உறவில் பிரிவு ஏற்படுவதனால் பெண்களை விட ஆண்களே அதிக வலியை அனுபவித்தனர் என்று விவாதிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பெண்களைப் போலவே ஆண்களும் உறவுப் பிரச்சனைகளால் குறைந்தப்பட்சம் எப்படி உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகிறது.

சுதந்திரமாக இருக்கும் பெண்ணை காதலிக்கும் ஆண்கள் இந்த 6 விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்...

இதில் பெண்களை விட ஆண்களே உறவுகளை நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்கள் சமூகத்தினால் பெண்களை விட வலிமையானவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெண்களுக்கு இணையாக ஆண்களும் உறவு குறித்த சிக்கல்களில் துன்பத்தை அனுபவிக்கின்றனர். பெரும்பாலான ஆண்கள் இதனை சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை என்பதே முக்கிய காரணம் ஆகும்’ என்கிறார் டாக்டர் ரியான் பாய்ட்.

நம் உறவுகளில் எப்போது, ​​​​ஏன் விஷயங்கள் தவறாக நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், காதல் உறவில் ஏற்படும் பின்னடைவுகளுக்கு காரணம் என்ன என்று இந்த ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. எந்தவொரு பிரச்சனையின் போதும், பெண்களைப் போலவே ஆண்களும் முதலில் மற்றவர்களின் உதவியை நாடுகிறார்கள் என்பதை இந்த ஆய்வு சுட்டி காட்டுகிறது.

First published:

Tags: Breakup, Love, Relationship Fights, Relationship Tips