லாக்டவுனில் வீட்டிலேயே டேட்டிங் செய்ய தம்பதிகளுக்கு சூப்பர் ஐடியா!

கணவன்- மனைவி

கொரோனா காரணமாக வெளியே செல்ல முடியாது என்பதால், வீட்டையே டேட்டிங் இடமாக மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.

 • Share this:
  வைரஸ் என்ற அச்சுறுத்தல் இருந்தாலும், குடும்பத்தினருடன் அதிகம் நேரம் செலவிடுவதற்கான ஒரு நேரமாக கொரோனா லாக்டவுன் மாறியுள்ளது. வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வேலை விஷயமாக இருந்தவர்கள், பல மாதங்கள் மற்றும் வருடங்களுக்கும் பிறகு வீட்டிற்கு ஏராளமானோர் திரும்பியுள்ளனர். வீடியோ கால் மற்றும் தொலைபேசி அழைப்புகளில் மட்டுமே உரையாடி வந்த தம்பதிகளுக்கு இருவரும் அன்பை பரிமாறிக்கொள்ளும் நேரமாக அமைந்திருக்கிறது.

  கொரோனா காரணமாக வெளியே செல்ல முடியாது என்பதால், வீட்டையே டேட்டிங் இடமாக மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனமாகும். முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பது அல்லது கதைகளை பேசிக்கொள்வது என்பது சில நாட்களில் சலிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால், இருவரும் இணைந்து புதுமையான விஷயங்களை சேர்ந்து முயற்சிக்கலாம்.

  திரைப்படம் பார்த்தல்

  ஓடிடி தளங்களில் நிறைய புதுப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகியிருக்கின்றன. தம்பதிகள் இருவரும் இணைந்து உங்களின் ரசனைக்கு ஏற்ப படத்தை தேர்வு செய்து இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம். காதல் படங்கள் உங்களின் ரசனைக்கும், அன்புக்கும் ஏதுவாக இருக்கும். காமெடி படங்கள் இருவரின் அன்பான சிரிப்பை வெளிக்கொண்டு வந்துவிடும்.  கேன்டில் லைட் டின்னர்

  இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறீர்கள் என்றால் அல்லது வேலை காரணமாக உங்களிடையே ரொமான்ஸ் தொலைந்து போயிருந்தால் அதனை மீட்டுக் கொண்டு வருவதற்கு கேன்டில் டின்னர் ஒரு சூப்பரான செட்டப் ஆகும். இரவு நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு ஒரு டேபிளில் கேன்டில் விளக்கை வைத்து, இருவரும் எதிரெதிர் திசையில் அமர்ந்து பிடித்த உணவை வைத்து அன்பாக பரிமாறிக்கொளும் சுகம், தம்பதிகளுக்கு மட்டுமே கிடத்த வரப்பிரசாதம்.

  கேக் தயாரித்தல்

  தினமும் சாப்பாடு, பொறியல் என ஒரே வகையான உணவை தயார் செய்து சாப்பிடுவது என்ற வழக்கத்தை மாற்றி, இருவரும் இணைந்து புதுமையாக கேக் செய்யலாம். யூடியூப்பில் ஏராளமான வீடியோக்கள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த கேக்கை இருவரும் இணைந்து பாசமாக செய்யும்போது, அதில் கிடைக்கும் சுவை தனியொரு உலகத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். யாரேனும் ஒருவர் செய்யும் தவறுகள், வாழ்நாள் முழுவதும் நினைத்து சிரிக்கும்படியான காமெடியும் அரங்கேற வாய்ப்புகள் உள்ளன.  டபுள் டேட்டிங்

  என்ன டபுள் டேட்டிங்கா? என கேட்பதற்கு உங்களுக்கு விநோதமாக இருக்கலாம். வீடியோ காலில் பேசும்போது இருவர் மட்டும் உரையாடுவீர்கள். அப்போது, இருவருக்கும் நெருக்கமான நண்பர்களையும் அந்த காலில் இணைத்து தங்களின் பால்ய நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்தி பேசும்போது, கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும்.

  40 வயதை தொடும் பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா..? மனைவியை புரிந்துகொள்ளுங்கள்..!

  கேஜெட்டுகள்

  இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறீர்கள் என்றால், உங்களுக்கு இடையில் நெருக்கம் மற்றும் புரிதல் எப்படி உள்ளது? என்பதை தெரிந்து கொள்ள விளையாட்டுகள் இருக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் ஏராளமான ஆப்கள் இருக்கின்றன. வீட்டில் இருப்பதற்கு போர் அடித்தால், அந்த ஆப்களை டவுன்லோடு செய்து ஜாலியாக நேரத்தை போக்குங்கள்.  வேலை செய்தல்

  வீட்டு வேலைகளை மனைவிக்கு மட்டுமே என்று ஒதுக்காமல் இருவரும் வேலை சமமாக பங்கிட்டுக்கொள்ளுங்கள். துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல்,வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளில் மனைவிக்கு உதவியாக இருக்கலாம். வேலையை இருவரும் சேர்ந்து செய்யும்போது சோர்வு ஏற்படாது. அன்பும், அன்யோன்யமும் பெருகும்.

   
  Published by:Sivaranjani E
  First published: