HOME»NEWS»LIFESTYLE»relationship masturbation is it right to imagining making sex fantasies with your female colleagues esr swpb

பணிபுரியும் சக பெண்களுடன் உடலுறவு கொள்வது போல் கற்பனை செய்கிறீர்களா..? இதனால் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிறீர்களா..? பல்லவியின் பதில் இதோ...

நம் மூளையானது பல விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியது. அதனால்தான் நீங்கள் அப்படியான கற்பனைகளைக் கொண்டிருக்கிறீர்கள்.

பணிபுரியும் சக பெண்களுடன் உடலுறவு கொள்வது போல் கற்பனை செய்கிறீர்களா..? இதனால் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிறீர்களா..? பல்லவியின் பதில் இதோ...
மாதிரி படம்
  • Share this:

கேள்வி : என்னுடைய திருமண வாழ்க்கையிலும், தாம்பத்திய வாழ்க்கையிலும் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். இருப்பினும் என்னுடைய சுய இன்பத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடன் பணிபுரியும் சக பெண்கள் சுய இன்பம் காண்பதுபோல் கற்பனை செய்து பார்க்கிறேன். இதனால் நான் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறேன். இருப்பினும் என் சிந்தனைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுடன் வெவ்வேறான பொசிஷன்களின் செக்ஸ் வைத்துக்கொள்வதுபோல் நினைத்துப் பார்க்கிறேன். அவ்வாறு கற்பனை செய்துகொண்டே சுய இன்பம் கொள்கிறேன். அதனால் திருப்தி அடைகிறேன். இதனால் நான் தவறானவனா..?

முதலில் திருமணத்திற்குப் பின் சுய இன்பம் காண்பது முற்றிலும் தவறில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதேபோல் உங்கள் உடலுறவு திருப்திக்கு ஒருவர் மீது மட்டுமே ஒட்டுமொத்த பொருப்பையும் திணிப்பது அபத்தமானது. இருவரில் ஒருவருக்கு என்றைக்காவது உடலுறவில் விருப்பம் இல்லாமல் போகலாம். உடலுறவு கொள்ள முடியாதபடி நேரமில்லாமல் போகலாம் அல்லது உங்கள் செக்ஸ் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திருப்தி இல்லாமல் போகலாம். இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் சுய இன்பம் கொள்வது மிகவும் உதவியாக இருக்கும். அதோடு அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. உங்கள் உறவுக்கும் நல்லது.

அதேபோல் செக்ஸ் ஆசைகள் என்பது தவறான விஷயம், பேசக்கூடாத விஷயம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். இதனால் உங்கள் மனைவியிடம் அதுகுறித்து வெளிப்படையாக பேச அசௌகரியமாக உணரலாம். அதனால் கூட இப்படியான எண்னங்கள் தோன்றலாம்.





செக்ஸ் என்பது வெறும் செக்ஸ் கிடையாது. பெல்ஜியன் சைக்கோ தெரபிஸ்ட் எஸ்தர் பர்ல் ’வாழ்க்கையில் எல்லாவற்றையும் போலவே செக்ஸ் மற்றும் செக்ஸ் விருப்பங்களும் நம் வாழ்க்கைக்கான அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுக்கொடுத்து நாம் யார் என்னும் அடையாளத்தை அளிக்கும்’ என்கிறார். அப்படி நீங்கள் உடலுறவில் விரும்புவது தியான நிலையாக இருக்கலாம். தேவைக்காக இருக்கலாம், மகிழ்ச்சியின் உட்சபட்சமாக இருக்கலாம்..ஏன் ஆக்கிரமிப்பு, வன்முறைக் களமாகவும் நினைக்கலாம். இப்படி அது உங்கள் விருப்பத்தைப் பொருத்து ஆன்மாவின் வடிமாக உருவாகலாம். அந்த வகையில் உங்கள் விஷயத்தில் செக்ஸ் என்பது தவறான விஷயமாக இருப்பதால் இப்படி கற்பனை செய்துகொள்வதால் பாலியல் சிலிர்ப்பு கொள்கிறீர்கள்.

ஆனால் பலர் இப்படி மற்றவர்கள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்டு கற்பனை செய்துகொள்கின்றனர். உதாரணத்திற்கு பிடித்த ஒரு நடிகர் , நடிகை மீது கிரஷ் இருப்பதுபோல்...அதேபோல் நீங்களே உங்களை இவ்வாறு நினைப்பதால் தான் தவறானவனோ என்று நினைக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் தவறானவர் கிடையாது. உங்கள் மனைவிக்கு நீங்கள் தவறான கணவரும் கிடையாது.

உங்கள் மனைவிக்கு செக்ஸ் ஆசையே இல்லையா..? இதற்கு நீங்கள் என்ன செய்யலாம்..? பதிலளிக்கிறார் பல்லவி..!

நம் மூளையானது பல விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியது. அதனால்தான் நீங்கள் அப்படியான கற்பனைகளைக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக.. உங்கள் சிந்தனைகளுக்கு ஏற்ப செயல்படுகிறீர்கள் என்பதும் அர்த்தமல்ல. அவ்வாறு செயல்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக உணரலாம். அதற்காக அவ்வாறு செய்யலாம்.



முதலில் இப்படி நீங்கள் கற்பனை செய்துகொள்வது, சிந்திப்பது எல்லாமே ஒரு மனித ஆன்மாவின் இயல்பு என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் தவறான மனிதரும் கிடையாது. இரண்டாவது, ஒருவேளை உங்கள் நிலைமை மிகவும் மோசமானால், உங்கள் துணை மீதான ஈர்ப்பு குறைவதுபோல் தெரிந்தால் அல்லது நிஜத்திலும் உங்கள் சக பெண் ஊழியர்களுடன் உடலுறவு கொள்ளும் ஆசை வந்துவிட்டால், உங்களைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு போனால் உடனே ஒரு தெரப்பிஸ்டை அணுகுவது நல்லது. ஏனெனில் இந்த கற்பனைகள் உங்கள் ஆன்மாவை ஆக்கிரமிக்கக் கூடும். எனவே அதை சமநிலை செய்யவும், அதோடு போராடவும் நீங்கள் தொடர் தெரபிகள் எடுத்துக்கொள்வது அவசியம்.
Published by:Sivaranjani E
First published: