• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • விவாகரத்து இல்லாத திருமண வாழ்க்கைக்கு தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..

விவாகரத்து இல்லாத திருமண வாழ்க்கைக்கு தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

வாழ்க்கையில் கடினமான காலங்களில், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது செய்து கொண்ட சத்தியங்களை மறந்துவிடாதீர்கள்.

  • Share this:
திருமண வாழ்க்கையில் அழகாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. எதிர்பார்த்த வாழ்க்கை அமையாதபோது அல்லது இருவருக்கும் இடையில் மனம் ஒன்றிப்போகாதபோது, விவாகரத்து எனும் முடிவு தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. இந்த கசப்பான அனுபவம் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள், முன்னெச்சரிக்கையாக ஒரு சில டிப்ஸ்களை கடைபிடிக்க வேண்டும்.

மகிழ்ச்சி : 

திருமண வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்காதபோது, சிலர் விவாகரத்தை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், விவாகரத்துக்கு பின்பு நீங்கள் செய்துகொள்ள நினைக்கும் 2வது திருமணமும், மகிழ்ச்சியாக இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. வாழ்க்கையில் சில கஷப்பான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொண்டு யோசித்து முடிவெடுப்பது நல்லது.

கல்வி : 

திருமணத்துக்காக படிப்பு மற்றும் வேலையை ஒருபோதும் துறப்பது சிறந்த முடிவாக இருக்காது. திருமணமாகி, உங்களுக்கான சூழல் அனைத்தும் சரியாக இருக்கிறது என்கிற நிலை வரும் வரை வேலையை விடக்கூடாது. மேலும், படிப்பை ஒருபோதும் பாதியில் நிறுத்தக்கூடாது. எதாவதொரு சமயத்தில் நீங்கள் படித்த படிப்பு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். திருமண வாழ்கைகயில் இருந்து விலக நேர்ந்தால், அந்த சமயத்தில் நீங்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் சுயமரியாதையுடன் இருக்க உதவும்.



சத்தியம் :

வாழ்க்கையில் கடினமான காலங்களில், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது செய்து கொண்ட சத்தியங்களை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்து கொண்ட சத்தியம், வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற மன உறுதியை உங்களுக்கு கொடுக்கும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும். அன்பையும், அவை நியாபகப்படுத்தும்.

மருமகளுடன் அடிக்கடி சண்டை வருகிறதா? நல்ல மாமியாராக உங்கள் மருமகளை புரிந்துகொள்ள சில டிப்ஸ்

காதல் :

காதல் வாழ்க்கையில் இருந்ததுபோன்ற ரொமானஸ், திருமண வாழ்க்கையில் அப்படியே தொடரும் என எதிர்பார்க்க முடியாது. நிதி நெருக்கடி, குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களையும் உள்ளடக்கியது திருமண வாழ்க்கை என்பதால், பார்ட்னர் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது போல் உணரக்கூடாது. உங்கள் அன்பான நாட்களை மீண்டும் ஒருமுறை எண்ணிப்பாருங்கள். அவர்களை நீங்கள் விரும்பிய நாட்களை நினைக்கும்போது, திருமண வாழ்கையில் இருந்து வெளியேறும் எண்ணம் வராது.

பிரச்சனைகள் :

திருமண வாழ்க்கையினால் அனைத்தும் கிடைத்துவிடும், பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. யாரோ ஒருவர் நமக்கான பிரச்சனைகள் தீர்த்துவிடுவார் என்று நம்புவதே நல்லதல்ல. நம் பிரச்சனைகளை நாமே தீர்த்துக் கொள்ளும் வகையில், நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்வுடன் செயல்படும்போது, உங்களின் பிரச்சனைகளை எளிதாக கையாளக்கூடிய திறமை வந்துவிடும்.



சமத்துவம் :

திருமண வாழ்க்கையில் இருவரும் சமமானவர்கள். ஒருவரைவிட இன்னொருவர் பெரியவர் கிடையாது. ஒருவர் இன்னொருவரின் சுதந்திரம், உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். பொருளாதாரம், வேலை உள்ளிட்ட அம்சங்களில் ஒருவருக்கொருவர் ஈகோவைக் காட்டிக் கொண்டால், நிச்சயம் வாழ்க்கை அழகாக இருக்காது. அன்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தவறுகள் :

திருமண வாழ்க்கை கசப்பாக செல்வதற்கு உங்களுடைய பார்ட்னரை மட்டுமே குறை சொல்வது சிறந்ததாக இருக்காது. இருவரும் தங்களின் தவறுகளை ஒப்புக்கொண்டு, அதனை மறந்துவிடுவது அல்லது கடந்து செல்வது மட்டுமே நல்ல முடிவாக இருக்கும். தவறுகள் உங்களுக்கு படிப்பிணைகளை கொடுத்திருக்கும். அதனை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு மூலதமான மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: