ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

திருமணம் வேண்டாம்... லிவிங் டுகெதர் போதும் : 2K கிட்ஸுகளிடம் மாறி வரும் மனநிலை

திருமணம் வேண்டாம்... லிவிங் டுகெதர் போதும் : 2K கிட்ஸுகளிடம் மாறி வரும் மனநிலை

லிவிங் டுகெதர்

லிவிங் டுகெதர்

திருமணம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் செலவு செய்யாமல் வாழ்க்கையை சிம்பிளாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தற்போது வளர்ந்து வருகிறதாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதுக்குமான பந்தம் ஏற்படுத்துகின்ற விஷயமாக திருமணங்கள் இருக்கின்றன. ஒரு ஆண், ஒரு பெண் என்பதோடு நின்றுவிடாமல் இரு வீட்டார்கள், உறவுகள், சமூகங்கள் என்று ஒரு பெரிய சங்கிலித் தொடர் பிணைப்பு இந்த திருமணங்கள் மூலமாக நடைபெறுகிறது.

குழந்தைகள் பெரியவர்களாக வருவதற்கு முன்பாகவே, உறவுகளில் இன்னார் மகனுக்கு அல்லது மகளுக்கு நம் பிள்ளையை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூட முன்கூட்டியே முடிவு செய்து வைக்கின்றனர். ஆனால், இந்த கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றும் உள்ளது. சட்ட ரீதியான விவாகரத்து பெறாத வரையில், திருமணம் என்பது காலா, காலத்திற்கும் உடைக்க முடியாத உறுதியான பந்தம் ஆகும்.

ஆனால், இப்படியொரு கட்டுக்குள் நுழைவதை விரும்பாமல் அல்லது திருமணம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் செலவு செய்யாமல் வாழ்க்கையை சிம்பிளாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தற்போது வளர்ந்து வருகிறதாம். குறிப்பாக, உடைக்க முடியாத திருமண பந்தத்தில் இருப்பதை காட்டிலும், நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் கூட்டு சேர்ந்து இருப்பதை சிலர் விரும்ப தொடங்கியுள்ளனர்.

லிவிங் டுகெதர்

திருமணம் செய்து கொண்ட ஒரு ஆணும், பெண்ணும் என்ன வாழ்க்கையை நடத்தப் போகிறார்களோ, ஏறக்குறைய அதேபோன்ற வாழ்க்கையை திருமணம் செய்து கொள்ளாமல் மேற்கொள்வது தான் லிவிங் டூகெதர் கலாச்சாரமாக இருக்கிறது. இன்னும் சிலர், வேறு மாதிரியாக யோசிக்கிறார்களாம். அதாவது, நீண்ட கால பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அவரவர் வீட்டில் வசிப்பது என்ற முடிவையும் செயல்படுத்துகின்றனர்.

டேட்டிங் செய்யும் போதும் பாலின சமத்துவம் ஏன் அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்

Andwemet என்ற அமைப்பை நடத்தி வரும் ஷாலினி சிங் இதுகுறித்து கூறுகையில், “பொருத்தம் பார்ப்பது பொதுவாக திருமணத்துடன் தொடர்புடையது. அதே சமயம் கால மாற்றத்திற்கு ஏற்ப சிங்கள்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். நீண்ட கால பந்தம் அல்லது திருமணம் தவிர்த்த கூட்டு வாழ்க்கை போன்றவற்றை எதிர்பார்க்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.

ஒத்த கருத்து உடைய மக்கள், திருமணம் செய்யாமல் இணைந்து வாழுவதற்கான உதவியை தங்களது அமைப்பு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

திருமணத்திற்கு பயம்

அண்ட்வீமெட் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றவர்களில் 80 சதவீதம் பேர் எந்தவித முத்திரையும் இல்லாமல் கூட்டு வாழ்க்கையில் இணைந்திருக்க விரும்புகிறார்களாம். திருமணம் என்பது ஒரு முத்திரையாக இருக்கிறது, உண்மையான பந்தம் அதற்கும் மேலானது என்று கருதுகிறார்களாம்.

வீட்டு பந்தம்

வீட்டு பந்தம் என்ற மற்றொரு உறவுமுறையும் தற்போது உருவாகி வருகிறது. இதில், திருமணத்திற்கு ஈடான சட்டப் பாதுகாப்பு உண்டு என்றாலும், செலவை தவிர்க்க பாரம்பரிய திருமணம் செய்து கொள்வதில்லை. திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழவும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Marriage Life, Relationship Tips