முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆண்கள் செய்யும் இந்த 5 தவறுகளால்தான் பெண்கள் பிரிந்து செல்கிறார்கள்..!

ஆண்கள் செய்யும் இந்த 5 தவறுகளால்தான் பெண்கள் பிரிந்து செல்கிறார்கள்..!

உங்கள் பார்ட்னர் சொல்வதையும் கேளுங்கள்

பொதுவாக சண்டையிடும் சமயங்களில் நாம் செய்யும் மாபெரும் தவறு இதுதான். எதிர் தரப்பில் உள்ள பார்ட்னரை நாம் பேச விடுவதே இல்லை. உங்கள் பார்ட்னர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.

உங்கள் பார்ட்னர் சொல்வதையும் கேளுங்கள் பொதுவாக சண்டையிடும் சமயங்களில் நாம் செய்யும் மாபெரும் தவறு இதுதான். எதிர் தரப்பில் உள்ள பார்ட்னரை நாம் பேச விடுவதே இல்லை. உங்கள் பார்ட்னர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.

பெண்களின் விருப்பத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆகியவை பெண்கள் ஒரு உறவிலிருந்து விலகிச் செல்வதற்கான முக்கிய காரணங்களாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெண்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை, என்னிடம் இருந்து விலகிப் போகிறாள், காரணமே இல்லாமல் பிரிந்து சென்று விட்டால் என்று ஆண்கள், பெண்கள் மீது பல குற்றச்சாட்டுகளை அவ்வப்போது வைப்பார்கள். ஆனால் ஆண்கள் செய்யும் ஒருசில செயல்கள் மற்றும் ஆண்களின் நடவடிக்கைகள் தான் பெண்களை அவ்வாறு முடிவெடுக்க வைக்கிறது என்பதைப் பற்றி ஆண்கள் பெரும்பாலும் புரிந்து கொள்வதில்லை. மரியாதை இன்றி நடப்பது அல்லது நடந்து கொள்வது, எப்போதும் விவாதம் செய்வது, பெண்களின் விருப்பத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆகியவை பெண்கள் ஒரு உறவிலிருந்து விலகிச் செல்வதற்கான முக்கிய காரணங்களாக இருக்கிறது. ஆண்கள் செய்யும் தவறுகள் என்ன?

தன்னைப் பற்றி மட்டுமே முன்னிலைப்படுத்துவது :

செல்ஃப்-லவ் எனப்படும் தனக்கான தேவைகள் மற்றும் தன்னுடைய நலம் பற்றி சிந்திப்பது அவசியம் தான். ஆனால் அதற்கும், நார்சிசிஸ்ட் என்று கூறப்படும் எப்போதுமே தன்னைப் பற்றி மட்டுமே முன்னிறுத்துவது என்பதற்கும் இடையே மெல்லிய திரை தான் உள்ளது. பிறர் தேவைகளையும் அல்லது விருப்பங்களையும் புரிந்துகொள்ளாமல் முழுக்க முழுக்க தன்னுடைய தேவைகள் தன்னுடைய விருப்பங்கள், என்று தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்து செயல்படும் குணம் பெண்களை எதிர்மறையாக பாதிக்கும். இவருடைய மனதில், இவருடைய வாழ்க்கையில் நான் இல்லை அல்லது எனக்கு முக்கியத்துவம் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கும். இதுவே, பெண்கள் விலகிச் செல்வதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

அடுக்கடுக்காக பொய்கள் :

ஒரே ஒரு பொய்தான், இது ஒரு சின்ன பொய் தான் என்று தொடங்கும் பொய் சொல்லும் பழக்கம் அடுக்கடுக்காக பொய்களை மட்டுமே கூறும் அளவுக்கு வளர்ந்துவிடும். ஒரு உறவு நம்பிக்கை மற்றும் நேர்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாகும். பொய்களையே சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் உண்மை வெளிவந்து விடும். நம்பிக்கையை பொய்கள் சிதைந்து விடுவதால் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய பார்ட்னரின் மீது பெண்ணுக்கு நம்பிக்கை வரவே வராது.

பேசிக் கொள்ளாமலேயே இருப்பது :

வெளிப்படையாக பேசிக்கொள்வது, மனம்விட்டு உரையாடுவது ஆகியவை ஒரு உறவை பலப்படுத்தும். காதலர்கள் அல்லது திருமணமான தம்பதிகள் மனம் விட்டு பேசுவது மிகவும் அவசியமாகும். ஆனால் ஒரு ஆண் தன்னுடைய காதலி அல்லது மனைவியோடு பேசுவதை தவிர்த்தால் அல்லது அதைக் கண்டு கொள்ளாமலேயே இருந்தால், அவரே பிரிவுக்கு வழி வகிக்கிறார் என்று அர்த்தம்.

உறுதியான பெண்கள் இந்த 7 விஷயங்களை ஆண்களுக்காக செய்யவே மாட்டார்கள்..!

பெண்ணுக்கு என்ன தேவை என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பது :

ஒரு பெண்ணுக்கு என்ன பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதை உறவின் தொடக்கத்தில் தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பது இயல்பானது தான். ஆனால் உறவு வலுப்பட அவர்களின் விருப்பு மற்றும் வெறுப்புகளையும் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு கூட முயற்சி எடுக்கவில்லை என்றால் இந்த உறவின் மீது உங்களுக்கு விருப்பம் இல்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.

நேரம் ஒதுக்காமல் இருப்பது :

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட ஒரு நேரம் தேவைப்படுவது போல, உங்கள் பார்ட்னர் உடன் செலவிட நீங்கள் கணிசமான நேரத்தை ஒதுக்க வேண்டும். உறவை வளர்ப்பது முதல் அவரைப் புரிந்து கொள்வது வரை எல்லாவற்றிற்கும் நீங்கள் உங்கள் பார்ட்னருக்காக நேரம் செலவிடுவதைத் தவிர்க்கவே கூடாது.

First published:

Tags: Love Tips, Relationship Fights, Relationship Tips