• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? நடிகை வித்யா பாலன் கூறும் ஆலோசனைகள்!

சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? நடிகை வித்யா பாலன் கூறும் ஆலோசனைகள்!

நடிகை வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன் தனது தொழில் வாழ்க்கை மற்றும் அவரது தனிப்பட்ட முடிவுகளுக்கான அணுகுமுறையில் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் தனது தொழில் வாழ்க்கை மற்றும் அவரது தனிப்பட்ட முடிவுகளுக்கான அணுகுமுறையில் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர். இவர் எப்போதும் தனது மனதில் உள்ளதை தயக்கமின்றி பேசுவதில் தைரியமிக்கவர். நடிகை, வித்யா பாலனுக்கு இப்பொது வயது 34. இவர் மறைந்த நடிகை, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட, "தி டர்ட்டி பிக்சர்' என்ற இந்தி படத்தில் நடித்து பிரபலமானவர். இந்த படத்தில் நடித்ததற்காக, வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இவர் தம்மாரே தம், ககானி உள்ளிட்ட படங்களிலும், இவர் நடித்துள்ளார்.

இவர், யு டிவி நிறுவன தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான சித்தார்த் ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் திருமணம் நடந்தது. வித்யா பாலன், பாலக்காட்டு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். சித்தார்த், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இதனால், இவர்களது திருமணம், தென் மற்றும் வட மாநில கலாசார முறைப்படி நடந்தது. திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இந்த நிலையில் வித்யா பாலன் திருமண வாழ்க்கை குறித்த சில ஆலோசனைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த முறையும், திருமணத்தைப் பற்றியும், உறவை எவ்வாறு உயிரோட்டத்துடன் வைத்திருப்பது என்பது பற்றியும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். வாழ்க்கைத்துணைகள் எப்போதும் ஒருவருக்கொருவர் குறைவாக மதிப்பிடுவதுக் கூடாது என்று கூறியுள்ளார்.

Also read... என்னுடைய சாய்ஸ் எப்போதும் டெனிம் ஆடைகள்தான் - ஃபேஷன் தேர்வு பற்றி மனம் திறந்த ஐஷ்வர்யா தனுஷ்..!

இது குறித்து அவர் சமீபத்தில் ETimes-க்கு அளித்த பெட்டியில், “திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க நிறைய வேலைகள் செய்ய வேண்டி உள்ளன. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள் உங்களுக்கு முழுவதும் தெரியாத ஒரு நபருடன் உங்களது வாழ்க்கையை வாழப் போகிறீர்கள். ஆனால் திருமண உறவில் நீங்கள் உங்கள் துணையை குறைவாக மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதானது. இருப்பினும் அது மிகவும் பயங்கரமான விஷயம். அதுவே உங்கள் உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்தக்கூடும், ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது திருமண வாழ்க்கை குறித்து வித்யா பாலன் கூறியதாவது, "இந்த எட்டு ஆண்டுகளில் நான் கண்டுபிடித்தது என்னவென்றால், மற்ற நபரை குறைவாக மதிப்பிடாமல் இருக்க எடுத்துக் கொள்ளும் முயற்சி தொடர்பான வேலைகளால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் அதனை செய்வதில் இருந்து நழுவினால், வாழ்க்கை அவ்வளவு உற்சாகமாக இருக்காது, மிகவும் சாதாரணமாகிவிடும். திருமண வாழ்க்கையை வலுவாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க வேண்டிய வேலையை நான் எப்போதும் விரும்புகிறேன். ” என்று கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: