ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நீங்கள் அதிகம் சுயநலம் கொண்டவர் என நினைக்கிறீர்களா..? உங்களுக்காகவே இந்த டிப்ஸ்...

நீங்கள் அதிகம் சுயநலம் கொண்டவர் என நினைக்கிறீர்களா..? உங்களுக்காகவே இந்த டிப்ஸ்...

சுயநலம்

சுயநலம்

சுயநலமாக இருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல என்பதை நாம் பல நேரங்களில் உணர்ந்தாலும், வாழ்க்கையில் உள்ள எல்லாவற்றையும் போலவே சுயநலத்தில் நன்மை மற்றும் தீமைகள் கலந்திருக்கிறன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து செல்கிறோம். பல நேரங்களில் கொஞ்சம் அல்லது நிறைய சுயநலமுடன் செயல்படுகிறோம். ஆனால் எப்போதுமே சுயநலமற்ற மற்றும் இரக்க குணமுள்ளவர்களை தான் சுயநலமாக செயல்படுபவர்களும் பாரட்டுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். சுயநலமாக இருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல என்பதை நாம் பல நேரங்களில் உணர்ந்தாலும், வாழ்க்கையில் உள்ள எல்லாவற்றையும் போலவே சுயநலத்தில் நன்மை மற்றும் தீமைகள் கலந்திருக்கிறன.

சுயநலம் என்பது பார்ப்பவரின் கண்களை பொருத்தும் இருக்கிறது. வாழ்க்கையில் எல்லோராலும் உறுதியுடன், கடினமாக உழைக்க முடியும். ஆனால் பிறர் மீது பாசம் மற்றும் இரக்கத்தை உண்மையாக வெளிக்காட்டும் குணம் நம்மில் மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கிறது. மிகவும் போற்ற்றுதலுக்குரிய இந்த குணாதிசயமானது, அதை வெளிப்படுத்துபவரின் நேர்மறை அணுகுமுறை, தன்னலமற்ற தன்மையை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கிறது.

யாரும் எப்போதுமே சுயநலமாக இருக்க விரும்பவில்லை என்றாலும், சில சமயங்களில் கொஞ்சம் சுயநலமாக இருப்பது அவசியப்படுகிறது என்பதே நமக்குள் எழும் பொதுவான ஒருமித்த கருத்து. எனவே தான் முழுமையாக இல்லாவிட்டாலும் ஏன் கொஞ்சம் சுயநலமாக இருக்க கூடாது என்ற கேள்வி நம்முள் எழுகிறது. சரியான அளவு சுயநலத்தை வரையறுப்பது மிகவும் கடினம். ஆனால் அதிகமாக சுயநலத்தை விரும்பாமல், குறைவான சுயநலத்துடன் இருந்து பிறருக்கு உதவுவது எப்படி? இதற்கு சில எளிய தீர்வுகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்.

அடிக்கடி பேசுவது அல்லது பார்ப்பது : எப்போதும் வேலை வேலை என்று ஓடி கொண்டிருந்தாலும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்கள் நலம் விரும்பிகள் என அனைவரையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் போனில் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது நேரில் சென்று சந்திப்பதன் மூலமோ மகிழ்ச்சி கொடுங்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களது வாழ்க்கை பயணம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று அக்கறையாக விசாரியுங்கள். நீண்ட நாளுக்கு பின் உங்கள் நண்பருக்கு உங்களுக்கு உதவி தேவைப்படுவதற்காக அழைக்கிறீர்கள் என்றால் முதல; சில நிமிடங்கள் அவரை பற்றி விசாரித்துவிட்டு உங்களுக்கு தேவைப்படும் உதவிகளை கேட்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறீர்களா? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்!

செவிசாய்க்க வேண்டும் : உங்களிடம் யாராவது ஒருவர் தனது சோகத்தையோ அல்லது வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களையோ பகிர்ந்து கொள்கிறார் என்றால் அவர் கூறும் விஷயங்களை கவனமாக காது கொடுத்து கேளுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் மெச்சூரிட்டியை வெளிப்படுத்தலாம். உங்கள் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருப்பதால் தான் ஒருவர் தனது தனிப்பட்ட விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து உள்ள நினைக்கிறார் என்பதை உணர்ந்து அவரது பாதிப்புகளை முழுமையாக கேளுங்கள். பிறரின் சோக கதையை கேட்பதற்கு நிறைய பொறுமை தேவை. அதை வளர்த்து கொள்ளுங்கள்.

பிறரின் உற்சாகத்திற்கு உதவலாம் : உங்களை சுற்றி இருக்கும் நபர்களின் குணாதிசயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். அவர் ஏதாவது நல்ல விஷயங்களை செய்கிறார் என்றால் தயங்காமல் உடனடியாக பாராட்டி விடுங்கள். இது அவரை உற்சாகப்படுத்தி மேலும் சுறுசுறுப்பாக்கும். இது உங்கள் தனிப்பட்ட உறவுகளை வலுப்படுத்தும்.

பிரதிபலன் பாராமல் : எந்த எதிர்பார்ப்புமின்றி பிறருக்கு உதவுங்கள். ஒருவர் எனக்கு இந்த உதவியை செய்து கொடுங்கள் என்று கேட்கும் போது கோபம் கொள்ளாமல் அவருக்கு புன்னகையுடன் உதவி செய்யுங்கள். கேட்பவர்களுக்கு உதவி செய்வதற்காகவே உங்கள் வாழ்க்கையில் சிலமணி நேரங்களை ஒதுக்குவது, குறைவான சுயநலத்துடன் நீங்கள் வாழ உதவும்.

நன்றி சொல்ல பழகுங்கள் : யார் உங்களுக்கு எவ்வளவு சிறிய உதவி செய்தாலும் கூட பதிலுக்கு நன்றி என்ற வார்த்தையை சொல்லுங்கள். அது குழந்தைகளாக இருந்தாலும் கூட. உதாரணத்திற்கு கீழே விழுந்து விட்ட பொருளை நமக்கு எடுத்து கொடுக்கும் உதவி செய்யும் குழந்தைக்கு கூட நன்றி சொல்லலாம். ஏனென்றால் நன்றியுணர்வு என்பது உணர்ச்சி மற்றும் அக்கறை உள்ளிட்டவற்றை மக்கள் உணர உதவும் முதன்மையான ஒன்றாகும்.

First published:

Tags: Selfie, Selfishness