• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கணவன் மனைவி இருவரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்...

கணவன் மனைவி இருவரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்...

உறவுமுறை

உறவுமுறை

தான் சொல்வதை யாருமே கவனிக்காமல் இருந்தாலும் தன் துணையாக உள்ளவர்கள் நாம் சொல்வதை கேட்பார்கள்

  • Share this:
    உறவுகளில் மிக சிக்கலானது என பலர் நினைப்பது கணவன் மனைவி உறவு தான். நமது வாழ்வின் அங்கமாக, சரிபாதியாக இருப்பவர்கள் நமது வாழ்க்கை துணை. வாழ்க்கையை மிக எளிமையாக புரிதலோடு கொண்டு சென்றால் எந்த உறவாக இருந்தாலும் சொர்க்கமான உணர்வை உங்களுக்கு தரும். கணவன் மனைவி உறவில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டுமென்று கூறுவார்கள்.

    ஆனால் நிதர்சனம் என்னவென்றால் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து போவதை விடவும், ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு அவரவரை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்தலே சிறப்பான வாழ்க்கை அனுபவத்தை தரும். இதற்கு கணவன் மனைவி இருவரும் சில முக்கியமான உறுதிமொழியை தங்களது உறவை தொடங்கும் முன் எடுக்க வேண்டியது அவசியம். அவை என்னென்ன உறுதிமொழிகள் என்பதை பற்றி இனி பார்ப்போம்.,

    கவனிப்பு :

    பலரின் உறவில் அதிக சிக்கல்கள் உண்டாவதற்கு முக்கிய காரணம் ஒருவரை ஒருவர் சரியான முறையில் கவனித்து கொள்ளாமல் இருப்பதே. எனவே உங்கள் இருவரின் பாதுகாப்பு, ஆரோக்கியம், வாழ்க்கை முறை போன்ற எல்லாவற்றிலும் ஒருவரை ஒருவர் கவனிப்போடு நடந்துக்கொள்ள வேண்டுமென உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

    உணர்வை மதியுங்கள் :

    தான் சொல்வதை யாருமே கவனிக்காமல் இருந்தாலும் தன் துணையாக உள்ளவர்கள் நாம் சொல்வதை கேட்பார்கள் என்கிற நம்பிக்கை எந்த உறவில் உள்ளதோ அந்த உறவு மகிழ்வான வாழ்க்கை அனுபவத்தை தரும். அதனால், உங்கள் துணை உங்களிடம் பகிர்வதை காதுகொடுத்து கேளுங்கள்.



    சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் :

    எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை பெரிதுப்படுத்தாமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற உறுதிமொழியை கணவன் மனைவி இருவரும் எடுக்க வேண்டும். அப்போதுதான் வாழ்வில் இருவருக்கும் நிம்மதி கிடைக்கும்.

    உற்சாகப்படுத்துங்கள் :

    கணவன் மனைவி இருவருக்குள்ளும் பல ஆயிரம் இரகசியங்கள் இருக்கலாம். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் இரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டீர்கள் என்பதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள்.

    ’எப்படி நடந்து கொள்வார்’ என்று கணிக்க முடியாத பாஸை எதிர்கொள்ள சில டிப்ஸ்..

    அன்பு செய்யுங்கள் :

    உங்கள் இருவரின் வாழ்வில் எப்படிப்பட்ட இக்கட்டான சூழல் வந்தாலும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி அன்பு செலுத்த வேண்டும். இப்படி செய்வதால் எந்தவொருக் கஷ்ட காலத்திலும் உங்கள் வாழ்க்கை மகிழ்வாகவும், அமைதியாகவும் செல்லும்.



    முடிவெடுத்தல் :

    கணவன் மனைவி இருவரும் எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செய்கிறீர்களோ அதே அளவு உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் முக்கிய முடிவுகளையும் ஒருவருக்கு ஒருவர் தெரியப்படுத்த வேண்டும். அத்துடன் உங்கள் துணையின் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்வேன் என உறுதிமொழி எடுங்கள்.

    சம உரிமை :

    ஆண் பெண் என்கிற பழங்காலத்து பாகுபாடுகளை கைவிடுங்கள். இருவரும் சமம் என்கிற எண்ணத்தை உங்களுக்குள் உறுதியாக சொல்லிக் கொள்ளுங்கள். எந்த சூழலிலும் நான் தான் பெரிது போன்ற மனப்பாங்கோடு நடத்துக் கொள்ள மாட்டேன் என உறுதிமொழி கொள்ளுங்கள்.



    மனம்விட்டு பேசுங்கள் :

    உங்கள் வாழ்வில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், எவ்வளவு பெரிய சண்டைகள் ஏற்பட்டாலும் அதை இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்து விடுங்கள். இல்லையேல் சிறிய பிரச்சனையாக இருந்தாலும் நாள் கணக்கில் ஆறாத வடுவாக மாறி உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

    அன்பு செய்யுங்கள் :

    அன்பு தான் இந்த மனித வாழ்வின் ஒரே ஒரு ஆயுதம். அதை உங்கள் இல்லற வாழ்விலும் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம். எனவே ஒருவரை ஒருவர் எல்லா நேரங்களிலும் அன்பு செய்து வாழ்வோம் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: