• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தாம்பத்திய வாழ்க்கையில் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இவ்வளவுதான்..! நீங்கள் இதை செய்கிறீர்களா..?

தாம்பத்திய வாழ்க்கையில் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இவ்வளவுதான்..! நீங்கள் இதை செய்கிறீர்களா..?

படுக்கையறையில் நெருக்கம் என்பதை உடல் ரீதியான விஷயமாக பார்க்காமல், உளப்பூர்வமான விஷயமாகப் பார்க்க வேண்டும். விளங்கும் வகையில் கூற வேண்டும் என்றால், படுக்கையறையில் நெருக்கம் காட்டுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் நீங்கள், மற்ற இடங்களில் முகத்தை கோபமாக காட்டுவது, எரிச்சல் அடைவது என இருந்தால் உளப்பூர்வமான செக்ஸை அனுபவிக்க முடியாது.

படுக்கையறையில் நெருக்கம் என்பதை உடல் ரீதியான விஷயமாக பார்க்காமல், உளப்பூர்வமான விஷயமாகப் பார்க்க வேண்டும். விளங்கும் வகையில் கூற வேண்டும் என்றால், படுக்கையறையில் நெருக்கம் காட்டுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் நீங்கள், மற்ற இடங்களில் முகத்தை கோபமாக காட்டுவது, எரிச்சல் அடைவது என இருந்தால் உளப்பூர்வமான செக்ஸை அனுபவிக்க முடியாது.

தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமெனில் துணையின் விருப்பு , வெறுப்புகளை புரிந்து நடக்க வேண்டும்.

  • Share this:
    இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு தாம்பத்திய வாழ்க்கையும் சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையான திருமண வாழ்க்கையாக இருக்க முடியும். அப்படி தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமெனில் துணையின் விருப்பு , வெறுப்புகளை புரிந்து நடக்க வேண்டும். இதை திருமணம் செய்துகொண்ட ஒவ்வொரு ஆண், பெண்ணிடமும் தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்கும் முன் பெரியவர்கள் சொல்வதுண்டு. அப்படி பெண்கள் பொதுவாக எதிர்பார்க்கும் சில தாம்பத்திய ஆசைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.


    விளையாட்டு : உடலுறவின் தொடக்கமே விளையாட்டுதான். எடுத்தவுடன் விஷயத்தில் இறங்குவது பல பெண்களுக்குப் பிடிக்காது. அவர்களை விரலால் வருடுவது, முத்தமிடுவது என சில சில்மிஷங்களை செய்ய வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஃபோர்பிளே என்று கூறுவார்கள். இதை செய்வதால் பெண்கள் எளிதில் செக்ஸ் மூடுக்கு செல்வார்கள்.


    முரட்டுத்தனமான தழுவல் : சில பெண்களுக்கு மென்மையாக தடவி கொடுப்பது பிடிக்காமல் போகலாம். ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படம் போல் முரட்டுத்தனமான செக்ஸ் ஆக்டிவிடீஸை விரும்பும் பெணாக இருந்தால் அந்த வழியில் செல்வது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை திருப்தி படுத்தலாம்.


    பராட்டு : சில பெண்கள் படுக்கையில் கணவர் பாராட்ட வேண்டும் என நினைப்பார்கள். தன் நிலையைக் குறித்து அதாவது உடல் பாகங்கள், அவரின் வெக்கம், கூச்சத்தைப் பற்றி சில வரிக் கவிதை சொல்லாவிட்டாலும் அழகை ரசித்து சில வார்த்தைகள் கூறலாம். அதில் பூரித்து போய் செக்ஸ் மூடில் ஆழமாக இறங்கிவிடுவார்கள்.


    அள்ளி அரவணைத்தல் : படுக்கையில் இருக்கும்போது அவர்களை உடலுறவுக்கு அழைப்பதைக் காட்டிலும் அவருக்கு செக்ஸ் மூட் இருப்பதை உறுதி படுத்திவிட்டு அப்படியே அவருக்கு தெரியாமல் தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்து மெல்ல வருடி ஆடைகளை அவிழ்ப்பதை பல பெண்கள் விரும்புகிறார்கள். இதை செய்து பாருங்கள் நிச்சயம் விருந்துதான்.


    ஓரல் செக்ஸ் : எந்த பெண்ணுக்குதான் ஓரல் செக்ஸ் பிடிக்காது. எடுத்தவுடன் நேரடியாக விஷயத்திற்கு செல்லாமல் முத்தத்தால் அவரை பூரிக்கச் செய்வது மேலும் அவரை செக்ஸ் மூடிற்கு தூண்டும். இதை பெண்கள் மிகவும் ரசிக்கின்றனர். விரும்புகின்றனர். எனவே முத்த மழையால் அவரை நனைக்கச் செய்துவிட்டு மற்ற விஷயங்களில் இறங்குங்கள்.


     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: