Home /News /lifestyle /

International Kissing Day : முத்தத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...

International Kissing Day : முத்தத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...

முத்தம்

முத்தம்

முத்தம் என்பது காமத்தில் சேர்ந்தது என்று பெரும்பாலானவர்களின் பார்வையாக உள்ளது. ஆனால் அது முற்றிலும் தவறு. முத்தம் என்பது காதலர்களுக்கு இடையே காதலை வெளிப்படுத்துவதாக மட்டும் அல்லாமல் அன்பின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஆறாம் தேதி உலக முத்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளில் 2000 ஆண்டின் முற்பகுதியில் இருந்தே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்தில் காதலர் தினம் நெருங்கிவரும் காலத்தின்போது முத்த தினம் கொண்டாடப்பட்டாலும் அது காதலுக்காக கொண்டாடப்படும் தினமாக தான் பார்க்கப்படுகிறது.

ஆனால் ஜூலை 6-ஆம் தேதி கொண்டாடப்படும் முத்தம் தினம் அன்பின் வெளிப்பாடு முத்தத்தின் மூலம் வெளிப்படுத்தும் நாளாக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்பின் வெளிப்பாடு:

முத்தம் என்பது காமத்தில் சேர்ந்தது என்று பெரும்பாலானவர்களின் பார்வையாக உள்ளது. ஆனால் அது முற்றிலும் தவறு. முத்தம் என்பது காதலர்களுக்கு இடையே காதலை வெளிப்படுத்துவதாக மட்டும் அல்லாமல் அன்பின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. தாய் தன்னுடைய சேய்க்கு கொடுக்கும் முத்தம், தந்தை தன் மகனுக்கு கொடுக்கும் முத்தம், அண்ணன் தங்கை முத்தம், உறவினர்களின் முத்தம், நண்பனின் முத்தம் எல்லாம் அன்பின் வெளிப்பாடு தான். இந்தியாவில் ஒருவரை புதிதாக சந்திக்கும் போதோ அல்லது ஒருவரை பாராட்டும் பொழுது கைகுலுக்குவது வழக்கம்.

இதேபோன்று நாடு வெளிநாடுகளிலும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது கூட கன்னத்தில் முத்தமிட்டுக் கொள்வதை காண முடியும். ஒருவர் மிகுந்த அன்பினால் ஒருவரை பாராட்டும் பொழுது தனது அன்பை வெளிப்படுத்தும் உணர்ச்சிதான் முத்தம்.

முத்தம் கொடுப்பதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு உண்டாவதாக அறிஞர்கள் கூறி வருகின்றனர். தனது துணையை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், இருவரும் ஒற்றுமையாக அன்போடு நீண்ட காலம் வாழ்வதற்கு முத்தம் ஒரு பெரிய விஷயமாக உள்ளது.



உளவியல் ரீதியான நன்மைகள் :-

தினம்தோறும் தனது காதலன் காதலியையோ அல்லது கணவன் மனைவியையோ முத்தமிட்டுக் கொண்டால் அன்றைய தினத்தில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், சோர்வில்லாமலும் இருப்பதாக கூறுகின்றனர்.

திருமணமாகி கணவன் மனைவி தொடக்க காலத்தில் ஒன்றாக தாம்பத்திய உறவில் இருந்தாலும், நாள் போக்கில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் உண்டாவது வழக்கம். திருமணமாகி 5 முதல் 7 ஆண்டு காலம் கணவன் மனைவிக்குள் அதிகம் மோதல் உண்டாகும் காலம் என ஆய்வு கூறிவருகிறது.

International Kissing Day : லிப்லாக் முத்தத்தில் இத்தனை நன்மைகளா..? தெரிந்துகொள்ளுங்கள்..

கணவன் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது அலுவலக பணிகளால் உண்டான மன அழுத்தத்தை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் மனைவியுடன் மகிழ்ச்சி பொங்க வாழ்க்கையை நடத்த முத்தம் ஆரம்ப புள்ளியாக உள்ளது. கணவன் தனது மனைவி செய்யும் சிறு சிறு வேலைகளை பாராட்டும் விதமாக கண்ணத்தில் முத்தமிடுவதன் மூலம் தனது பாராட்டை தெரிவிக்கலாம். சிறு சிறு விஷயங்கள் கணவன் மனைவி உறவை பெரிதும் வலுப்படுத்தும்.

உளவியல் ரீதியாக பல்வேறு நன்மைகள் முத்தத்தில் இருந்தாலும் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் உள்ளது.



மருத்துவ ரீதியான தகவல்கள் :-

முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMATOLOGY என பெயர். விரலின் உணர்ச்சியை விட உதடுகளின் உணர்ச்சி 200 மடங்கு வரை அதிகம் எனக் கூறப்படுகிறது.

ஒருவரை ஒருவர் முத்தம் கொடுக்கும் பொழுது உதட்டருகே உள்ள இரண்டு தசைகளுடன் முகத்தில் இருக்கும் 12 தசைகளும் செயல்படுகிறது. ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக முத்தம் கொடுக்கும் பொழுது முகத்தில் உள்ள 34 தசைகளும் செயல்படுகிறது.

நல்ல வாழ்க்கை துணைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..? இதை படியுங்கள்...

ஒரு முத்தத்தின் மூலம் பனிரெண்டு கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கும் அதிகமான முத்தத்தில் இருபதிற்கும் மேற்பட்ட கலோரிகள் எரிக்கப்படுகிறது. மொத்தத்தில் இருவரது உமிழ்நீரும் 8 முதல் 10 மில்லி லிட்டர் வரை பரிமாறிக் கொள்ளப்படுகிறது.



முத்தம் கொடுக்கும் பொழுது உணர்ச்சியை தூண்டும் அட்ரினல் ஹார்மோன்கள் தூண்டப்படுகிறது. அதனோடு மகிழ்ச்சியை வெளிபடுத்தும் செரோட்டோனின் ஹார்மோனும், மன அமைதியைத் தரும் ஆக்ஸிடோசின் ஹார்மோனும் தூண்டப்படுகிறது.

முத்தம் கொடுக்கும் பொழுது கோபம் குறைந்து, மகிழ்ச்சி பொங்கி மன அமைதி உருவாகும் எனவும், கொழுப்பு உடல் பருமன் உருவாக காரணமாக ஹார்மோனான கார்டிசால் ஹார்மோன் சுரப்பு குறையும். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் முத்தத்திற்காக மட்டும் 300 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுவதாக ஆய்வு கூறி வருகிறது

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: International Kissing Day

அடுத்த செய்தி