Home /News /lifestyle /

ஆண், பெண் உறவில் நிலவும் அதிகார துஷ்பிரயோகம் : இதை தவிர்ப்பது எப்படி..?

ஆண், பெண் உறவில் நிலவும் அதிகார துஷ்பிரயோகம் : இதை தவிர்ப்பது எப்படி..?

உறவுமுறை

உறவுமுறை

குடும்ப கட்டமைப்பில் எந்தவித சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று உயர் கல்வி அல்லது வேலைவாய்ப்பை பெண்கள் தான் விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆண், பெண் இடையேயான உறவு என்பது எப்போதுமே சம வாய்ப்பற்ற அதிகாரங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியத் திருமண கலாசாரங்களில் இதை தெளிவாக பார்க்க முடியும். ஜாதி, பாலினம், சமூக அந்தஸ்து, கல்வி, உடல் வலிமை மற்றும் பொருளாதார பலம் என பல வகைகளில் உறவுகளிடையே அதிகாரம் செலுத்தப்படுகிறது. இந்திய சமூகத்தில் பெரும்பாலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கிறார். பொருளாதார சார்பு, சமூக அந்தஸ்து என அனைத்துமே ஆண்களை மட்டுமே சார்ந்து இருக்கிறது.

இதன் காரணமாக ஆண், பெண் உறவில் சமநிலையற்ற தன்மை நிலவுகிறது. பெரும்பாலான சமயங்களில் தங்களுக்கு ஒன்று அதிகாரம் இருப்பதாக பெண்கள் உணர முடிவதில்லை. குறைவான கல்வி பயின்றிருப்பதாகக் கூறி பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர் அல்லது பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பெண்கள் அதிகாரத்தின் உயர் நிலைக்கு வர முடியாமல் இருப்பதற்கு பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும் ஒரு காரணமாக இருக்கின்றன.

பொறாமை படும் கணவர்

ஒரு பெண் சக்தி வாய்ந்தவராக உருவெடுப்பதை அவரது கணவரே கூட விரும்புவதில்லை. தன்னை விட மனைவி அதிகம் சம்பாதித்தால், தன்னை அவர் மதிக்காமல் அதிகாரம் செய்யத் தொடங்குவார் என்று கணவர் கருதுகிறார். சமூகத்தில் தனக்கான அந்தஸ்து குறைந்துவிடும் என்று அவர் எண்ணுகிறார். இதன் காரணமாக மனைவிக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைப்பதை கணவர் விரும்புவதில்லை. தனது அதிகார பலம் குறைந்துவிடும் என கணவர் அஞ்சுகிறார். இதன் விளைவாக சில ஆண்கள் வன்முறையில் கூட ஈடுபடுகின்றனர்.



விட்டு கொடுக்கும் பெண்களும், விடா முயற்சியில் உள்ள பெண்களும்

குடும்ப கட்டமைப்பில் எந்தவித சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று உயர் கல்வி அல்லது வேலைவாய்ப்பை பெண்கள் தான் விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொதுவாக, குறைந்த பலம் கொண்டவர் என்ற அடிப்படையில் பெண்களே அதிக சமாதானம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.

நீங்கள் ஒருவர் மீது கண்மூடித்தனமான அன்பு கொண்டுள்ளீர்கள் என்பதற்கான 5 அறிகுறிகள்

ஆனால், இன்றைக்கு சூழ்நிலை கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. பெண்களும் வேலைக்கு சென்று, தங்கள் கனவை நனவாக்கி வருகின்றனர். பெண்களில் பலர் துணிந்து செயல்பட தொடங்கியுள்ளனர். ஆனால், ஆண்களில் பலர் இன்னும் விட்டுக் கொடுக்க முன்வரவில்லை.



அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்

ஆண், பெண் இருவருமே சமமான பலம் கொண்டவர்களே. யாரும், யாரை விடவும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. ஆகவே, குடும்பத்தில், ஆண், பெண் இருவருக்குமே சரி சமமான அதிகாரம் இருக்க வேண்டும். எந்தவொரு விஷயம் என்றாலும் இருவரும் சேர்ந்து விவாதித்து முடிவு செய்ய வேண்டும். ஒருவருடைய கருத்துக்கு, மற்றொருவர் மதிப்பளிக்க வேண்டும். குடும்பத்தின் பொதுவான இலக்குகளை நிர்ணயம் செய்து, அதை நோக்கி இருவருமே பயணிக்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Love, Relationship Tips

அடுத்த செய்தி