முத்தம் கொடுப்பதன் மூலம் நோய்த்தொற்று பரவுமா..?

கொனொரியா என்னும் இந்த பால்வினைக் கிருமியானது வெட்டை நோயை உருவாக்கக் கூடியது.

news18
Updated: July 18, 2019, 12:57 PM IST
முத்தம் கொடுப்பதன் மூலம் நோய்த்தொற்று பரவுமா..?
முத்தம்
news18
Updated: July 18, 2019, 12:57 PM IST
சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் முத்தம் கொடுப்பதன் மூலம் கொனொரியா ( gonorrhoea) என்னும் தொற்றுக் கிருமி மூலம் வெட்டை நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கொனொரியா என்னும் இந்த பால்வினைக் கிருமியானது வெட்டை நோயை உருவாக்கக் கூடியது. வெட்டை நோய் என்பது உடலுறவில் ஈடுபடும்போது இனப்பெருக்க உறுப்பு வழியாக பரவக் கூடிய கிருமியால் வளர்ந்து நோயாகும். இந்த நோய் தற்போது முத்தம் கொடுப்பதாலும் பரவும் என்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது தி லான்செட் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.

மோனாஷ் பல்கலைக் கழகப் பேராசிரியர் கிட் ஃபேர்லி, “பாலியல் சுகாதார அமைப்புகள் இதை மிகவும் கவனத்தில் கொள்வது அவசியம். அவர்கள் இந்த ஆய்வை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்காக 3600 ஆண்களை ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த கிருமி எவ்வாறு பரவுகிறது?, எவ்வாறு இதை கட்டுப்படுத்துவது? என்பன போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வில் பலரை 12 மாதங்கள் உடலுறவு அல்லாமல் வெறும் முத்தம் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. சிலரை முத்தம் கொடுக்காமல் உடலுறவில் ஈடுபடச் செய்துள்ளது.

அவர்களை ஒவ்வொரு வாரமாக, மாதமாகக் கண்காணித்ததில் முத்தம் கொடுக்காமல் உடலுறவில் ஈடுபட்டவர்களைக் காட்டிலும் , முத்தம் மட்டுமே பரிமாறிக் கொண்டவர்களுக்கு அதிக அளவிலான நோய்த்தொற்று பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Loading...

முத்தமிடுவதால் 5 ஆண்டுகள் ஆயுள் கூடுமாம்?

இந்த வெட்டை நோய்க்கு இன்று வரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், குணப்படுத்த முடியாத நோயாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு தீர்வு கண்டுபிடிக்காத பட்சத்தில் ஒரு ஆலோசனையை மட்டும் அளித்துள்ளது.அதாவது முத்தம் பகிர்வதற்கு முன் வாயை நன்கு மவுத் வாஷ் கொண்டு சுத்தம் செய்த பின் முத்தம் கொடுங்கள். நன்கு பற்களை துலக்குங்கள் என்று கூறப்படுள்ளது.. முத்தத்திற்கு மட்டுமல்ல உடலுறவில் ஈடுபடும்போதும் பாதுகாப்பான உடலுறவு பழக்கங்கள், உடல் சுகாதாரம் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :

முத்தமிடுவதால் 5 ஆண்டுகள் ஆயுள் கூடுமாம்?
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...