பிள்ளைகளின் நடத்தையை கேலி செய்கிறீர்களா? பெற்றோர்களே இதைப் படியுங்கள்...

”தொடர்ந்து அனுபவிக்கும் மன உளைச்சலை அவர்கள் யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்”

பிள்ளைகளின் நடத்தையை கேலி செய்கிறீர்களா? பெற்றோர்களே இதைப் படியுங்கள்...
பெற்றோர்கள் பிள்ளைகளின் நடத்தையை கேலி செய்தால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்
  • News18
  • Last Updated: July 16, 2019, 6:08 PM IST
  • Share this:
பதின் பருவக் குழந்தைகளின் நடத்தையை கேலி செய்வது பெற்றோர்களின் பொதுவான செயல். அதை விளையாட்டாக போகிறபோக்கில் சுட்டிக்காட்டி சிரிப்பார்கள்.

இப்படியாக நடத்தையை கேலி செய்வது பிள்ளைகளுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு. அதை அவர்கள் கொடுமைபடுத்தும் செயலாகக் கருதுவதாகக் கூறுகின்றனர். இந்த செயலை சக நண்பர்கள் செய்தாலும் அதனால் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகக் கூறியுள்ளனர்.

”தொடர்ந்து அவர்களின் நடத்தையை கிண்டல் கேலி செய்துகொண்டே இருந்தால் அவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றனர். இதனால் இயலாமை , தன்னம்பிக்கையற்ற நிலையை அடைகின்றனர். குறிப்பாக இச்செயலைப் பெற்றோர்கள் செய்யும்போது இன்னும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனால் பெற்றோர் உறவையும் ஒரு கட்டத்தில் வெறுக்கின்றனர்” என்கிறார் மனநல ஆலோசகர் சமிர் பாரிக். இவர்டெல்லி ஃபார்டிஸ் மருத்துவமனையில் ஆலோசகராக இருக்கிறார்.
இப்படி தொடர்ந்து அனுபவிக்கும் மன உளைச்சலை அவர்கள் யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். அந்த கொடுமையை தொடர்ந்து அனுபவித்து வருவது அவர்களின் ஒட்டுமொத்த குணம், நடத்தையை மாற்றிவிடும். வேறுவிதமான வளர்ச்சியை அடைவார்கள் ” என்கிறார் சமிர்.

பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன ?பெற்றோர்கள், சக நண்பர்களின் கிண்டல் கேலிகளால் தனிமையை விரும்பும் நபராக மாறலாம். இயலாமை, தன்னம்பிக்கை அற்ற மனிதராக வளரலாம் என்று இப்படி உணர்ச்சி அதிகம் கொண்டவர்களாகவும், உணர்ச்சி அற்றவர்களாகவும் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஆய்வு. இதனால் அவர்களின் வாழ்கையே சிதைந்து போகும் என்றும் கூறுகிறது.வெளியே சக நண்பர்கள் கிண்டல், கேலி செய்வது சகஜம் என்றாலும் வீட்டில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உற்சாகம் ஊட்டும் விதமாக ஊக்குவிக்க வேண்டும். ஒருவேளை நண்பர்களால் அதிகம் கிண்டல் கேலிகளுக்கு உள்ளாக நேர்ந்தாலும் அதற்கு பெற்றோர்களின் உதவியைதான் பிள்ளைகள் நாடுவார்கள். ஆனால் பெற்றோர்களே அந்த செயலை செய்தால் அவர்கள் உதவியற்ற நபராக இருப்பார்கள். எனவே பெற்றோர்கள்தான் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறது ஆய்வு.

இதையும் படிக்க :

பள்ளி மாணவர்களின் புத்தகப் பை முதுகு தண்டு வடத்தை பாதிக்குமா? அதிர்ச்சியடைய வைக்கும் ஆய்வு முடிவுகள்

பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன ?

சிறுவர்கள் டிவி, செல்ஃபோன் பார்ப்பதைவிட ஓடி ஆடி விளையாடுவதுதான் ஆரோக்கியம் : உலக சுகாதார அமைச்சகம் தகவல்

அம்மாக்கள் கவனத்திற்கு : மகள் பூப்படைதலைப் பற்றி முன்கூட்டியே கூறி பக்குவப்படுத்துங்கள்..!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்