ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முதிர்ச்சியடைந்த காதலுக்கும் சிறுபிள்ளைத்தனமான காதலுக்கும் இதுதான் வேறுபாடு!

முதிர்ச்சியடைந்த காதலுக்கும் சிறுபிள்ளைத்தனமான காதலுக்கும் இதுதான் வேறுபாடு!

காதல்

காதல்

காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு இருவரும் ஒருவராவது முதிர்ந்த மனநிலையோடு இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிகரமாக இருந்து வாழ்க்கையில் வளர வேண்டும்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அனைவருக்கும் காதலிக்க ஆசைதான். ஆனால் அந்த காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக உள்ளதா அல்லது வேதனை தருவதாக உள்ளதா என்பதை நிர்ணயிக்கும் பல விஷயங்கள் அந்தந்த காதலர்களை பொருத்து தான் உள்ளது. இன்றைய காலத்தில் உலா வரும் காதல் ஜோடிகள் பலரும் சினிமாவை பார்த்துவிட்டு, அதில் வருவது போல காதலிக்க வேண்டும் என்றும் அதில் காட்டுவது போல பல்வேறு கற்பனைகளையும் மனதில் வளர்த்துக் கொண்டு அதை அப்படியே வாழ்க்கையில் செயல்படுத்த முயற்சி செய்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் தான் காதலில் மனக்கசப்பு அதிகமாக காரணமாக இருக்கிறது.

காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு இருவரும் ஒருவராவது முதிர்ந்த மனநிலையோடு இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிகரமாக இருந்து வாழ்க்கையில் வளர வேண்டும். அதே நேரத்தில் இதற்கு எதிர் மாறாக உண்மை வாழ்க்கைக்கு ஒத்து வராத கற்பனைகளோடுமம் சாத்தியமே ஏற்ற எதிர்பார்ப்புகளோடும், மனதளவில் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே வாழும் சில காதல் ஜோடிகளும் உண்டு. இவர்களின் காதல் வாழ்க்கை பெரும்பாலும் சண்டை சச்சரவுகளும் வேதனைகளும் நிறைந்ததாகவே இருக்கும். அந்த வகையில் உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக மாற்றவும் முதிர்ந்த மற்றும் முதிர்ச்சியற்ற காதல் ஜோடிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் பார்க்கலாம்.

பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வார்கள்:

முதிர்ச்சியற்ற காதல்: மனதளவிலும் காதலிலும் முதிர்ச்சியற்ற ஜோடிகள் பெரும்பாலும் தங்களுக்கிடையே பலவித வெளியே சொல்லாத சந்தேகங்களுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். முக்கியமாக அவர்களுக்கிடையே உள்ள காதலை பற்றியே அவர்களுக்கு பல சந்தேகங்கள் உண்டு. அவன்/அவள் என்னை உண்மையாகவே காதலிக்கிறானா? இது சரி வருமா? சரியான பாதையில் தான் நாம் செல்கிறோமா? என்பது போன்ற கேள்விகள் தினந்தோறும் மனதை போட்டு குழப்பிக் கொண்டிருக்கும்.

மன அழுத்தம் அதிகமானால் தொப்பையும் பெரிதாகுமா..? அதிர்ச்சியளிக்கும் தகவல்..!

முதிர்ச்சியடைந்த காதல்: இதுவே முதிர்ச்சியடைந்த காதல் ஜோடிகள் தங்களுக்குள் உள்ள காதலை பற்றியும் காதலைப் பற்றி எப்போதும் மிக தெளிவாக இருப்பார்கள். எவ்வளவு பெரிய பிரச்னைஏற்பட்டாலும் “எங்க போனாலும் கடையில இங்க தான் வந்தாகணும்” என்ற தெளிவும், “என்னை தவிர உன்கூட யாரால வாழ்க்கை முழுசும் குப்பை கொட்ட முடியும்” என்ற புரிதலும் இருக்கும். ஒருவேளை தங்களைப் பற்றியோ அல்லது தங்கள் துணையைப் பற்றியும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே அதை பற்றி கேள்விகளை நேரடியாக அவரிடமே கேட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்வார்கள். இதனால் எப்போதும் அவர்களுக்கு இடையே உள்ள காதல் அழகானதாகவும், தனித்துவமானதாகவும், வலுவானதாகவும் இருக்கிறது.

அதிக எதிர்பார்ப்பு:

முதிர்ச்சியற்ற காதல்: இவர்கள் எப்போதுமே இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைவதில்லை. சமூக வலைத்தளங்கள் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் சினிமாக்களை பார்த்து , சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவதற்காக செய்யப்படும் தேவையற்ற இன்ப அதிர்ச்சிகள், பரிசு பொருட்கள் மற்றும் பல சிறுபிள்ளைத்தனமான காரியங்களை தங்கள் ஜோடியும் தனக்காக செய்து தன்னை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது பிரச்சனைகள் உருவாகத் துவங்குகிறது.

முதிர்ச்சியடைந்த காதல்: இந்த ஜோடிகளுக்கு இதைப்பற்றிய எந்த கவலையும் இல்லை. அவர்கள் மனதுக்கு தாங்கள் யார் என்பதும் தங்கள் காதலன்/காதலி யார் என்பதும் நன்றாக தெரியும். சுற்றியுள்ளோர் நம் காதலைப் பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற வீண் செயல்களில் ஈடுபட்டும் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்து இருவரும் வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டுவதற்கு பரஸ்பரம் உதவி கொள்வார்கள்.

திருமணம் வேண்டாம்... லிவிங் டுகெதர் போதும் : 2K கிட்ஸுகளிடம் மாறி வரும் மனநிலை

தங்களின் தனித்துவத்தை இழப்பது:

முதிர்ச்சியற்ற காதல்: இன்றைய காலத்தில் நடக்கும் பெருங்கூத்தே இதுதான். அவனுக்கு இது பிடிக்கும் எனவே நான் இதை செய்யப் போகிறேன். அவளுக்கு இது பிடிக்காது எனவே நான் இதை செய்ய மாட்டேன் என்று மற்றவருக்காக தன்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கின்றனர். முதலில் இது அழகாகவும் பெருமைக்குரியதாகவும் தோன்றினாலும் நாளடைவில் கண்டிப்பாக பிரச்சனைகள் தான் உண்டாகும். தங்கள் தனித்துவத்தை இழந்து விட்டு உனக்காக இவ்வளவு செய்தேனே எனக்கு நீ ஒண்ணுமே செய்யவில்லையே என்று கதறி வாழ்வின் பிற்காலத்தில் வேதனைப்படுகின்றனர்.

முதிர்ச்சியடைந்த காதல்: இவர்கள் இந்த விஷயத்தில் கில்லாடிகள் தான்.. அவர்கள் எதற்காகவும் ஒருவருக்காக மற்றொருவர் தங்களின் தனித்துவத்தை மாற்றிக் கொள்வதில்லை. அவர்களுக்கிடையே ஏற்படும் கருத்து பரிமாற்றங்களின் மூலம் வேண்டுமானால் தங்களின் பார்வை, தங்களின் கருத்து, மற்றும் சிந்தனைகள் ஆகியவற்றை மாற்றி கொள்ள முயலுவார்களே தவிர ஒருவரது எண்ணத்தை மற்றொருவர் மீது திணிக்க மாட்டார்கள். நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்பதுதான் அவர்கள் காதல் ரகசியமாக இருக்கும்.

ஒருவர் வளர மற்றொருவர் ஊக்கப்படுத்துதல்:

முதிர்ச்சியற்ற காதல்: பெரும்பாலும் தங்கள் துளையிடமிருந்து தாங்கள் எதிர்பார்த்த காதலோ அல்லது வேறு ஏதேனும் விஷயமும் நிறைவேறவில்லை எனில் கொஞ்சம் கொஞ்சமாக காதலில் தங்கள் ஆர்வத்தை இழக்கின்றனர். முக்கியமாக வாழ்க்கையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடைபெறும் போது ஒருவர் ஒருவர் பக்க பலமாகவும் ஒன்றுதலாகவும் இருப்பதற்கு பதிலாக நீ செய்த தவறினால் தான் இப்படி நடந்தது என்று அவர்களுக்குள்ளே குற்றம் சாட்டிக் கொண்டு பிரிந்து விடுகின்றனர்.

முதிர்ச்சியடைந்த காதல்: இவர்கள் எப்பொழுதும் ஒருவரையும் மற்றொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். முக்கியமாக தங்கள் துணை துவண்டு போய் ஆறுதல் இல்லாமல் நிற்கும் நேரங்களில் எல்லாம், “என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்! உனக்காக நான் எப்போதும் இருப்பேன்” என்று அவர்கள் கொடுக்கும் தைரியமே இன்னொருவருக்கு மிகப்பெரும் ஒன்றுதலாக இருக்கும். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் தன்னோடு நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று எண்ணம் அவர்களை எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.

இந்த தகுதிகள் இருக்கும் ஆண்கள் தான் சிறந்த தந்தையாக இருக்கிறார்கள்!

சார்ந்து வாழ்தல்:

முதிர்ச்சியற்ற காதல்: இவர்கள் எப்பொழுதும் தங்களைப் பற்றிய ஒரு தெளிவில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். முக்கியமாக எப்பொழுதுமே ஒருவரை சார்ந்து மற்றொருவர் இருப்பது தான் வாழ்க்கையென எண்ணிக் கொண்டிருப்பார்கள். எந்த செயல் செய்தாலும் மற்றவரை கேட்டு அவர்கள் அனுமதி அளித்தால்தான் அதை செய்வார்கள். இதை பெருமையாகவும் நினைத்துக் கொள்வார்கள்.

முதிர்ச்சியடைந்த காதல்: இவர்கள் அதற்கு நேர்மாறாக இருப்பார்கள். எப்பொழுதும் ஒருவரை சார்ந்து மற்றொருவர் இருக்க மாட்டார்கள். இருவரும் காதல் ஜோடிகள், வாழ்க்கைத்துணை என்றாலும் இருவருக்கும் தனித்தன்மை என்று ஒன்று இருக்கும். அது எப்படி வெளியே கொண்டு வந்து தனக்குத் தேவையான விஷயங்களை எப்படி செய்வது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இன்னொருவரை சார்ந்து வாழ மாட்டார்கள். எப்பொழுதும் சுதந்திரமாக செயல்படுவதையே விரும்புவார்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Love, Relationship Tips