Sexual wellness : திருமணத்தை மீறிய உறவு... கணவன் - மனைவிக்கு பல்லவியின் அட்வைஸ்

Sexual wellness : திருமணத்தை மீறிய உறவு... கணவன் - மனைவிக்கு பல்லவியின் அட்வைஸ்

மாதிரி படம்

உங்கள் மனைவியிடம் வெளிப்படையான , நேர்மையான உரையாடலை தொடங்குவதே சரியான வழி.

  • Share this:
கேள்வி : செக்ஸில் அதிக ஆர்வம் கொண்ட ஒரு பெண்ணை எட்டு வருடங்களாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறேன். கடந்த ஆண்டு இருவரும் open marriage ( கணவருடன் மட்டுமல்லாத பிடித்த நபருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் ) முறையில் வாழலாம் என முடிவெடுத்தோம். அப்படியான உறவில் சில நாட்களாக என் மனைவி ஒருவருடன் அதிகமாக நேரம் செலவிடுவதை கவனிக்கிறேன். அவனை என் மனைவிக்கு பிடித்திருக்கிறது. செக்ஸ் வைத்துக்கொள்ளவும் விருப்பப்படுகிறாள்.

ஆனால் அவனை சந்திக்கவும், செக்ஸ் வைத்துக்கொள்ளவும், தயங்குகிறாள். அந்த தயக்கத்திற்கு நான் தான் காரணமோ என நினைக்கிறேன். நான் இதனால் அவளை விட்டு விலகிவிடுவேன் என நினைக்கிறாளோ எனத் தோன்றுகிறது. அவள் எங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழவில்லையோ என குற்ற உணர்ச்சியாக உள்ளது. நானும் அவள் அந்த வாழ்க்கையை தொடர வேண்டும் என நினைக்கிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்..?



பதில் : முதலில் எனக்கு நீங்கள் இருவரும் மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கையைத்தான் வாழ்ந்தீர்களா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் செக்ஸில் இரண்டு வகையான நபர்கள் உண்டு. ஒன்று Spontaneous desire , இரண்டாவது Responsive desire , இதில் Spontaneous desire ஆக இருப்பவர்கள் செக்ஸில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் செக்ஸ் மூட் வரும். ஒரு நாளைக்கு 2, 3 தடவைக்கு மேல் கூட அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள விருப்பப்படுவார்கள்.

ஆனால் Responsive desire ஆக இருப்போர் யாராவது அவர்களை செக்ஸுக்காக தூண்டினால் மட்டுமே இயங்குவார்கள். இல்லையெனில் அவர்களுக்கு செக்ஸ் ஆசையே இருக்காது. அப்படி உங்கள் விஷயத்தில் உங்கள் மனைவி Spontaneous desire ஆக இருப்பார் எனவும் நீங்கள் Responsive desire என்றும் நினைக்கிறேன்.

உங்கள் மனைவி திருமணத்திற்கு அப்பாற்பட்டு மற்றொரு நபருடன் உடலுறவு வைத்துக்கொள்ள தயங்குவது சரியான ஒன்றுதான். ஏனெனில் நம் கலாச்சரப்படி ஒருவருடன் உடலுறவு வைத்துக்கொள்கிறோம் எனில் அந்த உறவில் எமோஷ்னலாகவும் பிணைந்திருப்போம். எனவே இதுபோன்ற open marriage கலாச்சாரத்தை பின்பற்றுவது சற்று சிக்கலான விஷயம்தான். அதேபோல் எமோஷ்னலாக ஒருவருடன் பிணைப்பு இல்லாதபோது அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள தயங்குவது சாதாரண விஷயம்தான்.



நீங்கள் இதைப்பற்றி மனைவியுடன் பேசுவதற்கு முன் உங்களுக்கான லிமிட்ஸ் என்ன , உங்களுக்கான முக்கியத்துவம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுக்குள் நீங்களே இந்த திருமணத்தை செய்துகொண்டதற்கான அடிப்படை நோக்கம் என்ன என்பதை கேட்டுக்கொள்ளுங்கள். அந்த நம்பிக்கை உடைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உடலளவில் திருப்தி இல்லாமல் அதேசமயம் இதை நினைத்து உங்களை சங்கடப்பட வைக்காமல் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறார் என்பதை உணருங்கள். நீங்கள் இந்த திருமண வாழ்க்கையில் எப்போதாவது பாதுகாப்பின்மையை உணர்ந்திருக்கிறீர்களா..? நீங்கள் தகுதியற்றவர் என நினைத்திருக்கிறீர்களா..?

இப்படி உங்களுடைய எமோஷன்ஸ், பொறாமை குணம், மனத் தடைகள் என்ன என்பதை தெளிவாக உணர்ந்து உங்களுக்குள் ஒரு தெளிவைக் கொண்டு வாருங்கள். அவரிடம் பேசும்போதும் தெளிவான உரையாடலுக்கு இவை வழி வகுக்கும். நீங்கள் முதலில் உங்களுக்கு நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். அது மிக முக்கியம். இல்லையெனில் உங்கள் பேச்சு மனைவியை கோபப்படுத்தலாம். அது உங்கள் திருமண வாழ்க்கையை மேலும் கசப்பானதாக மாற்றிவிடும்.

முன்னாள் காதலருடன் இணையலாமா வேண்டாமா என்று சிந்திப்பதைவிட, உங்கள் நேரத்தை உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்..

அடுத்த கட்டமாக உங்கள் மனைவியிடம் வெளிப்படையான , நேர்மையான உரையாடலை தொடங்குங்கள். உங்களுடைய நிலைபாடு என்ன, உங்களுடைய எல்லைகள் என்ன என்பதை தெளிவாக பேசிவிடுங்கள். பின் இந்த திருமணம் குறித்த உங்கள் பார்வை என்ன என்பன போன்ற விஷயங்களை பேசுங்கள்.

அதன் பிறகு உங்கள் மனைவி பேசும்போது குறுக்கிடாமல் அவர் பேசுவதை கவனியுங்கள். அவரை எந்தவித தடையுமின்றி வெளிப்படையாக பேச அனுமதியுங்கள். இந்த உரையாடல் உங்களுடைய தேவை மற்றும் எல்லைகளை தடையில்லாமல் நகர்த்தவும்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதேபோல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உணர்ச்சி ரீதியாக மிகவும் உறுதியான பிடிப்பைக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் எதிர்காலத்தில் இப்படி பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என சந்தேகிக்கிறேன்.
Published by:Sivaranjani E
First published: