• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • துணை உங்களை ஏமாற்றுகிறார், பொய் சொல்கிறார் எனில் அவரது செல்ஃபோன் அழைப்புகளை ஆடியோ டிராக்கிங் செய்வது சரியா..?

துணை உங்களை ஏமாற்றுகிறார், பொய் சொல்கிறார் எனில் அவரது செல்ஃபோன் அழைப்புகளை ஆடியோ டிராக்கிங் செய்வது சரியா..?

கள்ளதொடர்பு விவகாரம் ஏதோ பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமண பந்தங்களில் மட்டும் நடப்பதில்லை. உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்விலும் இது நடப்பது தான் கொடுமையிலும் கொடுமை. இன்றைய காலகட்டத்தில் இதனால் பல திருமண பந்தங்கள் கண்முன் வீழ்ச்சியடைவதை பார்க்கிறோம்.

கள்ளதொடர்பு விவகாரம் ஏதோ பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமண பந்தங்களில் மட்டும் நடப்பதில்லை. உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்விலும் இது நடப்பது தான் கொடுமையிலும் கொடுமை. இன்றைய காலகட்டத்தில் இதனால் பல திருமண பந்தங்கள் கண்முன் வீழ்ச்சியடைவதை பார்க்கிறோம்.

பொதுவாக ஒருவரின் செயல்பாடுகளை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுப்பதோ, ஆடியோவை ரெக்கார்ட் செய்வதோ சட்டப்படி குற்றமாகும்.

  • Share this:
கேள்வி : துணை உங்களை ஏமாற்றுவது போல் தெரிந்தாலோ அல்லது பொய் சொல்கிறார் எனில் அவரது செல்ஃபோன் அழைப்புகளை ஆடியோ ரெக்கார்ட் கருவியை பயன்படுத்தி அவரின் செயல்பாடுகளை அவருக்கே தெரியாமல் டிராக்கிங் செய்வது சரியா..? இதற்கு உங்கள் கருத்து என்ன?

பதில் : உங்கள் துணையிடம் இது போன்ற செயல்களை செய்ய நினைக்கிறீர்கள் எனில் அது துணை மீதான நம்பிக்கையை இழந்ததற்காக அர்த்தமாகும். அவர் உங்களிடம் பொய் கூறுகிறார், நேர்மையான பேச்சு இல்லை என உணர்கிறீர்கள் எனில் அந்த உறவில் நீடிப்பது குறித்துதான் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

வாழ்க்கையில் நம்பிக்கைதான் எந்த உறவுக்கும் ஆணிவேராக இருக்கிறது. காதலித்தாலும் சரி..ஏன் திருமணமானாலும் சரி உங்களுக்கான பிரைவசியை வகுத்துக்கொள்வது உரிமையாகும். ஒரு மனிதரின் சுந்தந்திரத்தை யாராலும் பறிக்கவோ , கொடுக்கவோ முடியாது. ஆனால் அந்த தனிப்பட்ட விஷயங்களில் உங்கள் உறவுக்கே களங்கம் வரும் செயல்களை செய்கிறார்கள் எனில் அது தவறான செயல். நீங்கள் அவரின் தவறுகளைக் கண்டறிய முயற்சி செய்வதைக் காட்டிலும் உறவிலிருந்து விலகுவதே மரியாதையாக இருக்கும். அதை அவர்களுடைய சுதந்திரமாக பார்க்கிறார்கள் எனில் அதில் தலையிடாமல் அவர்களில் போக்கில் விட்டுவிடுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் விலகிவிடுங்கள்.



பொதுவாக ஒருவரின் செயல்பாடுகளை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுப்பதோ, ஆடியோவை ரெக்கார்ட் செய்வதோ சட்டப்படி குற்றமாகும். எனவே அவரை டிராக்கிங் செய்து உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தேவையற்ற வேலைகளை செய்து உங்கள் நேரத்தை வீண் செலவு செய்யாதீர்கள். நீங்கள் சந்தேகிக்கும் விஷயத்தை நேரடியாகவும், வெளிப்படையாகவும் அணுகுவதே நல்லது. அவர் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதை அவரிடமே வெளிப்படையாக பேசுங்கள்.

படுக்கையில் உங்கள் துணை சோம்பேறியாக இருக்கிறாரா..? சுயநலமாக இருக்கிறாரா..? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!

அவர் நேர்மையாக நடந்துகொள்கிறார் எனில் உங்களுக்கு அவர் மீதான நம்பிக்கையையும், உறவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அவருடைய கடமையாகும். ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் வீடியோ , ஆடியோ டிராக்கிங்கை ஒருமுறை அல்லது இரு முறை செய்யலாம். ஆனால் எப்போதும் அதை செய்ய இயலாது. அது நல்ல உறவுக்கு அழகும் அல்ல. அது சாத்தியமும் அல்ல. எனவே முதிர்ச்சியான காரியம் செய்வதானால் அவர் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் விஷயங்களை செய்யுங்கள். அதை விடுத்து அவரை உலவு பார்க்கும் தவறான விஷயங்களை செய்யாதீர்கள்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: