திருமணமான பின்பும் மற்ற பெண்கள் மீது பாலியல் ஈர்ப்பு உண்டாவது தவறா..?

மாதிரி படம்

உடலுறவு கொள்ள ஆசை வருவது இயல்பானது, இயற்கையானது. எனவே அப்படியான எண்ணங்களில் எந்த தவறும் இல்லை.

  • Share this:
கேள்வி : என் துணையுடன் மனதளவிலும் , உணர்ச்சியளவிலும் இணைய முடிகிறது. ஆனால் உடலளவில் இணைய முடியவில்லை. இதனால் எனக்கு மற்ற பெண்கள் மீது பாலியல் ஈர்ப்பு உண்டாகிறது. இது இயற்கையானதா அல்லது தவறானதா..?

பதில் : உடலுறவு கொள்ள ஆசை வருவது இயல்பானது, இயற்கையானது. எனவே அப்படியான எண்ணங்களில் எந்த தவறும் இல்லை. ஏன் பரஸ்பர நம்பிக்கை, ஈர்ப்பு, அதீத காதல், உடலுறவு நெருக்கம் இருப்பவர்களுக்குக் கூட மற்றவர்கள் மீது ஈர்ப்பு வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் அது உங்கள் உறவில் வெளிப்படையாகவும், துணையின் சம்மதத்துடனும் இருக்க வேண்டும். இருவரின் விருப்பம் இருப்பின் அதில் தவறொன்றும் இல்லை.

ஒருவேளை உங்கள் துணை அவர்களுக்கானவராக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறார்..அவர் உங்களை பரஸ்பரமாக நம்புகிறார் எனில் மறைத்து செய்தால் அது தவறானது. அதேபோல் மற்றவர்களைப் பார்த்தால் பாலியல் ஆசை தூண்டுகிறது , அது வெறும் எண்ணங்களாக மட்டும் இருக்கிறது...கற்பனைகளாக இருக்கிறது எனில் அது மனிதனில் அடிப்படை உணர்வு. அதில் தவறில்லை. அதனால் குற்ற உணர்ச்சியாக நினைப்பதும் வேண்டாம்.அதேபோல் உங்கள் துணையுடன் நீங்கள் உடலுறவு கொள்ளாமல் இருப்பதால்தான் அப்படியான உணர்வு தோன்றுகிறது என்று சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது இயல்பாகவே வரக்கூடிய ஆசைதான். ஒருவேளை உங்கள் ஆசையை துணையிடம் வெளிப்படுத்த முடியாத விரக்தியினால் இருக்கலாம். அவருடன் உடலுறவு கொள்ள விருப்பம் எனில் வெளிப்படையாக கலந்துரையாடுங்கள்.

நிறைய தம்பதிகள் ஹனிமூன் என்கிற காலகட்டத்தில்தான் உடலுறவின் உட்சபட்ச இன்பங்களை அனுபவிக்கிறார்கள். திரும்பி வந்ததும் இயல்பு வாழ்க்கைக்கு செல்கின்றனர். அதில் வேலை, பிசியான வேலை திட்டகள், பொருளாதார நிலைகளை கவனித்தல், உடல்நலன் சார்ந்த அழுத்தம், வேலை அழுத்தம் போன்ற பல காரணங்களால் அவர்களுடைய உடலுறவு வாழ்க்கை அப்படியே ஆட்டம் கண்டுவிடுகிறது. ஆனால் நீங்கள் துணையுடன் உடலுறவு கொள்ள முடியவில்லை என்ற ஏக்கத்துடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாலியல் ரீதியாக உங்கள் துணையுடன் நீங்கள் விலகி இருக்க என்ன காரணம் என்பதை யோசித்ததுண்டா.. அல்லது இது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவா..?

பெண்களை தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறீர்களா..? அதை மாற்ற உங்களுக்கான ஆலோசனை

உடலுறவு என்பதும் ஒருவகையான உறவுகளைப் போன்றதுதான். அதற்கு இணைப்பு, பிடிப்பு இரண்டுமே அவசியம். உடலுறவு என்பது அதிகபட்சமாக சொல்லப்போனால் வெறும் உடல் நெருக்கம் மட்டும்தான். அந்த நெருக்கம் உங்கள் துணை மீது இல்லாததால் அருகில் இருந்தும் தொட முடியாத அழுத்தத்தின் காரணமாகக் கூட இவ்வாறு தோன்றலாம். முதலில் உங்கள் துணை மீது காதலை அதிகரியுங்கள். காதல் வார்த்தைகளை அவரிடம் கூறுங்கள். பின் உடலுறவு குறித்த அர்த்தங்களில் இரண்டை அர்த்தத்தில் பேசி அவருக்கும் பாலியல் உணர்ச்சியை தூண்டுங்கள். இந்த விஷயங்கள் இருவருக்குள்ளும் உடலுறவு ஆசையை தூண்டி படுக்கை அறை வரை அழைத்துச்செல்லும்.தம்பதிகள் பாலினத்தின் ஒரே குறிக்கோளாக புணர்ச்சியில் அதாவது விந்துதள்ளுதலில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பல இன்பங்களை இழக்கின்றனர். எனவே உங்கள் இன்பத்தை பிறப்புறுப்பு புணர்ச்சியுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்.. , உடல் இன்பத்தில் கவனம் செலுத்துங்கள்..உடலுறவு விஷயங்களை பேசுங்கள்...விளையாட்டுத்தனமான பாலியல் நெருக்கத்தை ஏற்படுத்துங்கள்.அனைத்து இன்பங்களை அடைந்த பிறகு புணர்ச்சிக்கு செல்லுங்கள்.

இறுதியாக... நீங்கள் ஒருவேளை துணையுடன் பாலியல் ரீதியாக இணைந்திருந்தாலும் இந்த எண்ணம் ஏற்படலாம். அதேபோல் இதற்கு துணையுடன் உறவுகொள்வது தீர்வும் அல்ல. விரக்தியில் இருக்கும் உங்கள் மனதிற்கான ஆறுதல்தான் துணையுடனான உடலுறவை மேற்கொள்ள பரிந்துரைக்கிறேன்...இதற்கு சிகிச்சைகளோ, ஆலோசனைகளோ தேவையில்லை. இது மனித இயல்பு, இயற்கை..எனவே இது உங்கள் தவறோ..துணையின் தவறோ..அல்லது இதுவரை நீங்கள் உடலுறவுகொள்ளாததோ தவறு அல்ல...எனவே புரிந்துகொள்ளுங்கள்..! மனக்குழப்பம் தேவையில்லை...

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: